விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது மிகச்சிறந்ததொரு திட்டம் சிறீகாந்த். இது பெரிய மாற்ற்த்தை ஏற்படுத்தும். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 15:13, 11 மே 2011 (UTC)[பதிலளி]

நல்ல திட்டம். முதற்கட்டமாக, பங்களிப்புகளைக் கோரும் செய்திகளை மட்டும் இடலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு செய்தியும் குறைந்தது ஒரு மாதமாவது இட்டுப் பார்த்தால் அதன் தாக்கத்தை அளவிட முடியும். ஒரே செய்தியை வலியுறுத்தும் வெவ்வேறு பதாகைகளை வேண்டுமானால் தற்சுழற்சி முறையில் இட்டுப் பார்க்கலாம்.
  • விக்கிப்பீடியா:ஐந்து_தூண்கள்
  • என் விக்கிப்பீடியா -- ஃபயர்ஃபாக்சு, குரோம் நீட்சிகள்
  • விக்கிப் பக்கங்களை ஃபேசுபுக்கிலும் , ட்விட்டரிலும் குறுந்தொடுப்பு மூலம் பகிர்க

போன்றவை முக்கியத்துவம் குறைந்தவையே. இவ்வாறு முக்கியத்துவம் குறைந்த தகவல்களை இட்டால், விளம்பரங்களைக் கண்டும் காணாமல் விடுவது போல், இந்தத் தள அறிவிப்பையும் கவனிக்காமல் விடக்கூடும்.

சிம்மி வேல்சு படம் இட்ட நன்கொடை வேண்டல்கள் நல்ல வரவேற்பைப் பெறுவது போல், தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் படங்களுடன் கூடிய பங்களிப்பு வேண்டல்களை வெளியிடலாம்.

எடுத்துக்காட்டுக்கு:

"மயூரநாதன், இலங்கையைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர். தனது ஓய்வு நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறார். நீங்களும் எழுதலாமே?"

"செங்கைப் பொதுவன், ஒரு மூத்த தமிழ்ப் புலவர். தமிழ் இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?"

சூர்யப்பிரகாசு, ஒரு பொறியியல் கல்லூரி மாணவர். தமிழார்வம் மிகுந்த இவர், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறார். நீங்களும் எழுதலாமே?"

இதில், நீங்களும் எழுதலாமே? என்பது ஒரு அறிமுகப்பக்கத்துக்கு எடுத்துச் செல்லும். ஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் தனித்தனிப் பக்கங்கள் கூட வைக்கலாம். இதில் அவர்கள் எப்படி பங்களிக்கிறார்கள், ஏன் பங்களிக்க முனைகிறார்கள், இதனால் அவர்கள் பெற்ற நன்மை என்ன என்பதை வலியுறுத்தலாம்.

அனைத்து விளம்பரங்களிலுமே ஒரு மனிதக்கூறு (human element) தேவைப்படுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவை மற்றும் ஒரு தளமாகப் பார்க்காமல் அதன் பின்னணியில் உள்ள உழைப்பை உணர்ந்து இன்னும் பலரும் பங்களிக்க முன்வரலாம் என்று நினைக்கிறேன். இதில் உள்ள ஒரே தயக்கம் என்னவென்றால், விக்கிப்பீடியர்களை விளம்பரப்படுத்துவதாக விமர்சனம் வரக்கூடாது. சிம்மியின் படத்துக்கும் இவ்வாறு விமர்சனம் வந்தது. பிறகு சூ கார்டனர் உள்ளிட்ட பிறரது படங்கள் இடம்பெற்ற விளம்பரங்களும் வந்தன என்று நினைக்கிறேன். --இரவி 18:37, 11 மே 2011 (UTC)[பதிலளி]

