விக்கிப்பீடியா பேச்சு:மைல்கற்கள்/பயனர் பங்களிப்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி சுப்பிரமணி, இந்தப் பக்கத்தில் ஆர்வம் கொண்டு மாற்றங்களைச் செய்தமைக்கு நன்றி. சில மாற்றங்கள் குறித்து என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.

  • http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm பக்கத்தில் உள்ள Edit activity levels of registered users and bots per group of namespaces படி 100, 250, 1000 என்றே அடுத்தடுத்த மைல்கற்கள் உள்ளன. எனவே அதன் அடிப்படையில், 500, 750 போன்ற மைல்கற்களைத் தவிர்த்து விட்டேன்.
  • ஒரே பயனருக்குத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு மாதமும் ஒரே மைல்கல் குறித்து மகிழ்ச்சியைத் தெரிவிப்பதைத் தவிர்க்கலாம் என்று கருதினேன். பல முனைப்பான பங்களிப்பாளர்கள் இருப்பதால் இது தேவையற்ற பேச்சுப் பக்கச் செய்திகளைக் கூட்டும். அதன் பொருட்டே, ஒரு முறை 100ஐத் தாண்டியவர்களுக்கு அடுத்து 250ஐத் தாண்டும்போது என்றும் ஒரு முறை 250ஐத் தாண்டியோருக்கு அடுத்த முறை 1000ஐத் தாண்டும் போதும் கருத்திடுகிறேன் என்றும் கூறினேன். எனவே இந்த அடிப்படையில், ஒவ்வொரு மாதத்துக்கும் பயனர் பங்களிப்புகள் - சனவரி 2013, பிப்ரவரி 2013 என்பது போல் தனித்தனிப் பக்கங்கள் தேவையில்லை என்று கருதுகிறேன். ஒட்டு மொத்தமாக தமிழ் விக்கிப்பீடியா வரலாற்றைப் பார்க்கும் போது இவ்வாறு எத்தனைப் பயனர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரே பக்கத்தில் இவற்றைத் தொகுப்பது சரியாக இருக்கும். வேண்டுமானால் ஒவ்வொரு பயனரின் பெயருக்குப் பக்கத்திலும் அவர் எத்தனை முறை இந்த மைல்கல்லைக் கடந்திருக்கிறார் என்று அடைப்புக் குறிக்குள் இடலாம். அதே போல், ஒருவர் 250ஐத் தாண்டினால் அவரது பெயரை 100 மைல்கல் பகுதியில் இருந்து இதற்கு நகர்த்தி விடலாம். ஒலிம்பிக்கில் ஓடியவரின் உள்ளூர் வெற்றிகளைப் பட்டியலிடுவதில்லை தானே :)
  • இதைப் பயனர்களுக்கு இடையேயான போட்டி, தர வரிசையாகப் பார்க்கக்கூடாது என்பதற்காகத் தான் முதலில் 100, பிறகு 250, இறுதியாக 1000 என்று ஒன்றின் கீழ் ஒன்றாக இட்டேன். இதை ஒவ்வொருவரும் தத்தம் ஈடுபாட்டின் அளவைக் கண்டு கொள்ளவும் ஒட்டு மொத்த விக்கியின் செயற்பாட்டைப் புரிந்து கொள்ளவும் பயன்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்.--இரவி (பேச்சு) 12:36, 2 பெப்ரவரி 2013 (UTC)

இரவி, நீங்கள் சொல்வது அனைத்தும் சரியானதுதான். இருப்பினும், இப்பட்டியல் பல பயனர்கள் தாங்களும் குறைந்தது மாதத்திற்கு 100க்கும் அதிகமான தொகுப்புகளைச் செய்திட உதவும். தற்போது மாதவாரியாக பட்டியலிடும் வசதியைச் செய்துள்ளேன். அதில் மாதந்தோறும் தகவல்களை உள்ளீடு செய்யலாம். பயனர்களும் தங்கள் தொகுப்புகளை மாதவாரியாக ஒப்பீடு செய்து கொள்ள இது உதவும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:14, 2 பெப்ரவரி 2013 (UTC)

