விவேகானந்தர் பூங்கா, கோயம்புத்தூர்
Jump to navigation
Jump to search
விவேகானந்தர் பூங்கா, தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலுள்ள இராமகிருஷ்ண வித்யாலய வளாகத்துக்குள் மேட்டுப்பாளையம் சாலையோரமாக அமைந்துள்ளது. இப்பூங்கா இராமகிருஷ்ண வித்யாலத்தின் பவள ஆண்டு விழா நினைவாக பெப்ரவரி 3, 2006 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இப்பூங்காவில் பத்தரை அடி உயரத்தில் விவேகானந்தரின் வெண்கல உருவச்சிலை சாலையை நோக்கியபடி உள்ளது. இப்பூங்காவையொட்டி குழந்தைகள் விளையாடுவதற்கு இராமயணப் பூங்கா எனப் பெயரிடப்பட்ட கருத்துப் பூங்கா ஒன்று உள்ளது. இச்சிறுவர் பூங்காவில் இராமாயணக் கதாபாத்திரங்களை அடையாளப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு விளையாட்டுச் சாதனமும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.