விக்கிப்பீடியா பேச்சு:விக்கிப்பீடியா பயிற்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயிற்சி பெற விரும்புவோரை விட பயிற்சி அளிக்க விரும்புவோர் தொகை கூடுதலாக இருக்கும் போலவே :) :( --ரவி 12:06, 13 பெப்ரவரி 2009 (UTC)

கொழும்பில்?[தொகு]

அண்மையில் கொழும்பிலிருந்து பலர் புதிதாகப் பதியத்துவங்குகின்றனர். அங்கு ஒரு பயிறசிப் பட்டறை நடத்த இயலுமா? -- சுந்தர் \பேச்சு 06:46, 5 மார்ச் 2009 (UTC)

மார்ச்சு 14 இல் திருச்செங்கோடு கல்லூரி பயிலரங்கு[தொகு]

முனைவர் மு. இளங்கோவன் மார்ச்சு 14 இல் திருச்செங்கோடு கல்லூரியில் நடக்கும் பயிலரங்கில் அரை மணி நேரம் த.விக்கு ஒத்துக்க முன் வந்துள்ளார். ரவி போக முடியும் என்று கூறு உள்ளார். ரவி உறுதிப் படுத்த முடியுமா? கார்த்திக் சந்தர்ப்பம் வாய்த்தால் போவார். அருநாடனால் அங்கு போக முடியாது என்று கூறு உள்ளார். 400 வரையான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள். --Natkeeran 22:06, 8 மார்ச் 2009 (UTC)

திருச்செங்கோட்டில் பல கல்லூரிகள் உள்ளன, திருச்செங்கோடு கல்லூரி என எதுவும் இல்லை. கல்லூரியின் பெயர் என்னவென்று குறிப்பிடமுடியுமா? --குறும்பன் 14:16, 9 மார்ச் 2009 (UTC)

கே.எசு.ஆர் கல்லூரியில் (KSR College) நிகழ்கின்றது. ரவி மார்ச் 14 ஆம் நாள் அங்கு கலந்து கொள்வார் என அறிவித்து உள்ளார் (நாசா நா. கணேசன் விடுத்திருந்த அழைப்பின் பேரில் அங்கு செல்கின்றார். எனக்கும் ஒரு படி விடுத்து இருந்தார்). தமிழ்மணம் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி. பேரா மு. இளங்கோவன் அவர்களின் அறிவிப்பு: http://muelangovan.blogspot.com/2009/03/blog-post_9901.html

--செல்வா 15:44, 9 மார்ச் 2009 (UTC)

ஆமாம், நற்கீரன். மார்ச்சு 14 பயிலரங்கில் கலந்து கொள்கிறேன். முனைவர். மு. இளங்கோவன் தொடர்ந்து தமிழ் இணையப் பட்டறைகளைப் பல இடங்களில் நடத்தி வருகிறார். வருங்காலத்திலும் விக்கிப்பீடியா சார்பாக இப்பட்டறைகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளை அறிந்து கொண்டு இங்கு தெரிவிக்கிறேன். சென்னை, பெங்களூர் பட்டறைகளுக்குப் பிறகு ஓரிருவர் முனைப்புடன் பங்களிக்கத் தொடங்கி இருப்பதால், வருங்காலத்தில் களப் பரப்புரைகளில் நாம் கூடுதல் செலுத்துவது நல்லது--ரவி 04:12, 10 மார்ச் 2009 (UTC)

நன்றி. ரவி...நீங்கள் படங்கள் எடுத்து சேர்க்க மறந்திடாதிங்கோ....--Natkeeran 23:36, 10 மார்ச் 2009 (UTC)

நாளைய திருச்செங்கோடு பட்டறை நேரடி ஒளிபரப்பு !!!--ரவி 17:42, 13 மார்ச் 2009 (UTC)

பட்டறையில் கலந்து கொண்டேன். முன்கூட்டியே நிகழ்ச்சியில் பங்கு கொள்வது பற்றிய திட்டமிடல் இல்லாததால் குறைவான நேரமே கிடைத்தது. விக்கிப்பீடியா பற்றிய சிறிய அறிமுகத்துடன், புதிதாக ஒரு கட்டுரை தொடங்கி எழுதுவது என்பது பற்றிய பயிற்சி அளித்தேன். விக்கிப்பீடியாவின் பயன்பாட்டை வியந்து பாராட்டினார்கள்.

Joomla போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தி நான்கைந்து தளங்களை நிருவகிக்கும் அளவு நுட்ப அறிவுள்ள நண்பர் ஒருவருக்கே விக்கியில் எப்படி கட்டுரைகள் எழுதுவது என்று புரியவில்லை !! சுந்தர் போன்றோர் மேல் விக்கியில் இது பற்றி முறையிட்டு கூடிய விரைவில் WYSIWYG உரைத் தொகுப்பு வசதியைப் பெற்றுத் தந்தால் மிகவும் உதவும்.

புதிய கட்டுரை எழுதுவது எப்படி என்பது குறித்து ஒலி, ஒளி, உரை வழிகாட்டிகளை முதற்பக்கத்தில் இட வேண்டும்--ரவி 02:35, 15 மார்ச் 2009 (UTC)

ரவி. இது நல்ல கருத்து (idea). அதாவது ஒலி, ஒளி. உரை வடிவங்களில் வழிகாட்டிகளை icon ஆக முதல் பக்கத்தில் இடலாம். --Natkeeran 02:42, 15 மார்ச் 2009 (UTC)