உள்ளடக்கத்துக்குச் செல்

இராமாயணப் பூங்கா, கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஞ்சநேயரின் பிளந்த நெஞ்ச வடிவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் -இராமாயணப் பூங்கா

இராமயணப் பூங்கா, தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலுள்ள இராமகிருஷ்ண வித்யாலய வளாகத்துக்குள் மேட்டுப்பாளையம் சாலையோரம் அமைந்துள்ளது. இது சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட இராமயண கருத்துப் பூங்கா. இங்கு இராமாயணக் கதாபாத்திரங்களை அடையாளப்படுத்தும் விதத்தில் விளையாட்டுச் சாதனங்களும், அவற்றின் அருகில் அந்தந்தக் கதாபாத்திரங்கள் பற்றிய விளக்கத்தினைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரும் தகவற்பலகைகளும் உள்ளன. இப்பூங்கா விவேகானந்தர் பூங்காவினை ஒட்டி கட்டப்பட்டுள்ளது. இராமகிருஷ்ணா மிஷின் வித்யாலய நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்கா 2009 ஆம் ஆண்டு, டிசம்பர் 27 ஆம் தேதியன்று, இராமகிருஷ்ண மடத்தின் துணைத்தலைவராக இருந்த சுவாமி ஸ்மாரனந்தானந்தா மகராஜால் திறந்து வைக்கப்பட்டது.

2 வயது முதல் 15 வயதுவரையுள்ள சிறுவர், சிறுமியருக்கும் அவர்களுக்குத் துணையாக வரும் பெரியவர்களுக்கும் மட்டுமே இப்பூங்காவிற்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. தற்போதைய அனுமதிக் கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய் 5. பூங்காவினுள் உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்லக் கூடாதென்ற நிபந்தனை அமுலிலுள்ளது.

படத்தொகுப்பு

[தொகு]

இப் பூங்காவில் இராமாயணக் கதாபாத்திரங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சில விளையாட்டுச் சாதனங்களின் படிமங்கள் இங்கு தரப்பட்டுள்ளன:

ஆதாரங்கள்

[தொகு]