விஸ்வகர்மா (சாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஸ்வகர்மா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கம்மாளர், கம்சாலா,

விஸ்வகர்மா என்ற சமூகத்தைச் சேர்ந்த இம்மக்களை, கருமார், கன்னார், தச்சர், தட்டார் என்றும், மேலும் கம்மாளர்,கம்சாலா பத்தர், ஆசாரி, ஆச்சாரியார் என்றும் கூறுவர். சரியாகச் சொல்வதென்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள்.

இரும்புத்தொழில் - கொல்லர் ( கிராமத்துக் கருமான்), தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, பாத்திரவேலை - கன்னார் என ஐந்தொழில்கள் செய்த ஆதிச் சமூகமாக விஸ்வகர்மாக்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.[சான்று தேவை] தொழில் அடிப்படையில்தான் இந்த உட்பிரிவுப் பெயர்கள் வந்தன. மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் பெரிய; கர்மா என்றால் செயல்; தொழில் அல்லது வினை என்று பொருள்.[சான்று தேவை] சங்க காலத்தில் இந்த சமூகத்தினர் ஒரு நாளில் எட்டுத் தேர்களைச் செய்துவிடும் திறன் பெற்றவர்களாக இருந்தனர் என்றச் செய்தியைப் புறநானூறு பாடல் எண் 87 இல் ஔவையார் கூறியுள்ளார்.[சான்று தேவை]

தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.[1] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பேசக்கூடிய மூன்று பிரிவினர்களாக உள்ளனர். வடநாட்டிலும் விஸ்வகர்மா சமூக மக்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வகர்மா_(சாதி)&oldid=3588192" இலிருந்து மீள்விக்கப்பட்டது