வெண்முகிலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண்முகிலன்
பிறப்பு வேங்கடேசசன்
சூலை 15, 1936 (1936-07-15) (அகவை 84)
நரசிங்கபுரம் மின்னல், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
தொழில் எழுத்தாளர்
ஆசிரியர்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
புதுவை தமிழ் இலக்கிய மன்றம் விருது (2002),பாவேந்தர் விருது, தமிழ்தோன்றல் விருது
பெற்றோர் அய்யாதுரை , பச்சையம்மாள்

வெண்முகிலன் தமிழக எழுத்தாளர் ஆவார்.

கல்வியும் கனவும்[தொகு]

வேலூர் மாவட்டம் ,அரக்கோனம் வட்டம் நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், மின்னல் ஊராட்சி ஒன்றிய உயர் தொடக்கப் பள்ளியில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு கற்று தேர்ந்தார். இனி, தான் நினைத்தது போல் கல்வியில் தன்னை நிலைநிறுத்தி, ஒரு ஆசிரியருக்கான படிப்பும் பயிற்சியும் பெற்று ஆசிரியராகி என் குடும்பத்தைக் பேணிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

இளமையும் வறுமையும்[தொகு]

குடும்பத்தின் வறுமை சூழ்நிலை, கற்கும் கல்விக்குக் கூட தடையை ஏற்படித்தியது. எனவே கல்வியை ஒதுக்கிக் குடும்பத் தொழிலான நெசவுத் தொலையாவது செய்து முன்னேறலாம் என்று எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தார். அந்த நெசவுத் தொழிலையும் செய்ய முடியா நிலை ஏற்பட்டது. வறுமை காரணமாக என்ன பணி செய்வது என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், துங்கபத்ரா நதியில் அணை கட்டுகின்ற ஒப்பந்ததாரர் பணியில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. குல்லை சுமந்து சென்றபோது கால் இடறி, அப்பெருங்கல் இடக்காலில் விழுந்து நரம்பு துண்டாகிக் குருதி கொட்டியது.

பிணியும் திருப்புமுனையும்[தொகு]

காலில் பலத்த காயம் ஏற்பட்டு, பத்து மாதம் மருத்துவமனையில் போராட வேண்டிய கட்டாயம். இனி இடக்காலால் நடக்க இயலாது என்று எண்ணித் தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில், இவருக்கு அருகில் இருந்த இன்னொரு சகநோயாளி ஒரு புத்தகத்தை இவருக்கு கொடுக்க, அந்த புத்தகம்தான் இவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையப் போகிறது என்பதை உணராமல், அதை வாங்கிப்படித்தார். அந்த புத்தகம் இவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. விடாதமுயற்சியை ஏற்படுத்தியது, எழுந்து நிற்க வைத்தது. ஆந்த புத்தகத்தின் பெயர் ""வெற்றி என் கைகளிலே"". இந்த புத்தகத்தை எழுதியவர் முதல் உலகப்போரில் காலை இழந்தவர் எழுதியுள்ளார்.

ஏமாற்றிய வித்துவான் பட்டம்[தொகு]

வெற்றி என் கைகளிலே என்ற புத்தகம் அளித்த தன்னம்பிக்கையால் தனது இலட்சியப் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். திருப்பனந்தாள் கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்து வித்வான் பட்டம் பெற்றார். இனி, தன் வாழ்வில் வசந்தம் வீசி விடும் என்றெண்ணினார். ஆனால், நான்கு ஆண்டுகள் கற்றுத் தேர்ந்த வித்துவான் பட்டமும் இவருக்கு வேலையைப் பெற்றுத்தராமல் கைவிட்டது. வீட்டை வெளியேறினார், வேலைக்காக தேடித் தேடி அலைந்த இடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சென்னை மாநகரின் வீதிகளில் இவரது கால் தடம் பதியாத இடங்களே இல்லை. சோர்ந்து போய் ஒரு கட்டத்தில், உண்ண உணவும் இருக்க இடமும் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல தொடங்கினார். திருவள்ளூர் உயர்நிலைப் பள்ளி அருகே பசியால் மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர் உணவளிக்க, வீடு திரும்பினார்.

நெசவுத் தொழிலிருந்து, கனவுப் பணிக்கு[தொகு]

புத்தூர் சென்று தனக்குத் தெரிந்த வேலையான, நெசவுத் தொழிலைச் செய்து சிறுகச் சிறுகப் பணம் சேர்த்துத் தனது இலட்சியக் கனவை அடைந்திட மீண்டும் சென்னை நோக்கிப் பயணித்தார். தமிழாசிரியர் கண்ணபிரான் அவர்களின் வழிகாட்டுதல்படி அம்பத்தூர் இராமசாமி முதலியார் பள்ளியில் 4 ஆண்டுகள் பணியாற்றுகின்ற வாய்ப்புக் கிடைத்தது, அதன்பின் மாநகராட்சி பணி செய்யும் ஆணை பெற்றார். 1964 ல் புரசைவாக்கம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், 1968 ல் சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், 1975 முதல் 1995 வரை பெரம்பூர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றித் தன்னுடைய கனவை நனவாக்கிக் கல்வித் துறையில் சாதனை சகாப்தமாக இன்றளவும் போற்றப்படுகிறார்.

மனிதநேயம்[தொகு]

இவர் பணியாற்றுகின்ற காலத்தில் தன்னால் கல்வி கற்க முடியாமல் பல போராட்டங்களை சந்தித்ததால், தனது மாணவர்கள் எந்தநிலையிலும் அதுபோன்ற சூழலை அனுபவித்துவிடக் கூடாது என்பதற்காக பல மாணவர்களுக்கு கல்வி உதவிகளை செய்துள்ளார். ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காகவும், அவகளின் நல்வாழ்விற்காகவும் திருத்தணியில் அமைந்துள்ள மங்கலங்கிழார் சிறுவர் காப்பகத்தை நடத்திட இன்றுவரை பொருளதவி அளித்துவருகின்றார்.

