விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரைகள் எழுதுவதற்கான வழிகாட்டல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை விக்கிப்பீடியா:கட்டுரைகள் எழுதுவதற்கான வழிகாட்டல்கள் என மாற்றப் பரிந்துரைக்கிறேன். உதவிப்பக்கங்கள் அனைத்திலும் விக்கிப்பீடியா என்ற முன்னொட்டு இருக்க வேண்டும்.--Kanags \உரையாடு 20:14, 11 மார்ச் 2010 (UTC)

ஆம். உதவிப்பக்கங்கள் அனைத்தும் விக்கிப்பீடியா என்ற முன்னொட்டு இருக்க வேண்டும்.--குறும்பன் 21:04, 11 மார்ச் 2010 (UTC)

இக்கட்டுரையையும் இப்போதைக்கு நீக்குவது நல்லது. அரசு அறிவிக்கும் முன்பாக இதையெல்லாம் சொல்வது குழப்பம் ஏற்படுத்துவதாக இருக்கும். இதனையும் உடனே நீக்கப் பரிந்துரைக்கின்றேன் (இப்போதைக்கு).--செல்வா 23:30, 11 மார்ச் 2010 (UTC)

கட்டுரைகள் எழுதுவதற்கான வழிகாட்டல்கள் என்னும் தலைப்பின் கீழ் கட்டுரையின், அமைப்பு, மொழி நடை, பக்கஞ்சாராமை, சான்றுகள் தருதல் போன்ற விடயங்களை எழுதுவது நல்லது. இந்தக் கட்டுரையில் இருக்கும் விபரங்களைப் போட்டி விதிமுறைகளின் கீழ் அவற்றின் விளக்கமாகச் சேர்ப்பது நல்லது என எண்ணுகிறேன். மயூரநாதன் 11:20, 12 மார்ச் 2010 (UTC)