விக்கிப்பீடியா பேச்சு:சத்திய சோதனை போட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • தமிழ் அநிதம் அமைப்பு குறித்த முழு விவரம் தேவை.
  • போட்டிக்கு ஏன் சத்திய சோதனை என்று பெயர்?
  • தமிழ் விக்கிப்பீடியா இதில் இணைந்து செயலாற்றலாம் என்று எப்படி முடிவு செய்யப்பட்டது?
  • பரிசு அளிப்பது தவிர வேறு எந்த வகையில் தமிழ் அநிதம் அமைப்பினர் பங்களிப்பர்?

@Neechalkaran:

--இரவி (பேச்சு) 10:24, 31 மார்ச் 2020 (UTC)

@Ravidreams: http://www.tamilunltd.com/ இங்கே அந்த அமைப்பினைப் பற்றி பார்க்கலாம். இப்போட்டி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பல்வேறு கல்லூரிகளில் கணித்தமிழ் பயிற்சிகளை எடுத்து வருகிறார் என்பதால் பரிசு மற்றும் பரப்புரையில் பங்கெடுப்பார்கள். மேலும் வேறுவகைகளில் அவர்களின் பங்களிப்பு இறுதி செய்யவில்லை. எளிமையாக இருக்க வேண்டும் என்பதால் பிழை திருத்தம் என்று மட்டும் போட்டிக்கு எடுக்கிறோம். அதனால் பிழை சோதனைப் போட்டி என்று அடிப்படையில் திரைப்பட வசனத்தை எதார்த்தமாக வைத்தது, வேறு தலைப்பையும் பரிந்துரைக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பதால் விக்கிப்பீடியாவுடன் இணைந்து என்று இடப்பட்டுள்ளது, மாற்றுக் கருத்திருந்தால் அதை நீக்கிவிடலாம். அநிதம் அமைப்பின் பொறுப்பில் நடத்தலாம் அல்லது வேறு மாற்றுக் கருத்திருந்தால் போட்டியைக் கைவிடலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 11:13, 31 மார்ச் 2020 (UTC)
போட்டியின் பெயர், அதனை நடத்தும் அமைப்பு, அவர்கள் பங்களிப்பு ஆகியவற்றை நோக்கும் முன் இந்த ஊரடங்கு நேரத்தில், அதனை முன்வைத்து ஒரு போட்டி நடத்துவதே எனக்கு ஏற்பு இல்லை. இது குறித்து ஆலமரத்தடியிலும் கருத்து தெரிவித்து உள்ளேன்.
விக்கிப்பீடியா என்பது ஒரு உலகளாவிய brand value உள்ள திட்டம். இந்த brandஐ எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்று விக்கிமீடியா அறக்கட்டளை வழிகாட்டல்கள் உள்ளன. அதனுடன் மற்ற அமைப்புகள் சேர்ந்து ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறது என்றால், விக்கிப்பீடியாவால் செய்ய முடியாத ஒன்றினை அவர்கள் பங்களிப்பதாக இருக்க வேண்டும். அரசுகள், பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், கூகுள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பங்காற்றும் போது, இந்தப் பங்களிப்புத் தெளிவாக அமைகிறது. இந்தப் போட்டியின் வரைவை நோக்கும் போது, அப்படி நம்மால் செய்ய முடியாத ஒன்றை எந்த ஒரு வெளி அமைப்பும் செய்ய முடிவதாக ஒன்றும் தோன்றவில்லை. பரிசு, பரப்புரை ஆகியவை நாம் செய்யக்கூடியவையே. எல்லா போட்டிகளுக்கும் தன்னார்வலர்கள், நிறுவனங்கள் பரப்புரையில் உதவுவது போலவே இந்த அமைப்பும் உதவலாம். அறியப்படாத வெளி நிறுவனங்களுடன் தேவை இன்றி கூட்டாக இணைந்து போட்டிகள் நடத்துவது அவர்களுக்கான இலவச விளம்பரமாக அமைந்து விடக் கூடாது. அதை விட முக்கியம், யார், என்ன என்று அறியாமல் கூட்டுறவை மேற்கொள்ள நேரிட்டால் அவர்களின் செயற்பாடுக்கு விக்கிப்பீடியாவும் பொறுப்பேற்றது போல் ஆகி விடும். எனவே, தற்போது இப்போட்டித் திட்டத்தைக் கைவிடலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 11:31, 31 மார்ச் 2020 (UTC)
பயனர்கள் வேறு யாரும் ஆர்வம் கொள்ளாததால் இத்திட்டத்தைக் கைவிடுவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 02:30, 6 ஏப்ரல் 2020 (UTC)