வில்லெம் தெ சிட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லெம் தெ சிட்டர்
Willem de Sitter
பிறப்பு(1872-05-06)6 மே 1872
சுனீக்
இறப்பு20 நவம்பர் 1934(1934-11-20) (அகவை 62)
லைடன்
தேசியம்டச்சியர்
துறைஇயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்குரோனிங்கன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதெ சிட்டர் புடவி,தெ சிட்டர் வெளி

வில்லெம் தெ சிட்டர் (Willem de Sitter, 6 மே 1872 - 20 நவம்பர் 1934) ஒரு டச்சு கணிதவியலாளரும் இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார்.

வாழ்வும் பணியும்[தொகு]

சுனீக்கில் பிறந்த இவர், கணிதவியலைக் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். குரோனிங்கன் வானியல் ஆய்வகத்தில் பிறகு சேர்ந்தார். இவர் தென்னாப்பிரிக்கா, நன்னம்பிக்கை முனையில் உள்ள அரசு வான்காணகத்தில் 1897 முதல் 1899 வரை பணிபுரிந்தார். பின்னர், 1908 இல் இவர் இலெய்டன் பல்கலைக்கழக வானியல் கட்டிலில் பணியமர்த்தப்பட்டார். இவர் 1919 இல் இருந்து தனது இறப்பு வரை இலெய்டன் பல்கலைக்கழக இயக்குநராக இருந்தார்.

இவர் அண்டப் புறநிலைக் கட்டமைப்புப் புலத்தில் விரிவான ஆய்வு செய்துள்ளார். ஆல்பர்ட் ஐன்சுட்டைனுடன் இணைந்து இவர் 1932 இல் ஓர் ஆய்வுரை வெளியிட்டார். இதில் இருவரும் புடவி வளைமைக்கான அண்டத் தரவுகளின் விளைவுகள் பற்றி விவாதித்துள்ளனர். இவர் தே சிட்டர் வெளி, தெ சிட்டர் புடவி ஆகிய கருத்துப் படிமங்களை விவரித்துள்ளார். இது ஐன்சுட்டைனின் பொது சார்பியலுக்கான ஒரு தீர்வாகும். இதில் பொருண்மமோ நேரியல் அண்ட மாறிலியோ அமையவில்லை. இது இயல்வலர்ச்சிப் போக்கில் தொடர்ந்து விரிவுறும் வெற்றுப் புடவி ஆகும். இவர் வியாழன் கோள் பற்றிய ஆய்வுக்கும் புகழ்பெற்ரவர் ஆவார்.

இவர் சிறிதுகாலம் உடல்நலமில்லாமல் இருந்த்தால் 1934 நவம்பரில் இறந்தார்.[1][2][3]

தகைமைகள்[தொகு]

இவர் 1912 இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.[4]

விருதுகள்[தொகு]

இவரது பெயர் இடப்பட்டவை[தொகு]

குடும்பம்[தொகு]

இவரது மகன்களில் ஒருவரான [[உல்போ தெ சிட்டர் (1902 – 1980),ஒரு டச்சு புவியியலாளர் ஆவார். மற்றொருமகனாகிய உல்போ தெ சிட்டர் (1930 – 2010). ஒரு சமூகவியலாளர் ஆவார்.

வில்லெம் அயேர்னவுட் தெ சிட்டர் (1905 – 15 செப்டம்பர் 1944)[5]), டச்சு கிழக்கிந்தியாவாக அன்று விளங்கிய இந்தோனேசியாவில் உள்ள இலெம்பாங்கில் அமைந்த போசுச்சா வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார். இவர் இங்கே மெசியர் 4 எனும் பேரியல் விண்மீன்கொத்தை ஆய்வு செய்தார்.

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

இலெய்டனில் ஐன்சுட்டைன், எகிரென்ஃபெசுட்டு, வில்லெம் தே சிட்டர், எடிங்டன், இலாரன்சு (1923)
  • On Einstein's theory of gravitation and its astronomical consequences, Monthly Notices of the Royal Astronomical Society 76 (1916) 699-728; 77 (1916) 155-184; 78 (1917) 3-28

மேற்கோள்கள்[தொகு]

  1. Obituary Notes of Astronomers at www.astro.uni-bonn.de
  2. 1947BAN....10..287D Page 287 at articles.adsabs.harvard.edu
  3. Adriaan, Blaauw (2004). "MY CRUISE THROUGH THE WORLD OF ASTRONOMY". Annual Review of Astronomy and Astrophysics 42 (1): 1–37. doi:10.1146/annurev.astro.42.053102.134020. Bibcode: 2004ARA&A..42....1B. 
  4. "Willem de Sitter (1872 - 1934)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
  5. Obituary Notes of Astronomers at www.astro.uni-bonn.de

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Wikisourceauthor

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Willem de Sitter
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

நினைவேந்தல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெம்_தெ_சிட்டர்&oldid=3228937" இலிருந்து மீள்விக்கப்பட்டது