விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டர் வழக்காற்றியல் கருப்பொருளுடன் (Folklore) பெண்ணியம், பெண்களின் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது.
போட்டியின் மற்ற மொழிகளின் நிலையினை இங்கு காணலாம்
விதிகள்
[தொகு]- கட்டுரைகளின் கருப்பொருள்கள் நாட்டுப்புறக் கலைகளுடன் தொடர்புடைய பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும்
- நீங்கள் உருவாக்கும் புதிய அல்லது விரிவாக்கும் கட்டுரைகள் குறைந்தது 300 சொற்களையும், 3000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும்
- புதிய கட்டுரைகள் அல்லது விரிவாக்கிய கட்டுரைகள் பிப்ரவரி 1 முதல் மார்ச்சு 31 வரையான காலத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்
- கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச்சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும்
- கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி எழுதப்பட வேண்டும்.
- கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
- கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். இயந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டா.
- கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி எழுதப்பட வேண்டும்.
- ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.
- ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பதில், ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
கட்டுரைகளை https://wordcounttools.com/ என்ற கருவி கொண்டு சொற்களின் எண்ணிக்கையை அறியலாம். (வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.) சொற்கள், பைட்டுகளைச் சரிபார்க்க நீச்சல்காரனின் [1] கருவி உதவும். கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள்.
நடைபெறும் காலம்
[தொகு]பிப்ரவர் 1, 2020 – மார்ச் 31, 2020
பரிசுகள்
[தொகு]- Tote bag/T-shirt and certificates for top 5 contributors and Jury
- Postcards (sponsored by Le Sans Pages) and barnstars for participants creating atleast 4 articles
- Internationally (Given by Les Sans Pages) for top article creators (well references and under the theme)
- 1st prize : 50 dollars
- 2nd prize : 30 dollars
- 3rd prize : 20 dollars
பங்கேற்கவும்
[தொகு]இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள்.
கருவி
[தொகு]கட்டுரைகளைப் பதிவு செய்யும் கருவி இன்னும் உருவாக்கப்படவில்லை. எனவே அதுவரை அதற்கான இந்தப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மறக்காமல் {{விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020}} என்ற வார்ப்புருவை கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் இணைத்துவிடவும்.
- கருவி வேலை செய்கிறது. எனவே மேற்கண்ட பக்கத்தில் இணைத்த கட்டுரைகளை கருவியில் ஏற்றிக்கொள்ளலாம் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:19, 14 பெப்ரவரி 2020 (UTC)
முற்பதிவு
[தொகு]நீங்கள் மேம்படுத்த/ உருவாக்க விரும்பும் கட்டுரைகளை இந்தப்பக்கத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரே கட்டுரையை இருவர் எழுதி காலமும் உழைப்பும் வீணாவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு.
தலைப்புகள்
[தொகு]கட்டுரைகளின் கருப்பொருள்கள் நாட்டுப்புறக் கலைகளை அடிப்படையாகக் கொண்டு, பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களையும் நம் தமிழ்ப் பெண்களையும் பற்றிய மேலுள்ள கருப்பொருள் சார்ந்த புதிய கட்டுரைகளும் எழுதலாம்.
ஒருங்கிணைப்பு
[தொகு]திட்டத்தின் ஒருங்கிணைப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழே பதிவு செய்க.
- பார்வதிஸ்ரீ
- நீச்சல்காரன்
- R.Karthika Devi
- R.Karthika Devi Ram