விக்கிப்பீடியா பேச்சு:புதிய ஆத்திச்சூடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தர், மிகவும் நல்ல புதுமையான முயற்சி. தலைப்பையும் கொஞ்சம் விக்கியாக்கம் செய்து, விக்கிச்சூடி எனலாம் :-)) βινόδ  வினோத் 04:45, 29 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி வினோத். இது ஒரு முன்வரைவே. நடைமுதல் எதை வேண்டுமானாலும் விருப்பப்படி மாற்றுங்கள். -- சுந்தர் \பேச்சு 04:47, 29 பெப்ரவரி 2008 (UTC)

ஆர்வமூட்டும் நல்ல முயற்சி சுந்தர். நமது பங்களிப்பாளர்களின் கற்பனைத் திறனுக்கும் ஒரு வடிகாலாக அமையும். மயூரநாதன் 04:59, 29 பெப்ரவரி 2008 (UTC)

ஓதுவோர் என்றால் யார்? --Natkeeran 17:37, 2 மார்ச் 2008 (UTC)

ஓதுவோர் என்றால் படிப்பவர்கள். ஓதுவது ஒழியேல் என்பது ஆத்திசூடி. சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் காணும் பதிவு:

ஓது²-தல் ōtu-
, 5 v. tr. [K. Tu. ōdu, M. ōtu.] 1. To read, recite audibly in order to commit to memory; படித்தல். ஓதி யுணர்ந்தும் பிறர்க்கு ரைத்தும். மயூரநாதன் 17:43, 2 மார்ச் 2008 (UTC)
இருக்கலாம்..இருப்பினும் தற்கால பொதுவழக்கில் தேவாரம் ஓதுவோரைத்தான் குறிக்கும், சரியா?--Natkeeran 17:47, 2 மார்ச் 2008 (UTC)

தேவாரம் ஓதுபவர்களை ஓதுவார் என்பர். ஓதுவோர் அல்ல. மயூரநாதன் 17:49, 2 மார்ச் 2008 (UTC)

நன்றி. --Natkeeran 17:55, 2 மார்ச் 2008 (UTC)