விஜயராஜமல்லிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயராஜமல்லிகா
பிறப்புமஞ்சு ஜே கிருஷ்ணன்
1 மார்ச்சு 1985 (1985-03-01) (அகவை 39)
முத்துவரா, திருச்சூர், கேரளா, இந்தியா
தொழில்எழுத்தாளர்,சமூக செயற்பாட்டாளர், ஆசிரியர்
தேசியம்இந்தியன்
கல்வி நிலையம்
  • இராஜகிரி சமூகவியல் கல்லூரி
  • புனித தாமசு கல்லூரி, திருச்சூர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • தெய்வத்தின் மகள்
  • ஆண் நதி
  • மல்லிகை வசந்தம்
  • ஆணல்ல பெண்ணல்ல
  • எ வேர்டு டூ மதர்
துணைவர்சசீம்

தெய்வத்தின் மகள் என்று அழைக்கப்படும் விஜயராஜமல்லிகா (Vijayarajamallika) மலையாள இலக்கியத்தில் ஒரு திருநங்கைக் கவிஞராவார்,[1] இவர் ஒரு எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் ஆர்வலர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி[தொகு]

விஜயராஜமல்லிகா, 1985 ஆம் ஆண்டு, கேரளா, திருச்சூர் மாவட்டம் , முதுவாராவில், கேரள மாநில மின்சார வாரியத்தின் (KSEB) ஓய்வுபெற்ற கண்காணிப்பாளரான கணியம்கோணத்து வீட்டில் ஒய். கிருஷ்ணன் மற்றும் ஆசிரியரான ஜெயா கிருஷ்ணனுக்கு மகனாகப் பிறந்தார். [2]

புறநாட்டுகர கேந்திரிய வித்யாலயாவில் தனது ஆரம்பக்கல்வியினைப் பயின்றார். ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாற்றில் இளங்கலைப் பட்டத்தை திருச்சூரில் உள்ள புனித தாமஸ் கல்லூரியில் 2005 இல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடம் பெற்றார். [2] 2009 இல் ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியில் முதுகலை சமூகப்பணியில் (MSW) பட்டம் பெற்றார். [2][3]

தொழில் வாழ்க்கை[தொகு]

தெய்வத்தின் மகள் ( கடவுளின் மகள் ) எனும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் மலையாளத் துறையின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.[4][5]தெய்வத்தின் மகள் என்ற கவிதையிலிருந்து "மாறானந்தரம்" என்ற கவிதை கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது[6] மேலும் என். பி ஆசுலே என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆர்பர் காலின்சு எழுதிய தி வேர்ல்ட் தட் பிலோங்ஸ் டு அஸ் எனும் புத்தகத்தில் வெளியிடப்பட்டது.[7][8][9] மேலும் "நீலாம்பரி" என்ற மற்றொரு கவிதை, ஸ்ரீ சங்கராச்சாரியார் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. [10]

சான்றுகள்[தொகு]

  1. "Kerala's first transwoman poet Vijayarajamallika to tie knot". Mathrubhumi.com.
  2. 2.0 2.1 2.2 "MALLIKAVASANTHAM". Readwhere. பார்க்கப்பட்ட நாள் 2020-02-22.
  3. "വിജയരാജമല്ലിക അഭിമുഖം: ഞാൻ പ്രളയത്തിന്റെ പുത്രിയല്ല; എനിക്ക് ശേഷം പ്രളയമെന്ന് വിശ്വസിക്കുന്നില്ല" [Vijayarajamallika Interview: I am not the daughter of the flood; I don’t believe there will be a flood after that]. TheCue.in (in மலையாளம்). December 31, 2019.
  4. "മദ്രാസ് സർവ്വകലാശാല പാഠ്യപദ്ധതിയിൽ വിജയരാജമല്ലികയുടെ കവിതാസമാഹാരം" [A collection of poems by Vijayaraja Mallika in the Madras University syllabus]. Azhimukham.com (in மலையாளம்). 3 August 2019.
  5. "Transgender poet Vijayaraja Mallika's book included in Madras University syllabus". Mathrubhumi.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-21.
  6. "Transgender's Poem finds its place in MG University syllabus" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-21 – via YouTube.
  7. "Opening Up Identity: How A Diverse Anthology Of Queer Poetry Came To Be". HuffPost India (in ஆங்கிலம்). 2020-08-01. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
  8. Rangnekar, Sharif D. (2020-08-08). "'Desire crosses borders of different kinds': Akhil Katyal" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/desire-crosses-borders-of-different-kinds-akhil-katyal/article32292306.ece. 
  9. "How Being Queer Is A Very Personal Experience That Needs Less Of The Labelling". womensweb.in (in ஆங்கிலம்). 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
  10. {{cite web}}: Empty citation (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயராஜமல்லிகா&oldid=3818955" இலிருந்து மீள்விக்கப்பட்டது