விசைகளின் இணைகர விதி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காவிகளை கூட்டுவதற்கு இணைகர விதி பயன்படுத்தப்படுகிறது.
விசைகளின் இணைகர விதி (Paralleogram law of forces) என்பது பொருள் ஒன்றில் தொழிற்படும் இரு விசைகளின் தொழிற்பாட்டை அறியப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு புள்ளியில் செயல்படும் இரு விசைகளை அளவிலும் திசையிலும் ஒரு இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்களாகக் குறிக்கமுடியுமானால், அவ்விசைகளின் விளைவு (Resultant) விசையினை அளவிலும் திசையிலும் விசைகள் செயல்படும் புள்ளியிலிருந்து வரையப்படும் மூலைவிட்டத்தால் குறிக்கலாம். விசைகளின் இவ்விதி திசைவேகத்திற்கும் பொருந்தும்.