விமானப் படை நாள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய விமானப் படை நாள் (Indian Air Force Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்[1] மாதம் 8ஆம் திகதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[2]

இந்தியப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாக இந்திய விமானப் படை, 1932இல் அக்டோபர் மாதம் 8ஆம் நாளில், இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது உருவாக்கப்பட்டது. இந்திய விமானப்படைச் சட்டம் 1932 ன்படி பிரித்தானியா ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கத்தில் பிரித்தானியாவின் சீருடை மற்றும் முத்திரைகளையே, இந்திய விமான படையினரும் பின்பற்றினர், இரண்டாம் உலகபோரின்போது சப்பானிய பர்மா [3] படையை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது. இந்திய விடுதலைக்கு பின்பு, இந்திய பாதுகாப்பு படையின் ஓர் அங்கமாக இருந்த விமானப்படை உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக உருப்பெற்றது.[4]

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]