விர்ஜீனியா ஆப்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விர்ஜீனியா ஆப்கர்
விர்ஜீனியா ஆப்கர் (ஜூலை 6, 1959)
பிறப்பு(1909-06-07)சூன் 7, 1909
வெஸ்ட்பீல்ட் , நியூஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஆகத்து 7, 1974(1974-08-07) (அகவை 65)
மன்ஹாட்டன், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா.
குடியுரிமைஅமெரிக்கர்
பணிஉணர்வகற்றியல் துறை
செயற்பாட்டுக்
காலம்
1937–1974
அறியப்படுவதுஅப்கார் எண்ணிக்கை கண்டுபிடிப்பாளர்
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்மருத்துவர்
களம்உணர்வகற்றியல் துறை, டெரட்டாலஜி
சிறப்புத்துறைமகப்பேறியல் உணர்வகற்றியல்

விர்ஜீனியா ஆப்கர் (Virginia Apgar, ஜூன் 7, 1909  – ஆகஸ்டு 7, 1974) ஓர் அமெரிக்க மகப்பேறியல் உணர்வகற்றியல் வல்லுநராவர் [1][2] என்பது அப்கார் எண்ணிக்கை என்பதன் கண்டுபிடிப்பாளராகவும் அறியப்படுகிறார். அப்கார் எண்ணிக்கை என்பது பிறந்தவுடனே உடனடியாக ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தை விரைவாக மதிப்பிட்டுவதற்கான வழியாகும். இதனால் அதனை உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கமுடியும். அவர் உணர்வகற்றியல் மற்றும் டெரட்டாலஜி துறைகளில் ஒரு தலைவராக இருந்தார், மேலும் குழவி ஆய்வியல் (நியோனாட்டாலஜி ) துறையில் நிறுவப்பட்ட அறிவார்ந்த கருத்துக்களை அறிமுகப்படுத்தினார்.

இளமையும் கல்வியும்[தொகு]

நியூ ஜெர்சியில் வெஸ்ட்பீல்ட் என்ற இடத்தில் குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் இளையோராக ஆப்கர் பிறந்தார். இவரது குடும்பம் ஓர் இசைக் குடும்பமாகும். இவரது பெற்றோர் ஹெலன் மே (கிளார்க்) மற்றும் சார்லஸ் எமரி ஆப்கர் ஆகியோராவர்.[3][4] அவரது தந்தை ஒரு காப்பீட்டு நிர்வாகியாகவும், ஒரு தன்னார்வ கண்டுபிடிப்பாளர் மற்றும் வானியலாளராகவும் இருந்தார்.[5] அவரது மூத்த சகோதரர் மிகச்சிறு வயதிலேயே காசநோய் காரணமாக இறந்தார். அவரது மற்றொரு சகோதரருக்கு நாள்பட்ட நோய் இருந்தது.[6] அவர் 1925 இல் வெஸ்ட்ஃபீல்ட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார், அவர் ஒரு மருத்துவராக வேண்டும் என விரும்பினார்.[7]

1929 ஆம் ஆண்டில் மவுண்ட் ஹோலிகோக் கல்லூரியில் பட்டம் பெற்றார், அங்கு அவர் உடற்கூறியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் சிறார்களுக்கான உயிரியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.[8] 1933 ஆம் ஆண்டில், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வகுப்பிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார்.[6] மேலும் 1937 இல் அறுவை சிகிச்சைக்கான தங்குமிடப் பயிற்சியையும் முடித்தார்.

கொலம்பியா-பிரஸ்பைடிரியன் மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சையின் தலைவரான டாக்டர் ஆலன் விப்பிள் வழிகாட்டுதலில் பணியாற்றினார். அறுவை சிகிச்சை வல்லுநராகத் தொடர்ந்து பணியாற்றிய காலத்தில் உடனிருந்த பல பெண்மருத்துவர்கள் வெற்றிகரமாகஅறுவைசிகிச்சை செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்களால் அறுவை சிகிச்சையைத் தொடரவில்லை என்பதால், பல பெண்கள் , இறுதியில் தோல்வி அடைந்திருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு பதிலாக அவர் மயக்க மருந்து பயிற்சி செய்ய ஊக்கப்படுத்தினார். ஏனெனில், சில அறுவை சிகிச்சைகளை முன்னெடுக்க, மயக்க மருந்து தேவை என்றும் , அத்துறையில் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்க ஆற்றலும் திறனும் தேவை என்பதையும் உணர்ந்தார்.[6] உணர்வகற்றியல் துறையில் தனது தொழிலை தொடர முடிவெடுத்து, அவர் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ரால்ப் வாட்டரின் கீழ் ஆறு மாதங்களுக்கு பயிற்சி பெற்றார். அவர் அங்கு அமெரிக்காவின் முதல் மயக்கவியல் துறையை நிறுவியிருந்தார்.[6] பின்னர் அவர் பெல்ல்வியூ மருத்துவமனையில் நியூயார்க்கில் டாக்டர் எர்னெஸ்ட் ரெவென்ஸ்டெயின் கீழ் ஆறு மாதங்களுக்குப் படித்தார்.[6] அவர் 1937 ஆம் ஆண்டில் உணர்வகற்றியல் பிரிவில் சான்றிதழ் பெற்றார்.[8] 1938 இல் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைக்கான கொலம்பியா பல்கலைக்கழம் திரும்பினார். அங்கு உணர்வகற்றியல் துறையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரிவின் இயக்குனராக நியமிக்கப்பட்டார் .[9] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் ஹைஜீன் அண்ட் பப்ளிக் ஹெல்த் கல்லூரியில் 1959 இல் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விர்ஜீனியா_ஆப்கர்&oldid=3578775" இருந்து மீள்விக்கப்பட்டது