சுப்பிரமணி, பக்கத்தை மேம்படுத்த நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி. ஆனால், தற்போதுள்ள வடிவம் எனக்கு ஏற்புடையதாக இல்லை.
  • அட்டவணையை தொகுப்பு வாரியாக வரிசைப்படுத்த முடியும் என்பதால் இது ஒரு போட்டி வரிசை போன்ற தோற்றமே தருகிறது.
  • நான் முன்பு இட்டிருந்தது மைல்கற்களை அடிப்படையாக கொண்ட பள்ளியில் உள்ள grading முறை போன்றது. ஒரு வகையில் 100 தொகுப்புகள் குழு (club), 250 தொகுப்புகள் குழு என்பது போல் புரிந்து கொள்ளக்கூடியது. ஒரு குழுவில் நுழைந்த பிறகு அடுத்த குழுவுக்கு நகர்வதை இலக்காக கொண்டது. இப்போது துல்லியமான தொகுப்புகள் எண்ணிக்கையில் மதிப்பெண் பட்டியல் போன்று உள்ளது இதனை இலகுவாக காட்சிப்படுத்த விடுவதாக இல்லை. ஒவ்வொரு மைல்கற்களையும் எத்தனை பேர் கடக்கிறார்கள் என்பது தான் முக்கியமாக படுகிறதே தவிர, அவர்கள் துல்லியமாக எத்தனைத் தொகுப்புகள் செய்தார்கள் என்பது அவ்வளவு முக்கியமாகத் தோன்றவில்லை.
  • ஒவ்வொரு மாதமும் பயனர்கள் எத்தனைத் தொகுப்புகள் செய்கிறார்கள் என்ற தரவுகளை அவர்களே தேடிப் பார்த்துக் கொள்ள முடியும். தற்போது உள்ள வடிவமைப்பு ஒட்டு மொத்த விக்கிப்பீடியாவின் செயல்பாட்டை முன்னிறுத்தி இருக்க வில்லை. விக்கிப்பீடியர்:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இத்தனைப் பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ள முடிவது போல, தமிழ் விக்கிப்பீடியா எத்தனை முனைப்பான பங்களிப்பாளர்களைப் பெற்றிருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ள முடிவது தான் நான் பக்கத்தைத் தொடங்கியதன் நோக்கம்.

பக்கத்தை முன்பிருந்த வடிவத்துக்கு அப்படியே மீள்விக்க வேண்டுகிறேன்.

நன்றி--இரவி (பேச்சு) 18:00, 2 பெப்ரவரி 2013 (UTC)

