விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்/2024

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை ஆழத்தில் ஏற்படும் தொடர் முன்னேற்றம்[தொகு]

  • 08-ஏப்பிரல்-2024 அன்று 34.85
  • 05-மே-2024 அன்று 35

மூலம்: Wikipedia article depth

50 எனும் இலக்கு[தொகு]

முந்தைய உரையாடல்களைக் கவனிக்கும்போது, ஆழத்தின் அளவு 29 (10-செப்டெம்பர்-2012), 30 (20-அக்டோபர்-2012) என்பதாக இருந்துள்ளது. 50 எனும் அளவினை எட்டியதாக எங்கும் குறிப்புகள் இல்லை. இந்தாண்டின் இறுதிக்குள் 50 எனும் ஆழ அளவினை இலக்காகக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியர்கள் செயல்படலாம். இந்த இலக்கை அடைந்தால், உலகளவில் 65-ஆவது இடத்திலிருந்து 55-ஆவது இடத்திற்கு வர இயலும். இந்த முயற்சியின்போது நாம் பெறும் நடைமுறைப் பட்டறிவு (practical experience), அடுத்தக் கட்டம் நோக்கி நகர்வதற்கு பெரிதும் உதவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:30, 9 மே 2024 (UTC)[பதிலளி]