விஜய குமார் (விளையாட்டாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய குமார்
பிறப்புஅர்சூர் சிற்றூர், அமீர்பூர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம்
தேசியம்இந்தியா இந்தியர்
பணிகுறி பார்த்துச் சுடுதல்
வென்ற பதக்கங்கள்
ஆடவர் சுடுதல்
நாடு  இந்தியா
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2012 இலண்டன் ஆடவர் 25மீ கைத்துப்பாக்கி தொடர் சுடுதல்
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி ஆடவர் 25மீ கைத்துப்பாக்கி தொடர் சுடுதல் - சோடி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி ஆடவர் 25மீ கைத்துப்பாக்கி தொடர் சுடுதல் -ஒற்றை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி ஆடவர் 25மீ கைத்துப்பாக்கி மையச் சுடுதல் - சோடி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 தில்லி ஆடவர் 25மீ கைத்துப்பாக்கி மையச் சுடுதல் - ஒற்றை

விஜய குமார் (பிறப்பு 1986) இந்தியாவின் துப்பாக்கிச் சுடும் விளையாட்டு வீரர். 2012 ஒலிம்பிக்கில் 25 மீட்டர் தொலைவிலிருந்து கைத்துப்பாக்கியில் தொடர்ந்து குறிபார்த்துச் சுடும் போட்டியில் ஆடவர் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர்.[1][2] இவர் இமாச்சலப் பிரதேசத்தின் அமீர்பூர் மாவட்டத்திலுள்ள அர்சூர் சிற்றூரைச் சேர்ந்தவர். தற்போது இந்தியப் படைத்துறையில் காலாட்படையில் சுபேதாராகப் பணி புரிந்து வருகிறார். இவர் 2007ஆம் ஆண்டில் அருச்சுனா விருது பெற்றவராவார்.[3]

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. "Men's 25m Rapid Fire Pistol - Olympic Shooting, London 2012". 3 August 2012 இம் மூலத்தில் இருந்து 2 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120502081355/http://www.london2012.com/shooting/event/men-25m-rapid-fire-pistol/phase=shm202100/index.html. 
  2. http://qualitypoint.blogspot.in/2012/08/vijay-kumar-wins-silver-for-india-in.html
  3. NDTV Sports (3 August 2012). "Profile: Vijay Kumar". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து 5 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120805175708/http://sports.ndtv.com/olympics-2012/india/profiles/item/193397-london-olympics-profile-vijay-kumar-shooting. பார்த்த நாள்: 3 August 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]