இரவி, இந்த இடத்தில் நான் தங்கள் கருத்தை ஏற்க விரும்பவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் முனைப்பான பங்களிப்பவர்களின் பக்கமாகக் கூட இந்தப் பக்கம் இருக்கட்டும். மேலும், முனைப்பான பங்களிப்பாளர்களிடையேயான ஒரு ஆரோக்கியமான போட்டியாகக் கூட இருக்கட்டும். இது மாதம் குறைந்தது 100 தொகுப்புகளையாவது செய்ய வேண்டும் என்று பிற பயனர்களை ஊக்கப்படுத்தும் பக்கமாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? பல்வேறு பணிச்சூழல்களில் இதில் சில பயனர்கள் (என்னையும் சேர்த்துத்தான்) ஒரு சில மாதங்களில் பங்களிப்புகள் எதுவுமே செய்யாமல் கூட போகலாம். ஏன் சில ஆண்டுகள் கூட என் பங்களிப்புகள் இல்லாமல் போகலாம். இந்தப் பட்டியலில் என் பெயர் இல்லாமல் கூட போகலாம். அதற்காக நான் தமிழ் விக்கிப்பீடியாவின் சிறந்த பங்களிப்பாளர் இல்லை என்று யாரும் எண்ணிவிட முடியாது. அது குறித்து குறை எதுவும் சொல்லிவிட முடியாது. முனைப்பாகச் செயல்படும் பயனர்களின் பெயர்கள் பட்டியல் இங்கிருப்பது தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும் பிற பயனர்களின் கருத்துக்களையும் அறியலாம். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:44, 3 பெப்ரவரி 2013 (UTC)
சுப்பிரமணி, உங்கள் கருத்துக்கு மறுமொழி அளிக்கும் முன், இப்பக்கம் முன்பிருந்த வடிவமைப்புக்கான நோக்கம் என்ன என்பதை விளக்குவது அவசியமாகப் படுகிறது. நேற்றைய என் தொகுப்புகளைப் பார்த்தீர்களேயானால், வார்ப்புரு:முதல் தொகுப்பு, வார்ப்புரு:முதல் கட்டுரையும் தொகுப்பும், வார்ப்புரு:முதல் கட்டுரை பதக்கம், வார்ப்புரு:100 போன்றவை அனைத்தும் விக்கித்திட்டம் 100ஐ அடிப்படையாகக் கொண்ட முயற்சிகள். முதல் தொகுப்பைச் செய்தவரை முதல் கட்டுரை எழுதத் தூண்டல், முதல் கட்டுரை எழுதியவரை தொடர் பங்களிப்பாளராகத் தூண்டல், 100 தொகுப்புகள் செய்தவை 250 மைல்கற்கள் நோக்கிய தூண்டல் என்ற அடிப்படையில் செய்யப்பட்டவை. ஒரே மைல்கல்லைத் திரும்ப திரும்ப எட்டுகிறோமா என்பது முக்கியம் இல்லை. இதில் ஒரு நிலையில் இருப்பவருக்கு அடுத்த நிலையைச் சுட்டுவது, அடுத்த நிலையில் சிலர் இருக்கிறார்கள் என்பதன் மூலம் அது எட்டக்கூடிய இலக்கு தான் என்று சுட்டுவது ஆகியன பொதிந்துள்ள உளவியல் நோக்கம்.
ஒரு கிரிக்கெட் போட்டியில் 50 அடித்தவருக்கு 100 அடிப்பது இலக்கு. 100 அடித்தவருக்கு 200 அடிப்பது இலக்கு. ஒரு விக்கெட் எடுத்தவருக்கு 5 விக்கெட் எடுப்பது இலக்கு. தெண்டுல்கர் இத்தனை நூறுகள் அடித்தார்கள் என்று சொல்லும் போது அங்கு 100 என்பது தான் முதன்மை. அது 101ஆ 199ஆ என்பது முக்கியம் இல்லை. அது போலவே, இங்கு துல்லியமான தொகுப்பு எண்ணிக்கை முக்கியம் இல்லை. மேலும், இவ்வாறு துல்லியமான எண்ணிக்கை இடுவது உங்களைப் போல் சிலருக்கு உதவியாக இருக்கும் அதே வேளையில், கீழே பார்வதி, சிரீதர் கருத்திட்டிருப்பது போல் சிலருக்குத் தரவரிசை போன்ற ஒரு எண்ணத்தையும் தர நேரிடலாம். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். சிலர் ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய கட்டுரையை ஒரே தொகுப்பில் ஏற்றுபவர்கள். இன்னும் சிலர் சிறு சிறு தொகுப்புகளைச் செய்ய விரும்பாமல் பல தொகுப்புகளை ஒன்றாகச் சேர்த்து இடும் வழக்கம் உள்ளவர்கள். அதனாலேயே துல்லியமான தொகுப்பு எண்ணிக்கையை விட மைல்கற்கள் மூலம் பட்டியலிடுவது சிறப்பாகத் தோன்றுகிறது.
