விக்கிப்பீடியா பேச்சு:பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடக்கம்[தொகு]

மேலுள்ள இணைப்பிலிருந்து ...[தொகு]

  • இன்றைய நிகழ்வு - பிபிசியும், இந்திய விளையாட்டு வீரங்கனைகளும்

பிபிசி, குறிப்பிட்ட இந்திய பத்திரிக்கையியல் கல்லூரிகளும் இணைந்து, இந்திய விளையாட்டு வீராங்கனைகள் குறித்தக் கட்டுரைகளை உயர்த்த, இணையவழி பயலிரங்கு இன்று இரண்டு மணி நேரம் (பிற்பகல் 2-4) நடத்துகிறது. முழுவிவரங்களை இந்த இணைப்பில் காணலாம். இதனால் முதற்கட்டமாக 50 கட்டுரைகள், ஆறு இந்திய மொழிகளில் (இந்தி, தமிழ், மராத்தி, தெலுங்கு, குசராத்தி) உருவாக உள்ளன. அவைகள் முதற்கட்டமாக, கூகுள் ஆவணமாக, அத்திட்டத்தில் பங்கு கொள்ள விருப்பம் தெரிவித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு, பின்னூட்டங்கள் பெறப்பட உள்ளன. பெயர் கொடுத்தவர்கள், அதன் படி இணைய, அத்திட்ட நடத்துனர்களைத் தொடர்பு கொள்ளவும். நம் மொழியில் தான், அதிக பங்களிப்பாளர்கள் பெயர் கொடுத்துள்ளனர். எனவே தொடர்ந்து முன்னெடுப்புகளைச் செய்து, நம் தளம் சிறக்கச் செய்வோம். பகுப்பு:விக்கிப்பீடியா விக்கித்திட்டம் செம்மங்கையர் என்ற பகுப்பின் துணைப்பகுப்பிலும், பகுப்பு:இந்தியப் பெண் விளையாட்டு வீரர்கள் என்பதிலும், இக்கட்டுரைகளை, நேரடியாக, இம்மாதம் பிப்ரவரி18 இல் உருவாக்க எண்ணியுள்ளனர். இன்று அவற்றில் சிலவற்றை அம்மாணவர்கள் மணல்தொட்டியில் எழுத அறிமுகம் செய்யப்பட உள்ளது.--உழவன் (உரை) 02:50, 9 பெப்ரவரி 2021 (UTC)

  • நேற்று தமிழகத்தின் மூன்று கல்லூரி மாணவர்களும், உதவிப்பேராசிரியர்களும், இத்திட்ட நடத்துனர்களும் , 'சூம்(zoom)' செயலி வழியே இணையத்தில் கலந்து கொண்டனர். இது பயிற்சி வகுப்பாக அமையவில்லை. அறிமுகவுரையை தந்தேன். 'விசுவல் எடிட்டர்' வழியேதான் செயற்பட வேண்டும் எனக்கூறினர். தரவுகளை மாணவர்கள் மணல்தொட்டியில் எழுதிய பிறகு, அவர்களை அதனைச் செம்மைபடுத்த நாம் உதவ வேண்டும். பிறகு நமது கருத்துக்கேட்டு முதன்மை பெயர்வெளிக்கு நடத்துவதாகத் திட்டமிட்டுள்ளனர். நல்ல தொடக்கமென்றே எண்ணுகிறேன். பெயர் கொடுத்தவர் அத்திட்ட நடத்துனர்களிடம் தொடர்பு கொண்டு விவரம் கேட்டு உடன் இணையவும். மொத்தம் 50 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பது இலக்குஉழவன் (உரை) 01:08, 10 பெப்ரவரி 2021 (UTC)
  • இனி விக்கிப்பீடியா:பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021 என்பதில் மேலதிகத்தகவல்களும், இங்கு கூறப்பட்டத்தகவல்களும் இடப்படும்.உழவன் (உரை) 01:51, 10 பெப்ரவரி 2021 (UTC)

செய்ய வேண்டியன[தொகு]

  • en:BBC Indian Sportswoman of the Year என்ற ஆங்கிலக் கட்டுரையை தமிழில் உருவாக்க வேண்டும்.
  • புதிய பங்கேற்பாளர் பட்டியல் (மாணவிகள்)
  • இதற்காகப் பட்டியலிட்டக் கட்டுரைகளை, பின்வருமாறு வகைப்படுத்த வேண்டும்.
    • ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பவைகள்Y ஆயிற்று
    • ஆங்கில விக்கியில் மட்டும் இருப்பவை Y ஆயிற்று
    • இரு மொழிகளிலும் இல்லாதவை Y ஆயிற்று
  • பொதுவகத்திலிருந்து, திட்டத்திற்கு ஒத்த படங்களை, இங்கு கோர்த்து வைக்க, ஆவணப்படுத்த வேண்டும்.

--உழவன் (உரை) 11:27, 10 பெப்ரவரி 2021 (UTC)