விக்கிப்பீடியா பேச்சு:நுட்ப மாற்ற வாக்கெடுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//குறைந்தது 5 ஆதரவு வாக்குகள் (எதிர் வாக்கு இல்லையெனில்) வழு பதியலாம். எதிர்ப்பிருக்கும் பட்சத்தில் நிருவாகி ஒருவரை அணுகி உரையாடிய பிறகு வழு பதிதல் நல்லது. //

குறைந்தது 5 வாக்குகள் என்பது இந்தி விக்கியைப் போன்று தேவையில்லாத பல நீட்சிகளை நிறுவிட வழி செய்யுமோ என்று தோன்றுகிறது. ஆனால், தேவையில்லாமல் இந்த குறைந்த அளவு வாக்கு எண்ணிக்கையை அதிகரிப்பது நியாயமான மாற்றங்களைச் செய்ய விடாமல் செய்து விடக்கூடாது. அதே போல், இதில் தனிப்பட்டு எந்த நிருவாகியையும் கருத்து கேட்க வேண்டிய தேவை இல்லை. அவர்களும் வழக்கம் போலவே இந்த வாக்கெடுப்பில் கருத்தைத் தெரிவிக்கலாம். எத்தனை ஆதரவு, எத்தனை எதிர்ப்பு என்பதை விட பொதுக்கருத்து, எதிர்ப்பு வாக்குகளின் ஆக்க அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்து வாக்கெடுப்புகளையும் போல் 7 நாட்கள் காலம் தந்தால் வெவ்வேறு பணிகளில் உள்ள விக்கிப்பீடியர்களும் கவனித்து வாக்களிக்க உதவும். --இரவி (பேச்சு) 18:47, 27 மே 2012 (UTC)[பதிலளி]

1 வார காலம் காத்திருக்கலாம். இந்தி விக்கியைப் போன்று தேவையில்லாத --> அவ்வாறு இங்கு நடக்காது என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இது கொள்கையென்பதால் அதைத் தவிர்க்க வேண்டும். 1 வாரகாலத்தில் அது போன்ற ஒரு வாக்கெடுப்பில் யாரவது கருத்தை முன்வைத்து தடுப்பார்கள் என உறுதி கொள்ளலாம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:16, 27 மே 2012 (UTC)[பதிலளி]