கருத்துக்கு நன்றி ரவி. மனிதக்கூறு அடிப்படை மிகச்சிறந்த யோசனை. பங்களிப்பு சார்ந்த வேண்டல்கள் புகுபதிகை செய்தவர்க்கு தேவையற்றது என எண்ணுகிறேன்.(என்னைப் போல் வெகு சிலர் மட்டுமே கட்டுரைக்கு பங்களிக்காமல் புகுபதியும் பயனர்கள்).ஆகையால் விக்கிப்பீடியா:ஐந்து_தூண்கள் போன்றவை புதிதாக சேரும் பயனர்களுக்கு பயன்படும். ஒவ்வோர் பரப்புரையையும் நாம் அனைவரும் வாக்களித்து மேற்கொள்ளலாம், நான் கொடுத்த பட்டியல் மாதிரியே. 1 மாதம் சரியான காலம், ஆனால் பல்வேறு பதாகைகளை வைப்பது நல்லது. மேலும் meta:CentralNotice இல்லாக் காலங்களில் மட்டுமே இதை நடத்த வேண்டும். ஸ்ரீகாந்த் 19:20, 11 மே 2011 (UTC)[பதிலளி]
இரவியின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். இது இதுவரை எந்த விக்கியிலும் செய்திரா/முயன்றிராத் திட்டம். பங்களிப்பாளர் அறிமுகத்தை விடவும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இத்திட்டத்தில் நானும் தன்னார்வத்துடன் சேர்கிறேன். மேலும் இது ஒத்த-மனமுடையவர்களை (Like-minded) ஈர்க்கப் பெரிதும் உதவும்...

--சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 05:44, 14 மே 2011 (UTC)[பதிலளி]

புதிய தள அறிவிப்புகள்[தொகு]

ஆலமரத்தடியிலிருந்து

சிறீக்காந்தும் நானும் சில புதிய தள அறிவிப்புகளை முயன்று வருகிறோம்.

புகுபதியாத பயனர்களுக்கான அறிவிப்புகளை மீடியாவிக்கி:Anonnotice பக்கத்தில் இடலாம். தற்போது, அவர்களை பயனர் கணக்கு உருவாக்கத் தூண்டும் அறிவிப்பை இட்டுள்ளோம். http://en.wikipedia.org/wiki/Wikipedia:Signup போன்ற ஒரு பக்கத்தைத் தமிழில் உருவாக்கினால், அதனை இந்த அறிவிப்பில் சேர்க்கலாம். எல்லா வாசகர்களும் உடனே பங்களிப்பாளர்கள் ஆவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. எனவே, தொகுப்பது குறித்த சாதகங்களை மட்டும் முன்னிறுத்துவதைத் தவிர்க்கலாம். புகுபதிந்த வாசகர்களுக்கு கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட பக்கங்கள் தெரியும் என்றும், மற்றவர்களுக்கு இடைமாற்றில் இருந்து சற்றே பழைய உள்ளடக்கம் வழங்கப்படும் என்றும் சில ஆண்டுகள் முன்பு படித்தேன். இந்த நிலை தொடருமானால், இதனை வலியுறுத்தி பயனர் கணக்கு உருவாக்கச் சொல்லலாம்.

மீடியாவிக்கி:Sitenotice பக்கத்தில் தற்போது சுழலும் இரட்டை அறிவிப்புகளை இட்டுள்ளோம். சில நிமிட இடைவெளிகளில் வெவ்வேறு பக்கங்களைப் பார்த்து இவை வேலை செய்கின்றனவா என்று தெரியப்படுத்துங்கள். இது நன்றாகச் செயல்படுமானால், விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு பக்கத்தில் உள்ளபடி சில பங்களிப்பாளர்களை எடுத்துக்காட்டுகளாகத் தந்து புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்கும் செய்திகளை இட வேண்டும்.

மாணவர், இளையவர், மூத்தவர்கள், பெண்கள், பன்னாட்டவர்கள், பல துறையினர் என்று ஏற்கனவே உள்ள தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் பன்முகத்தன்மையை முன்வைத்து அதே போன்ற பின்புலம் உள்ள புதிய பங்களிப்பாளர்களைப் பெற முடிகிறதா எனப் பார்க்கலாம். இதற்கு, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இருந்து ஓரிரு வரி தனிப்பட்ட அறிமுகங்கள், சிறிய அளவிலான புகைப்படங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு,

கே. எஸ். பாலச்சந்திரன், கனடாவில் வாழுத் ஈழத்து நாடகக் கலைஞர். 2007 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறார். நீங்களும் எழுதலாமே?
படிமம்:Vatsan.jpg
ஸ்ரீவத்சன், சென்னையைச் சேர்ந்த மென்பொருளாளர். 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??
சந்திரவதனா, செருமனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். ஈழப் போராட்டம், இதழியல் முதலிய துறைகளில் முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே??
அராப்பத், திருநெல்வேலியைச் சேர்ந்த பொறியாளர். இசுலாம், பொது அறிவு முதலிய துறைகளில் முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் எழுதலாமே??

