வீர் குன்வர் சிங் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீர் குன்வர் சிங் அருங்காட்சியகம் (Veer Kunwar Singh Museum) கிழக்கு இந்தியாவில் பீகார் மாநிலத்தின் போச்பூர் மாவட்டத்தில் உள்ளது. அர்ரா நகரத்திற்கு அருகிலுள்ள சகதீசுபூரில் இந்த அருங்காட்சியம் அமைந்துள்ளது. 1857 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த சுதந்திரப் போராட்ட வீரர் குன்வர் சிங்கின் நினைவாக அருங்காட்சியகத்திற்கு இப்பெயரிடப்பட்டது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய கலைப்பொருட்களின் நல்ல தொகுப்பு இங்கு இடம்பெற்றுள்ளது.[1][2]

வரலாறு[தொகு]

1972 ஆம் ஆண்டு வீர் குன்வர் சிங்கின் இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதன் மூலம் வீர் குன்வர் சிங் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.[3] பீகார் மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் முழுவதுமே இந்த மாநிலங்களில் எந்த அருங்காட்சியகமும் இல்லாததால், சுதந்திரப் போராட்டத்தின் பெருமையை வளமான சேகரிப்புகளுடன் எடுத்துரைக்க இந்த அருங்காட்சியகம் முழுக்க முழுக்க அர்ப்பணிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]