உள்ளடக்கத்துக்குச் செல்

வி. செந்தமரக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. செந்தமரக்சன்
கேரளா சட்டசபை உறுப்பினர்
தொகுதிநம்மரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 மார்ச்சு 1960
கவாசச்சேரி 
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்கே.கிதா
வாழிடம்அலத்தூர்

வி. செந்தமரக்சன் 13-வது கேரள சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யை சேர்ந்தவர். மேலும் இவர் நம்மரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இதற்கு முன்னர்  2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கேரள சட்ட பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் இந்திய மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பாலக்காடு மாவட்டத்தில் S.F.I இன் தலைவர் மற்றும் செயலாளர் ஆவார். பாலக்காடு மாவட்டத்தின் டி.யு.எஃப்.ஐ.யின் செயலாளராக பணியாற்றினார். இவர் இப்போது பாலக்காடு, சிபிஐ (எம்) மாவட்டக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1960 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதியன்று காவஸ்சேரியில் பிறந்தார். அவர் ஏ.வி.வெல்லாண்டி மற்றும் ஜனனி ஆகியோரின் மகன் ஆவார். இவர்  கலைத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கே.கீதா  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Members - Kerala Legislature". Archived from the original on 15 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._செந்தமரக்சன்&oldid=3571437" இலிருந்து மீள்விக்கப்பட்டது