கம்மாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கம்மாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கம்சாலா, விஸ்வகர்மா,

கம்மாளர் (Kammalar) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடகிழக்கு பகுதியிலும் வாழும் ஒரு தமிழ் சாதியினர் ஆவார். இவர்கள் தச்சர், கொல்லர், கற்தச்சர், தட்டார், கன்னார் என ஐந்து தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர். இவர்கள் பூணூல் அணிகின்றனர். இந்த தொழிலை செய்யக்கூடிய தமிழைத்தவிர பிறமொழி பேசக்கூடியவர்களும் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்கள் தங்களை விஸ்வகர்மாலா விஷ்வபிராமின் என்றும் அழைத்துக்கொள்கின்றனர். தமிழ் பேசுபவரும், தெலுங்கை பேசுபவரும் உள்ளனர். சைவம் மற்றும் அசைவ உணவு உண்பவர்களாக உள்ளனர். மேலும் வட தமிழ்நாட்டில் ஆச்சாரி, தென் தமிழ்நாட்டில் ஆசாரி, விசுவகர்மா என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.[1] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர். இவர்கள் மன்னர்களுக்கு தலைமை ஸ்தபதி மட்டுமல்ல ராஜகுரு, சேனாதிபதியாகவும் இருந்து உள்ளனர். இவர்களில் சோழ சேனாதிபதி குஞ்சரமல்லர் பெருந்தச்சர் ராஜராஜ சோழன் காலத்தில் கோயில் கட்டிய தலைமை ஸ்தபதி ஆவார். மற்றும் குறிப்பிடத்தக்கவர்கள் கருவூரார் போகர் சித்தர், கமலக்ஷ முனி சித்தர் சூரண்ணா ஆச்சார்யா சித்தூர் அரசர் இன்னும் பலர்.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-12-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்மாளர்&oldid=3498903" இருந்து மீள்விக்கப்பட்டது