உள்ளடக்கத்துக்குச் செல்

விநாயகர் சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விநாயகர் (Statue of Ganesha) அல்லது பெரிய விநாயகர் அல்லது ஐசுவர்யா கணபதியின் சிலை என்பது இந்தியாவின் தெலங்காணாமாநிலத்தில் உள்ள நாகர்கர்னூல், திம்மாஜிபேட்டா, அவஞ்சாவில் அமைந்துள்ளது. இது, இந்தியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலை எனவும், இதன் கலை நுணுக்கங்கள் மேலைச் சாளுக்கியப் பேரரசைச் சித்தரிக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. விநாயகரின் சிலை பீடம் உட்பட 7.62 மீட்டர் ( 9.144 மீட்டர் ) உயரம் கொண்டதாக உள்ளது. [1] [2] [3]

வரலாறு

[தொகு]

12 ஆம் நூற்றாண்டில் தெலுங்கானா மாநிலம் திம்மாஜிப்பேட்டையில் உள்ள அவஞ்சாவில் மேற்கு சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த ஓர் மன்னரால் பெரிய பாறையில் செதுக்கப்பட்ட பழங்கால விநாயகர் சிலை உள்ளது. இந்த சிலை விவசாய நிலத்தில் அமைந்துள்ளது. [4]

அவஞ்சாவை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, கபிலவை லிங்க மூர்த்தி, தைலபுது என்ற மன்னனால் செதுக்கப்பட்ட ஒற்றைக்கல் சிலையாக இது அமைந்துள்ளது. குல்பர்கா மாவட்டத்தின் தற்போதைய பாதாமி பேரரசின் மன்னர் விக்ரமாதித்யா மேற்கு சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தெலுங்கானா பகுதியை 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட வம்சமாக மேற்கு சாளுக்கிய வம்சம் உள்ளது. இதனை ஆண்ட விக்ரமாதித்ய மன்னரின் மகன்கள் சோமேஸ்வருடு மற்றும் தைலபுடு ஆவர். தைலப்புடு சமந்த ராஜுவாக, முந்தைய கந்தூரின் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. கிபி 1113 இல் தைலப்புடு தனது தலைநகரை அவஞ்சாவிற்கு மாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aishwarya Ganapathi, Avancha, Mahbubnagar District, Telangana - YouTube". பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  2. "Historic Ganesh idol lies in neglect". பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  3. "30 అడుగుల అరుదైన ఏకశిలా గణపతి.. మన అవంచలో!". பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  4. "Telangana Government Neglects Eka Shila Ganesh in Mahabubnagar | Sneha TV Telugu - YouTube". பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விநாயகர்_சிலை&oldid=3844873" இலிருந்து மீள்விக்கப்பட்டது