வீணா சாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீணா சாகி (Veena Shahi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் வைசாலியில் ஐக்கிய சனதா தளம் கட்சியின் பிரிசின் பட்டேலை தோற்கடித்தார். மூன்றாவது ராப்ரி தேவி அமைச்சரவையில் கூட்டுறவு அமைச்சராகவும் இருந்தார். முதுபெரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் இலலிதேசுர் பிரசாத் சாகியின் மகன் ஏமந்து குமார் சாகியின் மனைவியாவார். [1]

வீணா சாகி 1953 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று மறைந்த மகந்த் ரகுநாத் தாசு மற்றும் மறைந்த சரசுவதி தேவியின் மூத்த மகளாக சீதாமர்கியின் மகந்து குடும்பத்தில் இந்தியாவின் சீதாமர்கியில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை பாட்னாவில் உள்ள மவுண்ட் கார்மல் பள்ளியில் முடித்தார், அங்கு இவர் கல்வி மற்றும் கல்வி சாராத செயல்பாடுகள் இரண்டிலும் சிறந்து விளங்கினார். பின்னர் பாட்னா மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளநிலை ஆனர்சு பட்டம் பெற்றார்.

வீணா சாகி 1977 ஆம் ஆண்டில் காங்கிரசு தலைவர் மறைந்த லலிதேசுவர் பிரசாத் சாகியின் மகன் ஏமந்து சாகியை திருமணம் செய்து கொண்டார். இந்த இணை 1982 ஆம் ஆண்டில் ல் ஒரு வெற்றிகரமான பேருந்து நிறுவனத்தைத் தொடங்கினர். பீகாரில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் மாறியது,

மார்ச் 1992 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் வீணா சாகியின் கணவர் ஏமந்து படுகொலை செய்யப்பட்டார். 2000 ஆம் ஆண்டில், வீணா சாகி பீகாரில் உள்ள வைசாலி தொகுதியில் காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2000 ஆம் ஆண்டிலும் பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில், வீணா சாகி மீண்டும் பீகார் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வீணா சாகிக்கு விதிசா சாகி என்ற மகள் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணா_சாகி&oldid=3831952" இருந்து மீள்விக்கப்பட்டது