விக்கிப்பீடியா பேச்சு:பயிற்சி (வெளி இணைப்புகள்)/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் வல்லுனர்களாக உள்ளார்கள். அவர்கள் தமிழ் மொழியை எழுதுவதை விடவும் தங்கிலிஸ் மொழியில் எழுதுகிறார்கள். உதாரணத்திற்கு அம்மா என்பதை AMMA என்றே எழுதி பழக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்காகவும், ஆங்கில தட்டச்சு கருவியை உபயோகிப்பவர்களுக்காகவும் http://www.google.com/transliterate/ பக்கத்தினை பரிந்துரைக்கலாம்.

மேலும் கருத்தினை தெரிவிக்க விரும்புகின்றவர்கள் உரையாடல் பக்கத்தினை பயன்படுத்திக் கொள்ளவும் என்ற அறிவிப்பினையும் இக்கட்டுரையின் கீழ் பதியலாம்.

நன்றி.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு கருவி இங்கு தமிழ் விக்கிப்பீடியாவிலேயே உள்ளது. மேல் வலது மூலையில் தமிழில் எழுத என்ற பெட்டிக்கு அருகில் “தமிழ் 99” மற்றும் “எழுத்துப்பெயர்ப்பு” என இரு தெரிவுகள் உள்ளன. எழுத்துப்பெய்ர்ப்பு நீங்கள் சொல்லும் ammaa = அம்மா தான். google transliterator ஐ விட நன்றாகவே உள்ளது. (பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் வல்லுனர்களாக உள்ளார்கள் - இது கொஞ்சம் ஓவரா இல்ல?, மை நேம் இஸ் சோடாபாடில் சொன்னா நான் வல்லுனரா? :-) )--சோடாபாட்டில்உரையாடுக 15:24, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]