விக்கிப்பீடியா பேச்சு:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'செய்முறை விமரிசனம்' (Practical Criticism)/ Peer Review[தொகு]

ஒரு கட்டுரை பூர்த்தி என்று பிரதான ஆக்கர் அல்லது ஆக்கர்கள் கருதும் இடத்து, அக் கட்டுரையை விமர்சனத்துக்கு விடுதல் நன்று. விமர்சனத்தின் போது பிற பயனர்கள் சற்று கடுமையாக பகுத்தாய்து அலோசனை வழங்குதல் நன்று. நடுநிலமை, மொழியாக்கம் (இலக்கணம் உட்பட), தகவல் செறிவு, வடிவமைப்பு, அதாரங்கள் போன்ற அம்சங்களை வைத்து விமர்சனம் மேற்கொள்ளலாம். இப்படிப்பட்ட விமர்சனங்கள் கட்டுரை எழுதப்படும் போதும் தரப்பட்டாலும், சில முக்கிய கட்டுரைகளை இப்படியான ஒரு செயல்பாட்டுக்கு உட்படுத்துவது அவற்றின் தரத்தையும், நம்பிக்கையையும் உறிதிப்படுத்தும்.

இத்தேவையை தற்பொழுது உள்ள சிறப்புக்கட்டுரை நியமன நடைமுறைகள் உறுதி செய்கின்றன.--ரவி 16:16, 17 டிசம்பர் 2005 (UTC)
ஆம். சிறப்புக் கட்டுரைகள் நியமனத்தில் நாம் கூடுதல் ஆர்வம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில விக்கியில் இந்தியக் கூட்டுமுயற்சிக் கட்டுரை ஒன்றை ஒவ்வொரு வாரமும் தெரிவு செய்து அதைச் சிறப்புக் கட்டுரையாக்க முயல்கின்றனர். நாம், ஏற்கெனவே நல்ல நிலையில் உள்ள பல கட்டுரைகள் மீது சிறிது அக்கறை செலுத்தினால் அவற்றை சிறப்புக் கட்டுரைகளாக்கலாம். -- Sundar \பேச்சு 06:19, 20 டிசம்பர் 2005 (UTC)

--Natkeeran 05:44, 19 மே 2006 (UTC)[பதிலளி]

Is India a Featured Article?[தொகு]

I have mistakenly displayed India as Featured Article, before it being formerly qualified. Would some one clarify whether India can still be considered a Featured Article or does it still need substantial edits. Thanks. --Natkeeran 21:05, 13 மார்ச் 2006 (UTC)

இந்தியா கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிப்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. -- Sundar \பேச்சு 06:50, 14 மார்ச் 2006 (UTC)
வேறு யாரும் மறுப்பு தெரிவிக்காததாலும், தற்போதைய நிலையில் இக்கட்டுரையின் தரம் நமது பல பிற கட்டுரைகளை விட நன்றாக உள்ளதாலும், இதைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். -- Sundar \பேச்சு 11:26, 16 மார்ச் 2006 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் சுட்டிகள்[தொகு]

புதிய சிறப்புக் கட்டுரைகள் இனங்காணல்[தொகு]

தமிழ் விக்கியில் சிறப்புக் கட்டுரைகள் இனங்கண்டு ஆண்டுகள் ஆகின்றன. புதிய கட்டுரைகள் இனங்காணல், நியமனம், முடிவு எடுத்தலை மீண்டும் செய்யத் தொடங்கலாம். இந்த நியமனப் பக்கத்தில் நீண்ட நாளாகப் பரிந்துரையில் உள்ள, திருத்தங்கள் செயற்படுத்தப்பட்ட ஜிமெயில், கம்போடியா கட்டுரைகளை உடனடியாக சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம்--ரவி 06:55, 31 ஜூலை 2009 (UTC)

ஆம், இவற்றையும் பொனொபோ கட்டுரையையும் கூட சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம் எனக் கருதுகிறேன். மேலும் பல நல்ல கட்டுரைகள் அண்மையில் எழுதப்பட்டுள்ளன. அவற்றிலும் சிறப்புக் கட்டுரைகளை இனங்காண வேண்டும். -- சுந்தர் \பேச்சு 11:08, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

நியமனம் தமிழில் என்ன?[தொகு]

நியமனம் என்ற வடமொழி வழிச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் என்ன? இந்த இடத்தில் பரிந்துரை, மொழிவு, பரிவு போல மாற்றலாமா? -- சுந்தர் \பேச்சு 03:42, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

கட்டாயம் மாற்றலாம், மாற்ற வேண்டும். முன்மொழிவு என்பது வழக்கில் இருக்கும் சொல். ஒரு கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க முன்மொழிகிறேன் எனலாம். --செல்வா 03:58, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
வேறு யாருக்கும் மறுப்பு இல்லையென்றால் முன்மொழிவு என்றே மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 05:14, 5 ஆகஸ்ட் 2009 (UTC)