உள்ளடக்கத்துக்குச் செல்

வி. டி. இராசசேகர் செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. டி. இராசசேகர் செட்டி (Vontibettu Thimmappa Rajshekar or V. T. Rajshekar Shetty) இதழாளர், எழுத்தாளர், நூலாசிரியர் எனப் பல தகுதிகள் கொண்டவர்[1]. இந்தியன் எக்சுபிரசு ஆங்கில செய்தித்தாள் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் ஓர் இதழாளராகப் பணி புரிந்தார்[2]. மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள தேசிய செய்தித்தாள்கள் சிலவற்றிலும் வேலை செய்தார். இவர் பகுத்தறிவாளராகவும் முற்போக்குக் கருத்தாளராகவும் தலித் இன மக்களுக்குப் பாடுபடுபவராகவும் கருதப்படுகிறார்.

செயற்பாடு[தொகு]

1981 ஆம் ஆண்டில் தலித் வாய்ஸ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்[2][3]. அயல்நாடுகளில் இந்து மத எதிர்ப்புக் கருத்துக்களைப் பரப்பினார் என்று இவருடைய கடவுப் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. இரு வேறு மக்கள் குழுக்களிடையே பகைமை உணர்ச்சியைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டார். தேச விரோத சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

விமர்சனம்[தொகு]

தலித் குரல் இட்லர் மற்றும் நாட்சி ஜெர்மனி பற்றிய 'சீயோனியர்களின் சதித்திட்டம்' என்பதை வெளியிட்டது.[4][5] இவர்கள் ஈரான் அரசாங்கத்திற்கு ஆதரவும் மகுமூத் அகமதிநெச்சாத்தின் பெரும் இன அழிப்பு மறுதலிப்புக்குக் கருத்துக்கு ஆதரவும் வழங்குகின்றனர்.[6]

இவர் உயர் சாதியைச் சேர்ந்தவராயிருப்பதால் இவருடைய தலித் விடய அக்கறை கேள்விக்குரியாகியது.[7]

பொறுப்புகள்[தொகு]

கருநாடக பகுத்தறிவாளர் கழகத்தில் பொதுச் செயலராகவும், இந்திய சீன நட்புறவுக் கழக அமைப்பாளராகவும், பெங்களுரு துளு கூடத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.

நூலாசிரியராக[தொகு]

கருநாடகத்தில் தலித் இயக்கம், இந்து இந்தியாவில் மார்க்சு தோற்றது எவ்வாறு?, மதக் கலவரப் பின்னணிச் சதி, இந்தியாவின் யூதர்கள், பிராமணியம், தலித்துகள் கருப்புத் தீண்டத்தகாதவர்கள் என்பன போன்ற 25 நூல்கள் எழுதியுள்ளார்.

விருது[தொகு]

2005 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள தென்னாசிய நிறுவனம் இவருக்குப் புத்தக விருதை வழங்கிக் கௌரவித்தது[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rawat, V. B. (2006). "Reservation Debate: A Great Opportunity To Restrengthen Dalit Bahujan Alliance". Counter Currents இம் மூலத்தில் இருந்து 15 May 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060515211958/http://www.countercurrents.org/dalit-rawat080506.htm. 
  2. 2.0 2.1 Human Rights Watch Article. Hrw.org. Retrieved on 2011-07-07.
  3. Dalit Voice About Us. Dalitvoice.org. Retrieved on 2011-07-07.
  4. dalitvoice.org. dalitvoice.org. Retrieved on 2011-07-07.
  5. "Dalitvoice article". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2016-02-06. See "Abuse of History" Hitler not worst villain of 20th century as painted by "Zionists"
  6. Defeat in Iraq & fall of Bush: India warned to quickly adjust to big changes in West Dalit Voice Article
  7. Dalit Voice Vol 24, No. 15 see "'Socialist Brahmin' calls DV casteist" and "Editor answerable only to DV family, not prostitutes of vaidiks". Dalitvoice.org (2005-06-16). Retrieved on 2011-07-07
  8. "Award for book on Dalits". The Hindu. 8 October 2012 இம் மூலத்தில் இருந்து 18 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/award-for-book-on-dalits/article3976397.ece. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._டி._இராசசேகர்_செட்டி&oldid=3591874" இலிருந்து மீள்விக்கப்பட்டது