வெடிமருந்து சதித்திட்டம்
Appearance
17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சதித்திட்டம் குறித்த அறிக்கை. | |
விவரங்கள் | |
---|---|
பங்குபெற்றோர் | இராபர்ட்டு கேட்சுபி, ஜான் ரைட்டு, தாமசு வின்டூர், தாமசு பெர்சி, கை பாக்சு, இராபர்ட்டு கீசு, தாமசு பேட்சு, இராபர்ட்டு வின்டூர், கிறிஸ்தோபர் ரைட்டு, ஜான் கிரான்ட்டு, அம்புரோசு ரூக்வுட், சேர் எவரார்டு டிக்பி, பிரான்சிசு திரெசாம் |
அமைவிடம் | இலண்டன், இங்கிலாந்து |
நாள் | நவம்பர் 5, 1605 |
முடிவு | தோல்வி, சதியாளர்கள் தண்டனை பெற்றனர் (குதிரையால் இழுத்துவந்து, தூக்கிலிடப்பட்டு நான்காக துண்டாடப்பட்டனர்) |
1605ஆம் ஆண்டு வெடிமருந்து சதித்திட்டம் (Gunpowder Conspiracy) இங்கிலாந்து, இசுக்காட்லாந்து மன்னராட்சிகளின் அரசரான இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மற்றும் இசுக்காட்லாந்தின் ஆறாம் ஜேம்சைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதியாகும். இது வெடிமருந்து தேசத்துரோகம் (The Powder Treason) எனவும் அழைக்கப்படுகின்றது.[1] கத்தோலிக்க குழுவொன்று நாடாளுமன்றக் கூட்டத்தின் முதல்நாள் நவம்பர் 5, 1605 அன்று இரண்டு அவைகளும் கூடும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை வெடிவைத்துத் தகர்க்கத் திட்டமிட்டனர். இது நிறைவேறியிருந்தால் அரசரும் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த பல பிரபுக்களும் கொல்லப்பட்டிருப்பர்.
சதியாளர்கள் அரசக் குழந்தைகளைக் கடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.[2] இங்கிலாந்தின் நடுநிலங்களில் பரவலான புரட்சியை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Antonia Fraser, The Gunpowder Plot: Terror and Faith in 1605, London, 2002, Author's Note, pg. xv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7538-1401-3
- ↑ Alice Hogge (2005), God's Secret Agents: Queen Elizabeth's Forbidden Priests and the Hatching of the Gunpowder Plot HarperCollins p.344