உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லவராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லவராயர்கள் என்போர் முக்குலத்தோரின் ஒரு பிரிவினரான ஈசநாட்டுக் கள்ளர் என்ற பிரிவின் கீழ் வரும் ஒரு இனத்தவர் ஆவர். இவர்கள் சோழ சாம்ராஜ்ஜியத்தில், குறு நில மன்னர்களாகவும், படைத்தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர்.[1] இது பற்றிய பல சரித்திரக் குறிப்புகள் அமரர். கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவலில் காணலாம்.[2]

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ள தலைஞாயிறு குற்றம்‌ பொறுத்த நாதர்‌ கோவில் கல்வெட்டில் முதலாம் குலோத்துங்க சோழனின்‌ அதிகாரி ராஜராஜதேவரான வில்லவராயர்‌ குறிப்பிடப்படுகிறார்.[3]

சோழர் சாம்ராஜ்யத்தில் ஈச நாட்டுக் கள்ளர்கள் வகித்து வந்த பதவிகள் மற்றும் போர்களில் அவர்கள் செயலபட்ட விதத்தைக் கொண்டு அவர்களைச் சிறப்பு பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கிறார்கள்.

கள்ளர் குல பட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும். அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள்.

   உதாரணம்:
   வில்லவராயன் (வில்லவ +அரையன்)
   வில்லவராயர் (வில்லவ +அரையர்) 

பார்வைக்கு

[தொகு]
  • ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் ”கள்ளர் சரித்திரம்”, எனி இந்தியன் பதிப்பகம், தி.நகர், சென்னை.
  • அமரர். கல்கியின் ”பொன்னியின் செல்வன்” என்ற சரித்திர நாவல்
  1. விடுதலைப்போரில் சேதுபதி மன்னர். 1987. pp. 18].
  2. கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. pp. 150.
  3. ஆவணம் இதழ் 26. 2015. p. 53.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லவராயர்&oldid=4120722" இலிருந்து மீள்விக்கப்பட்டது