வில்காக்சு சூரிய நோக்கீட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்காக்சு சூரிய நோக்கீட்டகம்

வில்காக்சு சூரிய நோக்கீட்டகம் (Wilcox Solar Observatory) (WSO)) என்பது கலிபோர்னியாவின் சுட்டான்போர்டில் உள்ள ஒரு சூரிய ஆய்வகம் ஆகும். இது சூரியனின் மேற்பரப்பில் உள்ள காந்த, திசைவேகப் புலத்தின் அன்றாட நோக்கீடுகளை உருவாக்க பயன்படுகிறது. இது 1975, மே மாதத்தில் சூரியனின் சராசரி காந்தப்புலத்தின் அன்றாடக் கண்காணிப்பைத் தொடங்கியது. முன்பு சுட்டான்போர்டு சூரிய நோக்கீட்டகம் என்று அழைக்கப்பட்டது, இது சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தால் இயக்கப்படுகிறது இது சுட்டான்போர்டு பல்கலைக்கழக வளாகத்திற்கு தெற்கே 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) தொலைவில் அமைந்துள்ளது. இது பின்னர் சூரிய இயற்பியலாளர் ஜான் எம். வில்காக்சின் பெயரிடப்பட்டது. வில்காக்சு சூரிய நோக்கீட்டகம் (WSO) வரலாற்றியலாக நாசா சூரிய இயற்பியல், தேசிய அறிவியல் அறக்கட்டளை, கடற்படை ஆராய்ச்சி அலுவலகம் ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது. [1] [2] [3]

வில்காக்சு சூரிய நோக்கீட்டகம் இலிட்ரோ கதிர்நிரல்பதிவியையும் பாப்காக்சு காந்தப்பதியையும் பயன்படுத்தி, 5259Å இரும்பு-1 கதிர்நிரல் வரியையும் 5124Å இரும்பு-1 கதிர்நிரல் வரியையும் ஒப்பிட்டு ஒளிக்கோள பார்வைக் கோட்டுக்கு அவற்றின் காந்தப்புலம் 0.04 காசுக்குள் அமைவதைக் கண்டறிந்தது. [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]