தயவு செய்து, இந்தத் திட்டம் குறித்து ஏதேனும் மறுப்பு, மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். என்ன வகையான வாசகங்களைப் பயன்படுத்தினால் கூடுதல் ஈர்ப்பு இருக்கும் என்றும் தெரியப்படுத்தவும். "நீங்களும் எழுதலாமே" என்பதை ஒரு இணைப்பாக வைத்து இலகுவான புதுப்பயனர் வழிகாட்டும் பக்கத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். --இரவி 10:02, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

மறுப்பு ஏதுமில்லை இரவி. ஆனால், வெறும் messagebox செய்தி போலிருப்பதுதான் ஒரு மாதிரியாக இருக்கிறது. வடிவமைப்பை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஏதேனும் ஒரு சின்னத்தை இதற்கென ஒதுக்கி அது அனைத்து பெட்டிகளிலும் பொதுவாக (இடப்பக்கம்) இருக்குமாறும் பயனரது படம் வலப்பக்கமும் இடையில் உரை இருக்குமாறும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த மஞ்சள் நிறம்தான் எனக்குப் பிடிக்கவில்லை. இது நீலமாகவோ பச்சையாகவோ (வெளிர்) இருக்கலாம் என்பது எனது விருப்பம். மேலும் இதுகுறித்த அனைவரது கருத்துகளையும் அறிய ஆவல். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:27, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

நிறம் மாற்றலாம். சிம்மியின் நன்கொடை வேண்டல்கள் போல் அழகிய படிமங்களாகக் கூட உருவாக்கலாம். உதவி தேவை :) --இரவி 12:31, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

சூரியாவின் ஆலோசனைக்கு ஏற்ப மஞ்சக் காமாலை நிறம் மாற்றப்பட்டுள்ளது :) .messagebox.site-notice என்ற புதிய வகை உருவாக்கப்பட்டு #E0EEF7 நிறம் அளிக்கப்பட்டுள்ளது. மாற்று நிறங்களைப் பரிந்துரைத்தால் உரிய மாற்றங்களை mediawiki:common.cssல் மாற்றலாம். உதவிய சிறீக்காந்துக்கு நன்றி :) --இரவி 12:40, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]

நல்ல முயற்சி. இது புகுபதிகை செய்யாதவர்களுடனான தொடர்பாடலை மேம்படுத்தும். பாராட்டுக்கள் !!
" http://en.wikipedia.org/wiki/Wikipedia:Signup போன்ற ஒரு பக்கத்தைத் தமிழில் உருவாக்கினால்" ---இந்தப் பக்கம் ஏற்கெனவே தமிழாக்கம் செய்யபட்டுள்ளதே ? --மணியன் 12:47, 4 சூலை 2011 (UTC)--மணியன் 12:47, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஓ! நான் உதவிப் பக்கங்களில் தேடிப் பார்த்த போது இந்தப் பக்கம் ஏற்கனவே இருப்பதைச் சரியாகக் கவனிக்கவில்லை. --இரவி 16:44, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

  • திட்டம் நன்றாக இருக்கிறது. பொதுவாக இணையத்தில் அறிமுகமாகிறவர்கள் (அதிகமானவர்கள்) முதலில் திரைப்படம், அவர்களுடைய ஊர், அவர்களுடைய பெயர் போன்றவைகளைத்தான் தேடுதல் பொறி மூலம் தேடுகிறார்கள். இவர்களை விக்கிப்பீடியாவிற்குள் கொண்டு வர முயற்சிக்கலாம். இவர்களுக்கு இரவி குறிப்பிடும் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டத்தில் புதியவர்கள் பங்கேற்க முயற்சிக்கலாம். சில இணைய விளம்பர நிறுவனங்கள் அளிக்கும் விளம்பரங்கள் அந்தப் பக்கங்களில் இடம் பெற்றிருக்கும் செய்தியுடன் தொடர்புடையதாக அமையும். அது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் ஊர், நாடு முதலான குறிப்பிட்ட பக்கங்களில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த விக்கிப்பீடியா பயனர்கள் குறித்த தகவல்களை முன்னிறுத்தி வாசகங்கள் இடம் பெறும்படி செய்ய இயன்றால் மிகச் சிறப்பாக இருக்கும். முயற்சித்துப் பார்க்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:55, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]
அருமையான யோசனை தேனியார். முயர்ச்சிக்கிறேன். ரவி, தட்டச்சு உதவி | Font help போன்றவை புகுபதியாதோருக்கு வரவது அவசியம். ஸ்ரீகாந்த் 14:03, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]
நல்ல முயற்சி இரவி. வரவேற்கிறேன். தேனி சுப்பிரமணி சொன்னதும் அருமை. --செல்வா 15:58, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. இவற்றுக்கு ஏற்ப பல்வேறு நுட்ப ஆய்வுகளைச் செய்வதில் சிறீக்காந்த் ஈடுபட்டு வருகிறார். சோதிப்பதிலும் மீடியாவிக்கிப் பக்கங்களில் இடுவதிலும் நான் உதவி வருகிறேன்.

