வீர் சிங் மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீர் சிங் மேத்தா (Veer Singh Mehta) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். 1949 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தனது கல்வி மற்றும் பயிற்சியை செய்ப்பூரிலுள்ள சவாய் மான் சிங் மருத்துவக் கல்லூரியிலும் பின்னர் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திலும் பெற்ற்றார். இந்தியாவில் மூச்சுக்குழாய் நரம்புப் பின்னல் காயங்களுக்கான அறுவை சிகிச்சையில் வீர் சிங் மேத்தா முன்னோடி மருத்துவராக உள்ளார்.[1] தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் செயல்படுகிறார். நரம்பியல் சங்கத்தின் தலைவராகவும் தெற்காசிய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தலைவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூளை தண்டு அறுவை சிகிச்சை, மூச்சுக்குழாய் நரம்புப் பின்னல் அறுவை சிகிச்சை, இரத்தத் தமனி விரிவு சிகிச்சை, மற்றும் முதுகெலும்பு கட்டி அறுவை சிகிச்சை ஆகிய துறைகளில் இவர் செய்த பணிக்காக உலகம் முழுவதும் பிரபலமானார். இந்தியாவில் நன்கு அறியப்பட்ட மூளைக் கட்டி அறுவை சிகிச்சை நிபுணரான இவர் மூளைக் கோளாறுகளுக்காக உலகம் முழுவதும் உள்ள ஏராளமான இந்திய மற்றும் பன்னாட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இவருடைய மருத்துவ சேவைக்காக இந்திய அரசு 2005 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது.[2] பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான பி.கே. மிசுரா தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் இவருக்கு இளையவராக இருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் March 19, 2016.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  3. "Basant Kumar Misra, President NSI 2008" (PDF). Neurological Society of India. Archived (PDF) from the original on 2020-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர்_சிங்_மேத்தா&oldid=3781782" இலிருந்து மீள்விக்கப்பட்டது