அதே போல், http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm பக்கத்தில் உள்ள தரவுகள் பெரும்பாலும் கட்டுரைப் பெயர்வெளியில் உள்ள தொகுப்புகளையே கணக்கில் கொள்கிறது. ஆனால், சிறப்பு:ActiveUsers பக்கத்தில் உள்ள தரவு அனைத்துப் பெயர்வெளியில் உள்ள தொகுப்புகளையும் கணக்கில் கொள்கிறது. கட்டுரைப் பெயர்வெளியில் உள்ள பங்களிப்புகளைத் தவிர மற்ற பல பங்களிப்புகளும் முக்கியமானவை என்ற நோக்கிலேயே இந்தத் தரவைக் கணக்கில் கொண்டேன். எடுத்துக்காட்டுக்கு, சில பங்களிப்பாளர்கள் தங்கள் பயனர் பெயர்வெளியில் கட்டுரையைத் தொகுத்துப் பிறகு கட்டுரைப் பெயர்வெளியில் இடுகிறார்கள். பல பயனர்கள் பேச்சுப் பக்கங்களில் உதவி அளிக்கிறார்கள். உதவிக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். இத்தொகுப்புகள் அனைத்தும் விக்கியின் வளர்ச்சிக்கு உதவுவனவே.
பயனர் தத்தம் பங்களிப்புகளை மற்றவர் பங்களிப்போடு ஒப்பு நோக்குவதற்கான அட்டவணைகள் ஏற்கனவே http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm பக்கத்தில் உள்ளன. அதனை மீண்டும் செய்வதில் பயனில்லை. விக்கிப்பீடியா:மைல்கற்கள் பக்கத்தின் துணைப்பக்கமாக இடும்போது இதனை ஒட்டு மொத்த விக்கிப்பீடியாவின் மைல்கற்களாக பார்க்கத் தலைப்படுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர் வளம் என்ன என்று பார்க்க விரும்பினால், நம்மிடம் மாதம் 100 தொகுப்புகள் செய்ய வல்ல இத்தனைப் பங்களிப்பாளர்கள், மாதம் 250 தொகுப்புகள் செய்ய வல்ல இத்தனைப் பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கில் கொள்ளலாம். பயனர் பக்கங்களில் இடும் 100, 250, 1000 வார்ப்புருக்களில் இந்தப் பக்கத்துக்கு இணைப்பு தந்தால், "அட நம்மைப் போல் இவ்வளவு பேர் இருக்கிறார்களா" என்ற வியப்பும் மகிழ்ச்சியும் வரக்கூடும் (துல்லியமான தொகுப்பு எண்ணிக்கை போட்டியையே தரும். அது நலமான போட்டி என்றாலும் உவப்பாக இல்லை. குறைந்த பட்சம் தொகுப்பு எண்ணிக்கையை வைத்து போட்டி வேண்டாம். அது நல்ல பயனைத் தராது). இதனை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் தீட்டலாம். மொத்தம் 50 பயனர்கள் 100 தொகுப்புகள் மைல்கல்லைத் தாண்டியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், ஒவ்வொரு மாதமும் இந்த மைல்கல்லைத் தாண்டுபவர்கள் 10 பேர் தான் என்று வைத்துக் கொள்வோம். ஏன் மற்ற 40 பயனர்களும் தொடர் பங்களிப்பாளர்களாக இருக்க முடியவில்லை, இதற்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் என்ன வகையான உதவிப் பக்கங்கள், தூண்டல்களை வைக்கலாம் என்று எண்ணிப் பார்க்கலாம். இப்படிப் பல வகையிலும் விக்கித் திட்டம் 100ஐ மனதில் கொண்டே முன்பிருந்த வடிவமைப்பை இட்டேன். எனவே, மீண்டும் ஒரு முறை முன்பிருந்த வடிவமைப்புக்கு மீள்விக்க வேண்டுகிறேன். இல்லை, இப்பொழுது உள்ள வடிவமைப்பும் பயனுள்ளதே என்று நீங்கள் கருதினால், இந்தப் பக்கமும் இருக்கட்டும். ஆனால், இந்தப் பக்கம் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, நான் முன்பிருந்த வடிவத்துக்கு மீண்டும் ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொள்கிறேன். விக்கித்திட்டம் 100ல் இருந்து இணைக்க அதுவே சரியான பக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 07:22, 3 பெப்ரவரி 2013 (UTC)
இரவி, பயனர்கள் பங்களிப்பில் ஊக்கப்படுத்துவதற்கு உதவும் என்பதாலேயே என்னுடைய கருத்தைத் தெரிவித்தேன். அது மாற்று விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற நிலையிருந்தால் தங்கள் விருப்பப்படி மாற்றிவிடுங்கள் எனக்கு ஆட்சேபணையில்லை... --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:49, 3 பெப்ரவரி 2013 (UTC)
சுப்பிரமணி, புரிதலுக்கு நன்றி. மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி விடுகிறேன்.--இரவி (பேச்சு) 19:39, 5 பெப்ரவரி 2013 (UTC)