நேற்று, புகுபதியாத பயனர்களைப் புகுபதியச் சொல்லி இட்ட அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்று மட்டும் இது வரை 23 பேர் கணக்கு தொடங்கி உள்ளனர். இந்திய மாலை நேரத்தில் கூடுதல் கணக்குகள் உருவாகின்றன. இந்த வேளையில் தான் நிறைய பேர் உலவுகிறார்களோ?

தட்டச்சு உதவி, எழுத்துரு உதவி முதலிய உதவி இணைப்புகள் அறிவிப்பு இத்தனை நாள் புகுபதியாதவர்களுக்குத் தென்படாமல் இருந்துள்ளது :( சிறீக்காந்த் சுட்டியபடி, அவற்றை இப்பொழுது சேர்த்துள்ளோம்.

இறுவட்டு உருவாக்கம், நிருவாகிகள் தேர்தல் போன்றவற்றில் நெடுநாள் பயனர்களே ஈடுபடுவர் என்பதால் இது போன்ற தகவல்களை விக்கிப்பீடியா பெயர்வெளியில் மட்டும் இட்டால் போதுமானதாக இருக்கும். மற்ற பக்கங்களில் பங்களிப்புகளை ஈர்க்கும் வெவ்வேறு செய்திகளை இட்டால் புதிய பயனர்களுக்கு உதவியாக இருக்கும். எனவே, பெயர்வெளிக்கு ஏற்ப வெவ்வேறு தகவல்களை இடுவது எப்படி என்று அறிய முயன்று வருகிறோம்.

புதிய பயனர்களுக்கு எத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்?

"விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி உள்ளீர்களா? இன்றே உங்கள் முதல் கட்டுரையைத் தொடங்குங்கள்" என்பது போல் ஒரு அறிவிப்பு இட்டு கட்டுரை உருவாக்கப் பெட்டியுடன், எளிய வழிகாட்டையும் அளிக்கலாம் என்று கருதுகிறோம்.

மற்ற பயனுள்ள அறிவிப்பு ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். --இரவி 16:37, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

மாணவர்கள், வலைப்பதிவர்கள், தமிழ் ஆர்வலர்கள், துறை வல்லுனர்கள் என்று குறிவைத்தும் சில அறிவித்தல்களைச் செய்யலாம்!! --Natkeeran 00:51, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]
Background color ஊதா வண்ணத்தில் இருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது தோல் நிறத்திற்கு தகுந்தவாறு. --மாகிர் 05:13, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]

இத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது. சில மணிநேர / மணித்துளி நேரங்களுக்கு ஒரு முறை சுழலும் அறிவிப்புகள் வரும். புதிய அறிமுகங்களை விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் பக்கத்தில் சேர்க்கலாம். புதியவர்கள் தங்கள் முதல் கட்டுரையை எழுதத் தூண்டும் வண்ணமாக விக்கிப்பீடியா:முதல் கட்டுரை பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தேவையான தகவலைச் சேர்க்கலாம். அதே வேளை, இது எளிமையாகவும் புதியவர்களை மிரளச் செய்வதாகவும் இல்லாமல் இருக்க வேண்டும் --இரவி 12:40, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]

