விட்டல்ராவ் காத்கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விட்டல்ராவ் காத்கில்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர்
பிரதமர்இராச்சீவ் காந்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 22, 1928[1]
இறப்பு2001
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

விட்டலராவ் காத்கில் (Vitthalrao Gadgil) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1928 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார். இராச்சீவ் காந்தி காலத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக பணியாற்றினார்.[2]

விவரங்கள்[தொகு]

புனே தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக இருந்தார். 1971 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரையிலும், 1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராகவும், 1980 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். இந்திரா காந்தி, இராச்சீவ் காந்தி, நரசிம்ம ராவ், சோனியா காந்தி போன்ற கட்சித் தலைவர்களின் கீழ் காங்கிரசு கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக வும்இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், மும்பையின் உரூபரெல் கல்லூரியில் பொருளாதாரத்தின் கவுரவ பேராசிரியராகவும், மும்பையின் புதிய சட்டக் கல்லூரியில் அரசியலமைப்புச் சட்டத்தின் பேராசிரியராகவும் இவர் இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

விட்டலராவ் காத்கில்லின் தந்தை, நரகர் விசுணு காட்கில் என்பவராவார். காகாசாகேப் காத்கில் என்றும் அவர் அழைக்கப்படுகிறார். காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியாகவும் , நேரு அமைச்சரவையிலும், பஞ்சாப் ஆளுநராகவும் பணியாற்றினார். அவரது மகன் அனந்து காத்கில் எம். எல். சி மற்றும் கட்சியின் தேசிய குழு உறுப்பினராகவும் உள்ளார் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Joshi, P. K. (1989) (in mr). Gadgil Kulavruttanta. புனே. பக். 216. 
  2. "The Tribune, Chandigarh, India - Main News". tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.
  3. "Congress plays Brahmin card: Congress plays Brahmin card in Maharashtra, makes governor nominate Anant Gadgil to Vidhan Parishad | Mumbai News - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டல்ராவ்_காத்கில்&oldid=3932783" இலிருந்து மீள்விக்கப்பட்டது