உள்ளடக்கத்துக்குச் செல்

கலித்தளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலித்தளை என்பது பண்டைய தமிழ்ப் பாடல்களில் ஒன்றான கலிப்பாவில் மிகுதியாகப் பயின்றுவரும் தளை. இது வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை என்னும் நான்கு வகைத் தளைகளில் ஒன்று. கலித்தளையானது அருவிநீர் கலிப்பது [1] போல ஓசை துள்ளி நடக்கும். [2]

எடுத்துக்காட்டு[தொகு]

ஏந்திசைத் துள்ளல்
முருகவிழ்தா மரைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே
வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்
இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியையரியா
நிருமலரா யறிவினராய் நிலவுவர்சோ தியினிடையே.'[3] [4]
 • இந்தப் பாடலில் 'கருவிளங்காய்' என்னும் வாய்பாட்டில் முடியும் வாய்பாட்டுக் காய்ச்சீர் முன் 'நிரை' வந்து தளைந்து நிற்பதால் துள்ளும் ஓசை பெற்றுக் கலித்தளை ஆயிற்று.
 • அடியோடு அடி தளையும்போதும் கலித்தளை [5]
அகவல் துள்ளல்
செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் முடிமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் இயன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்த்தே [6] [7]
 • இது வெண்சீர் வெண்டளையும், கலித்தளையும் விரவி வந்தமையான் அகவல் துள்ளலோசை
 • அடியோடு அடி புணரும்போது வெண்சீர் வெண்டளை [8]

அடிக்குறிப்பு[தொகு]

 1. துள்ளிப் குதிப்பது
 2. 'துள்ளல் ஓசை கலி' என மொழிப (தொல்காப்பியம் 2-388)
 3. முருகு அவிழ் தாமரை மலர் மேல் முடி இமையோர் புடை வரவே
  வரு சினனார் தரு மறைநூல் வழி பிழையா மனமுடையார்
  இருவினை போய் விழ முனியா எதிரிய காதியை அரியா
  நிருமலராய் அறிவினராய் நிலவுவர் சோதியினிடையே.'
 4. யாப்பருங்கலக் காரிகை 22 உரை மேற்கோள்
 5. புடைவரவே வருசினத்தார் - கருவிளங்காய் முன் நிரை
 6. செல்வப் போர்க் கதக் கண்ணன் செயிர்த்து எறிந்த சின ஆழி
  முல்லைத் தார் முடி மன்னர் முடித் தலையை முருக்கிப் போய்
  எல்லை நீர் இயல் கொண்மூ இடை நுழையும் மதியம் போல்
  மல்லல் ஓங்கு எழில் யானை மருமம் பாய்ந்து ஒளித்த்தே
 7. யாப்பருங்கலக் காரிகை 11 உரை மேற்கோள்
 8. சினவாழி முல்லைத்தார - புளிமாங்காய் முன் நேர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலித்தளை&oldid=1484023" இலிருந்து மீள்விக்கப்பட்டது