வூடின் உலோகம்
வூடின் உலோகம் (Wood's metal) அல்லது சிரோபெண்ட் (Cerrobend) என்பது எளிதில் உருகும் ஒரு கலப்புலோகம் ஆகும். இக்கலப்புலோகத்தில் 50% பிசுமத், 26.7% ஈயம், 13.3 % வெள்ளீயம், 10% காட்மியம் ஆகியன உள்ளன..[1].
இக்கலப்புலோகம் முதன் முதலில் 1860 ஆம் ஆண்டில் பர்னாபசு வூட் (Barnabas Wood) என்பவரால் முதன் முதலில் பரிந்துரைக்கப்பட்டது. அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் டபிள்யு. வூட் (Robert W. Wood (1868–1955) என்பவர் இதனைப் பயன்படுத்தினார். இதனால் இக்கலப்புலோகம் வூடின் உலோகம் (Wood's metal) என வழங்கப்படுகிறது. லிப்போவிட்சின் கலப்புலோகம் (Lipowitz's alloy) எனவும் வணிகரீதியில் Cerrobend, Bendalloy, Pewtalloy, MCP 158 எனவும் இது அழைக்கப்படுகிறது.
கதிர்மருத்துவத்தில் தனி நோயாளிகளுக்கான காப்புக் கட்டிகளை (Shielding block) உருவாக்க இக்கலப்புலோகம் பயன்படுகிறது. இதன் அடர்த்தி 9.4 கிராம்|கன சென்டி மீட்டர். ஆனால் இதன் உருகுநிலை 70 °C ஆகும். ஈயத்திற்கு அடர்த்தி 11.3 கிராம்\கனசென்டி மீட்டர். உருகு நிலை 327 °C எனவே இதனை எளிதில் உருக்கி தேவையான காப்புக் கட்டிகளை, போதுமான அளவிலும் வடிவிலும் கனத்திலும் பெறமுடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gardner's Chemical Synonyms and Trade Names". யோன் வில்லி அன் சன்ஸ். Archived from the original on 2013-02-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.