தொகுப்புகள் எண்ணிக்கை[தொகு]

தொகுப்புகள் எண்ணிக்கை என்பது சிறு புள்ளி திருத்தம் என்றாலும் அல்லது பல ஆயிரம் பைட்டுகள் கோண்ட திருத்தம் என்றாலும் ஒரு தொகுப்பாகத்தானே காட்டுகின்றது? கட்டுரையின் தரம் பேனுவதற்கு பல சிக்கலான திருத்தங்களை ஒட்டுமொத்தமாக ஒரே முயற்ச்சியில் செய்பவருக்கு தொகுப்புகள் எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும்! பங்களிப்பாளர்களின் ஆர்வமே முக்கிய தேவை, தர வரிசை அல்ல--ஸ்ரீதர் (பேச்சு) 03:03, 3 பெப்ரவரி 2013 (UTC)

👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:43, 3 பெப்ரவரி 2013 (UTC)

விக்கிப்பீடியாவின் பங்களிப்புகள் அனைத்தும் தொகுப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டுதான் தர வரிசைப்படுத்தப்படுகின்றன. கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கொண்டே விக்கிப்பீடியாக்களின் மொழிகளின் தரவரிசை செய்யப்படுகின்றன. நாமும் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவே அதிக அளவில் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அனைத்து மொழிகளுக்கான பட்டியலில் முன்னிலை பெற வேண்டுமென்று விரும்புகிறோம். இது ஏன்?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:00, 3 பெப்ரவரி 2013 (UTC)
சுப்பிரமணி, தரவுகளைக் காட்சிப்படுத்திப் பார்க்கும் http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm தவிர வேறெங்கும் தொகுப்புகள் அடிப்படையில் பங்களிப்புகளின் தரம் / பெறுமதி எடையிடப்படுவதாகத் தெரியவில்லை. மாந்த உறவாட்டம் இல்லாத நிலையில் இது போல் தொகுப்புகள் எண்ணிக்கை, கட்டுரை எண்ணிக்கை வைத்தே வரிசைப்படுத்த முடிகிறது. இதைக் கூட எதற்கு வரிசைப்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை. கடைசி 30 நாட்களில் யார் முனைப்பாக இருக்கிறார்கள் என்ற தரவு மட்டுமே போதுமானது. இது போன்ற உலகளாவிய தானியங்கிக் கணக்கீடுகளுக்கும் நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தே கைப்பட செய்யும் வரிசைப்படுத்தல்களுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. இதனைப் பயனர்கள் தனிப்படவே எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. நிருவாகிகள் தேர்வு, மற்ற வாக்கெடுப்புகள் என்று எங்குமே தொகுப்புகளின் துல்லியமான எண்ணிக்கை ஒரு பொருட்டு இல்லை. பங்களிப்புகளின் வீச்சை முடிவு செய்யும் வகையில் குறைந்தது இத்தனை நாட்களாவது பங்களித்திருக்க வேண்டும், குறைந்த அளவு பங்களிப்புகளாவது செய்திருக்க வேண்டும் என்ற தோராயமான எதிர்பார்ப்பே உண்டு. இந்த குறைந்தபட்ச அளவு இல்லாவிட்டால் செல்லா வாக்குகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும். இந்த வாக்கெடுப்புகளில் கூட துல்லியமாக எத்தனை வாக்குகள், யார் சொல்கிறார் என்பதை விட கருத்தின் பெறுமதி, நியாயம் என்ன என்றே பார்க்கிறோம்.