இலக்கியப் பணி[தொகு]

தன்னுடை வாழ்க்கை களத்திலேயே போராட வேண்டிய சூழலிலும் மனதை ஒருநிலைப்படுத்த தமிழன்னைக்குத் தொண்டாற்றிட கவி படைக்கும் ஆற்றலை மெருகேற்றிப் பொருளாதாரத்தில் போராடுகின்ற காலத்திலேயே நூல்களை எழுத ஆரம்பித்து இன்று 28 க்கும் மேலான நூல்களை படைத்து இலக்கிய துறையில் ஈடில்லாத் தொண்டினைத் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டும் வகையில் இன்றளவும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். தமிழ் மீது கொண்ட தீரா பற்றால் நூல்கள் பல புனைந்தார். மாணவர்களும், இளைஞர்களும் நல்வாழ்வு வாழ நன்நெறிகளை மையமாக கொண்டு எழுதினார். இவரின் அனைத்து படைப்புகளிளும் திருகுறளை மேற்கோளாக அமைத்தே எழுதுவருகிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது 80 அகவையிலும் எழுதிவருகின்றார்.

அணிந்துரை வழங்கியுள்ள தமிழறிர்கள்[தொகு]

 • முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் "மனவிலங்கு" நூலுக்காக
 • கல்வியமைச்சர் பேராசிறியர் க.அன்பழகன் அவர்கள் "மனவிலங்கு" நூலுக்காக
 • எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தாளாளர் பச்சைமுத்து அவர்கள் "மனவிலங்கு" நூலுக்காக
 • பெருங்கவிக்கோ முனைவர் வா.மு. சேதுராமன் அவர்கள் "மனவிலங்கு" நூலுக்காக
 • கவிஞர் முனைவர் வி.மு.உலகநாதன் அவர்கள்
 • முனைவர் பு.மு. கங்காதரன் அவர்கள்
 • புலவர் ப.கி. பொன்னுசாமி, ஆசிரியர் நித்திலக் குவியல்
 • கவிஞர் தஞ்சை மயிலரசன் அவர்கள்
 • கவிக்கோ.துரை. வசந்தராசன் அவர்கள்
 • முனைவர் கோதண்டராமன் (பொற்கோ) சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர்

பரிசும் பாராட்டும்[தொகு]

 • 2002 புதுவை தமிழ் இலக்கிய மன்றம் அறிவெனும் கருவி எனும் நூலுக்கு கல்வி அமைச்சர் முதல் பரிசு அளித்துள்ளார்
 • பண்ணைத் தமிழ்ச் சங்கத்தின் பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.
 • மங்கலங்கிழார் தமிழ் இலக்கிய மன்ற விருது.
 • திருவள்ளூர் தவச்சாலை நிறுவனத்தின் விளங்கிய அறிவர் விருது.
 • திருவள்ளூர் பச்சையப்பனாரின் கல்விக்காவலர் காமராசர் விருது.
 • தாய் மண் தமிழ் இலக்கிய மன்றத்தின் புலமைச் சிகரம் விருது.
 • இலக்கியச் சோலை திங்களிதழின் தமிழ்தோன்றல் விருது
 • காந்தி காமராசர் இலக்கிய அமைப்பின் மனித நேய முரசு விருது.
 • தமிழ் இலக்கிய ஆர்வலர் பேரவையின் தேசியகவி பாரதி விருது.

வெண்முகிலன் காவிங்களில் மானுடம்[தொகு]

பேராசிரியர் கவிஞர் கவியன்பன் அவர்கள், வெண்முகிலன் அவர்களின் மனவிலங்கு, அகப்பையை வெல்ல ஓர் அறிவாலயம் என்ற இரண்டு நூல்களையும் வெண்முகிலன் காவிங்களில் மானுடம் எனும் தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளுள்ளார்.

படைப்புகள்[தொகு]

கவிதை நூல்கள்

 1. மனவிலங்கு
 2. அகப்பையை வெல்ல ஓர் அறிவாயுதம்
 3. நிமிர்ந்து நில் துணிந்து முன்னேறு

புதினங்கள்

 1. அணையா நெருப்பு
 2. வேர்ச்செல்
 3. கனிமொழி
 4. மனக்கோணல்
 5. பாசச்சூழல்

இளைஞர்க்குரியவை

 1. துடைக்கற்களா படிக்கற்களா
 2. பத்துப்படிகள்
 3. ஏற்றம் தரும் எண்ணங்கள்
 4. வளம்தரும் வற்றாத செல்வங்கள்
 5. உயர்ந்தவை ஒன்பது
 6. உள்ளத்தனையது உயர்வு
 7. அன்பெனும் அணிகலன்
 8. தலைக்குப் பெருமை
 9. ஏன் இன்னும் சோம்பல்
 10. அறிவெனும் கருவி
 11. மனமெனும் கருவூலம்
 12. ஊக்கமெனும் உடைமை
 13. மனிதப் பதர்கள்
 14. மங்கலங்கிழார் அறிவுத்திருக்கோயில்
 15. நானொரு மாணாக்கன்
 16. வாழும் மனிதர்
 17. மாண்புறு மனிதநேயர் மங்கலங்கிலார்
 18. எண்ணங்களால் விண்ணைத்தொடு.

மேற்கோள்கள்[தொகு]

வெண்முகிலன் முத்துவிழா மலர் நாள் 05/02/2017 ஆசிரியரின் படைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்முகிலன்&oldid=2641257" இருந்து மீள்விக்கப்பட்டது