இரவி, நீங்கள் கொடுத்திருந்த வண்ணத்தை மாற்றி தோலின் பேக்ரவுண்டு சாம்பல்(கிரே) வண்ணத்திற்கு மாற்றியிருக்கிறேன். மற்றவர்களின் கருத்தறிந்து மாற்றலாம். தேனியாரின் கருத்தும் கவனிக்கத் தக்கது. தற்போதைய வண்ணம் எனது லேப்டாபிலே திரையை சற்று நகர்த்தினால் வெளிர் நிறத்திலும் காட்டுகிறது. என்றாலும் தோல் நிறம் என்பதால் தளம் முழுதும் சீராக இருக்கும். ஆனால் வெக்டர் அல்லாத வேறு தோல்கள் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு அந்தந்த(eg monobook.css,vector.css) css ல் கிளாசை போட்டு வண்ணத்தை மாற்றவேண்டும். -- மாகிர் 17:52, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]
  • முன்பிருந்த நிறம் தனித்துத் தெரிவதாக இருந்தது. தற்போதைய நிறம் இங்கு பொருத்தமாக இல்லை. இந்த அறிவிப்பு தனித்துத் தெரிய வேண்டியது அவசியம் என்பதால் முன்பிருந்த நிறத்திற்கே மாற்றம் செய்யலாம் என்பது என் கருத்து.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:17, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]
சுப்பிரமணி, உங்கள் கருத்தில் பொருள் உள்ளது. தனித்தும் தெரிய வேண்டும் அதே வேளை கண்ணுக்குச் சற்று இதமாகவும் இருந்தால் தளத்தில் அழகும் மெருகு கூடும். ஒரே வெளிர் நீல / சாம்பல் நிறத்தைப் பார்த்துக் கண்கள் கவனத்தைத் தராமல் போகக் கூடும் என்பதால் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்குச் சற்று மாறுபட்ட நிறங்களைத் தரலாம். முதற்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பச்சை, pink நிறங்களும் பொருத்தமாக இருக்கும்--இரவி 11:21, 11 சூலை 2011 (UTC)[பதிலளி]

உதவி அறிவிப்புகள்[தொகு]

புதிய பயனர்களுக்கு விக்கி விதிகள், உதவிப் பக்கங்கள் ஆகியவற்றை அறிவிக்க:

  • நீங்கள் பங்களிக்கும் கட்டுரைகளில் இருந்து சுவையான தகவல்கள் விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்தில் இடம் பெற உங்களுக்குத் தெரியுமா திட்டப்பக்கத்தில் பரிந்துரை செய்யுங்கள்|
  • விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்த ஐயங்களை ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்|
  • விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்பம் போன்றவற்றைப் பற்றி கலந்துரையாட ஆலமரத்தடி செல்லுங்கள்|
  • ஒரு கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை அந்தக் கட்டுரையின் பேச்சுப் பக்கங்களில் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட பயனருடன் உரையாட விரும்பினால் அவரின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.|
  • பொருத்தமான தமிழ் கலைச்சொற்களை தெரிந்து கொள்ள விக்சனரியைப் பயன்படுத்துங்கள். இது குறித்த ஐயங்களை கலைச்சொல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.
அடுத்து வருவன
  • படிமம் பதிவேற்றல்
  • ஐந்து தூண்கள்
  • எம்மாதிரியான கட்டுரைகள் வேண்டும்
  • அ.கே.கே

தள அறிவிப்புகளுக்கு ஓய்வு[தொகு]

கடந்த சில மாதங்களாகவே தள அறிவிப்பில் தொடர்ந்து பங்களிப்பாளர் அறிமுகம், பங்களிப்புத் தூண்டல்கள், நன்கொடை வேண்டல், விக்கிமீடியா அறிவிப்பு, ஊடகப் போட்டி அறிவிப்பு என ஏதாவது ஒரு பதாகையை இட்டு வருகிறோம். எனவே, மார்ச்சு 1, 20102 முதல் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு இதற்கு ஓய்வு கொடுக்கலாம் என நினைக்கிறேன். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு பதாகை இருந்தால் நாட்போக்கில் வாசகர்கள் அதைக் கண்டும் காணாமல் படிக்கும் நிலைக்கு ஆளாவர். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த தள அறிவிப்பின் விளைவுகளைச் சரியாக அளப்பதற்கான நுட்பத்தையும் மேம்பட்ட அறிவிப்புகளுக்கான வாய்ப்புகளையும் ஆயலாம். தமிழ் விக்கிமீடியாவின் மற்ற திட்டங்களின் தள அறிவிப்புகளில் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கான பங்களிப்புத் தூண்டல்களை இடுவதற்கான ஒப்புதல்களைப் பெற்று வருகிறேன். எனவே, தள அறிவிப்பின் மூலமான புதுப் பங்களிப்பாளர் வரத்து ஓரளவு குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். நன்றி--இரவி 10:19, 21 பெப்ரவரி 2012 (UTC)

 ஆதரவு - 1 மாத ஓய்வு ஸ்ரீகாந்த் 11:16, 21 பெப்ரவரி 2012 (UTC)
 ஆதரவு - 1 மாத ஓய்வு. (ஊடகப் போட்டி முடிவுகளை அறிவிக்க அடுத்ததாகப் பயன்படுத்தலாம்) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:19, 21 பெப்ரவரி 2012 (UTC)