கட்டுரைகளின் எண்ணிக்கை கொண்டு தரவரிசை பார்ப்பதில் போதாமை இருப்பதால் தான் http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias பக்கத்தில் இன்னும் பல தரவுகளையும் தந்து அதன் அடிப்படையில் வரிசைப்படுத்தும் வசதியைத் தந்திருக்கிறார்கள். இதே காரணத்துக்காகத் தான் http://shijualex.wordpress.com/2013/01/27/analysis-of-the-indic-language-statistical-report-2012/ போன்ற ஆய்வுகள் வருகின்றன. உலகளவிலும் கவனிக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், விக்கிப்பீடியா இயக்கத்தைப் பற்றி அறிந்த எவரும் கட்டுரைகள் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் தரத்தை அளவிட மாட்டார்கள்.
//நாமும் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவே அதிக அளவில் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். //
2011ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ் 16,000 கட்டுரைகள் உருவாகின. சென்ற ஆண்டு 7,000 மட்டுமே. பங்களிப்பு போதவில்லை என்று அல்ல. அதற்கு மாறாக, விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள் போன்றவற்றின் மூலம் வெறுமனே கட்டுரை எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும் போக்கு உரையாடலுக்கு உட்பட்டது. சென்ற ஆண்டு முழுக்கவே முக்கிய கட்டுரைகளை உருவாக்கல், கூட்டு முயற்சிகள், கூகுள் கட்டுரைகள் செப்பம் என்று பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிதாக கட்டுரைகள் எழுதுவதை விட ஏற்கனவே உள்ள கட்டுரைகளைச் சீராக்குவதற்கு கவனம் அளித்தோம்.
//அனைத்து மொழிகளுக்கான பட்டியலில் முன்னிலை பெற வேண்டுமென்று விரும்புகிறோம். //

மற்ற மொழிகளை முந்தி நாம் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை. மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 20 இடத்துக்குள் இருக்கும் தமிழ் கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் 59ஆம் இடத்தில் உள்ளது. வேறு பல தர அளவீடுகளிலும் கூட முதல் 30 இடத்துக்குள் இல்லை. மற்ற மொழிகளை விடுங்கள்.. நமக்குத் தேவைப்படும் பல அடிப்படைத் துறைகள் பற்றிய குறுங்கட்டுரைகள் கூட நம்மிடம் இல்லை. ஆங்கில விக்கிப்பீடியா போய் அனைத்துத் தகவலையும் தெரிந்து கொள்வது போல, தமிழ் விக்கிப்பீடியாவின் தரமும் பரப்பும் இல்லாத வரை, நாம் கட்டுரை எண்ணிக்கையில் உலகிலேயே முதல் இடத்தில் இருந்தாலும் பயனில்லை. இந்த அடிப்படையிலேயே தான் கட்டுரைகள் எண்ணிக்கை கூட்டல் பற்றிய முயற்சிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், நம்முடைய அறிவுத் தேவைக்கும் விக்கியின் வீச்சுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும். --இரவி (பேச்சு) 19:39, 5 பெப்ரவரி 2013 (UTC)

மைல்கல் குறிப்புகள் இட உதவி தேவை[தொகு]

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் தேதி பங்களிப்பு மைல்கல் குறிப்புகளை இட உதவி தேவை. அரை மணி நேர வேலை. விருப்பமுள்ளவர்கள் கை கொடுக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:25, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:46, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]