விக்கிப்பீடியா பேச்சு:சூன் 14, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்படி திகதி இடுவது மனிதருக்கு பயன் இல்லை. சூன் 14, 2009 ... என்று சொல்வதே விக்கி வழக்கம். --Natkeeran 23:32, 3 ஜூன் 2009 (UTC)

பாக்க: en:Wikipedia:Manual_of_Style_(dates_and_numbers)

சுட்டிக்காட்டியதற்கு நன்றி, நற்கீரன். திருத்தி உள்ளேன்--ரவி 02:33, 4 ஜூன் 2009 (UTC)

== பட்டறை பற்றிய குறிப்புகள் ==

பட்டறையும் முந்தைய நாள் கூட்டமும் எப்படி நடந்தன என அறிய ஆவல். ரவியும் கலந்து கொண்டவர்களும் தங்கள் கருத்துக்களைப் பதிய வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:50, 15 ஜூன் 2009 (UTC)

சுந்தர், இரு நாள் நிகழ்வுகளும் மிகுந்த மன நிறைவைத் தந்தன். கூடிய விரைவில் விரிவாக எழுதுகிறேன். இப்ப தலை 'விக்கி விக்கி'னு சுத்துது :) செல்வம் தமிழ், பரிதிமதி, அருநாடன் ஆகியோரை கருத்துகள் பகிர அழைக்கிறேன்--ரவி 15:34, 15 ஜூன் 2009 (UTC)
மொட்டைமாடிக் கூட்டமும் சரி, பட்டறையும் சரி - நீண்ட நாட்களுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நான் கழித்த நாட்கள். கிழக்கு பதிப்பகத்திற்கும் கிருபாவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி. ரவியின் தீர்க்கமான பார்வையை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பட்டறைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை நான் எதிர்பார்த்ததைவிடக் குறைவு எனினும் வந்தவர்களில் ஐம்பது சதவிகிதம் நண்பர்கள் பங்களிப்பைத் தொடங்கினாலும் கூட பட்டறையின் நோக்கம் ஈடேறி விடும்.
வெகுசன பத்திரிகைகள், ஊடகங்கள் விக்கியைப் பற்றி அவ்வப்போது பேசுமாறு செய்வது நல்லது. ஓய்வு பெற்ற ஆர்வலர்கள், இல்ல உருவாக்கியர்கள், பள்ளி மாணவர்கள்[ இந்த இலக்கு இப்போது என் பார்வையில்! ], கல்லூரி மாணவர்கள் [தமிழ் விக்கியில் பங்காற்றுவதை பெருமையாக எண்ணுமளவிற்கு(வலைப்பதிவு அளவிற்கு) மாணவர்களை ஈர்க்க வேண்டும்], குடிமுறை அரசுப்பணிக்கு ஆயத்தம் செய்பவர்கள் ஆகியோருக்கு விக்கியைப்பற்றி தெரியப்படுத்தினால் போதும். இவர்களின் பங்களிப்பு பெருமளவிற்கு இருக்கும் --பரிதிமதி