விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் பள்ளிகள்/கட்டுரை ஆலோசனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கித் திட்டம் பள்ளிகள் கட்டுரை ஆலோசனை, என்பது பயனர்களுக்கு பொதுவான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன் பள்ளிக் கட்டுரைகளின் உள்ளடக்கம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதையும் விவரிக்கிறது.

குறிப்பிடத்தக்கமை[தொகு]

குறிப்பிடத்தக்கமை என்பதற்கு காலின்ஸ் இணைய அகராதியில், தனித்துவமானது; மேன்மை வாய்ந்த; நினைவுகூரப்படுவதற்கு தகுதியானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. [1]

ஒரு பள்ளி குறிப்பிடத்தக்கதாகவோ தனித்துவமாகவோ இருக்க வேண்டியதில்லை, அது கவனிக்கப்படுவதற்கு தகுதியானதாக இருக்க வேண்டும். சுயாதீனமான நம்பகமான ஆதாரங்களில் குறிப்பிடத்தக்க செய்திகளைப் பெற்றுள்ளதா என்பதனைப் பொறுத்து, ஒரு தனிக் கட்டுரையாக எழுதும் அளவிற்கு ஒரு பள்ளி குறிப்பிடத்தக்கமை கொண்டுள்ளதா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

தனிப்பட்ட கட்டுரைகள் பொதுவாக விக்கிப்பீடியா குறிப்பிடத்தக்க வழிகாட்டுதல் அல்லது நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒன்றையாவது நிச்சயம் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இரண்டையும் பூர்த்தி செய்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

நடைமுறையில், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்வி மாவட்டங்கள் பற்றிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவையாகவே கருதப்படுகின்றன. புரளிகளைத் தடுக்க அவற்றின் இருப்பை சரிபார்க்க முடியாவிட்டால் அவை நீக்கப்படலாம். கல்வி நிறுவனங்களில் உள்ள கட்டுரைகள் , விரைவான நீக்குதல் A7 அளவுகோலில் இருந்து முறையாக விலக்கு அளிக்கப்படுகின்றன, ஆனால் முற்றிலும் பொருத்தமற்ற கட்டுரைகள், பிற பொதுவான அல்லது கட்டுரை அளவுகோலின் கீழ் நீக்கப்பட வேண்டும்.

  1. உங்கள் மணல்தொட்டியில் கட்டுரையினை எழுதிப் பழகுங்கள். சந்தேகம் இருந்தால் இந்தத் திட்டத்தின் பங்களிப்பாளர்களிடம் கேளுங்கள்.
  2. பாணி. உரைநடையை 'சரியாகப்' பின்பற்றுங்கள். இது ஒரு கலைக்களஞ்சியம் பத்திரிகை அல்லது வலைப்பதிவு பாணியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 'நாங்கள்' என்பதனைப் பயன்படுத்த வேண்டாம்.
  3. விளம்பரங்களைத் தவிர்க்கவும். உங்கள் பள்ளியைப் பற்றிய விளம்பர மொழி அல்லது அதன் பிம்பத்தை உயர்த்தும் சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உங்களது பள்ளியின் ஒரு பள்ளி சிற்றேடு, வலைத்தளம் அல்லது முகநூல் பக்கம் அல்ல.
  4. மூன்று வரிக்கும் குறைவான கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். இன்னொரு நபர் விரிவாக்குவார் எனும் நோக்கத்தில் இரு வரிக் கட்டுரைகளை உருவாக்காதீர்கள். கட்டுரை நீக்கப்படுவதால் உங்கள் நேரம் வீணாகலாம்.
  5. மிகக் குறுகிய செய்திகல் உள்ள துணைத் தலைப்புகளைத் தவிர்க்கவும். வெற்றுத் தலைப்புகள் நீக்கப்படும்.
  6. தெளிவற்ற தன்மையைத் தவிர்க்கவும். முன்னணிப் பிரிவில் உங்கள் பள்ளியின் நாட்டைச் சேர்க்கவும். விக்கிப்பீடியா உலகளவில் படிக்கப்படுகிறது. எல்லோரும் ஒரே மாதிரியான தமிழைப் பேசுவதில்லை, சில சொற்கள் வெவ்வேறு நாடுகளில் மிகவும் மாறுபட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக சில இடங்களில்/ நாடுகளில் மேல்நிலைக் கல்வி என்பது கல்லூரிக் கல்வியினைக் குறிக்கலாம். நாள் எப்போதும் முழுமையாக எழுதப்பட வேண்டும், அதாவது 18 ஆகஸ்ட் 1990. சுருக்கச் சொற்கள் முதல் நேர்விலேயே முழுமையாக எழுதப்பட வேண்டும். மேலும் உள்ளூர் சொற்கள் ஏதேனும் இருந்தால் அவை விளக்கப்பட வேண்டும் அல்லது விக்கி இணைப்பு இணைக்கப்பட வேண்டும். விக்கி இணைப்புகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள், நீங்கள் விவரிக்கும் கல்வி முறைக்கு உள்ளடக்கம் பொருந்துமா என்பதைச் சரிபார்க்கவும். எடுத்துக்காட்டாக, பிரித்தானியப் பள்ளி அமைப்பில் K என்ற எழுத்து முக்கிய கட்டத்திற்கான சுருக்கமாகும், ஆனால் அமெரிக்காவில் மழலையர் பள்ளி என்பதற்கான சுருக்கமாகும். மழலையர் பள்ளி என்பது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஒரு முன் பள்ளி, ஆனால் வட அமெரிக்காவில் பள்ளி அமைப்பின் ஒரு பகுதியாகும். இங்கிலாந்தில் ஒரு ஆரம்பப் பள்ளி என்பது 13 வயது வரையிலான மாணவர்களுக்கு ஒரு சுயாதீனமான (தனியார்) ஆரம்ப/தொடக்கக் கல்வி வழங்குவதாகும், அதே நேரத்தில் அமெரிக்காவில் ஓர் ஆரம்பப் பள்ளியானது பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இலக்கணப் பள்ளி என்பது ஐரோப்பாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப் பள்ளி, ஆனால் வட அமெரிக்காவில் ஒரு தொடக்கப் பள்ளி.
  7. இணைப்பைத் தவிர்க்கவும். கட்டுரையைப் புரிந்துகொள்ள விக்கிலிங்க்குகள் உதவுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விக்கிபீடியா பாணியின் கையேட்டைப் பின்பற்றுங்கள் மற்றும் சூழலுக்கு பொருத்தமான இணைப்புகளை மட்டுமே உருவாக்கவும். அத்தகைய இணைப்பைச் சேர்ப்பது கட்டுரைக்கு குறிப்பிட்ட பொருத்தமாக இல்லாவிட்டால், நாட்கள், மாதங்கள், ஆண்டுகளுக்கான இணைப்புகளை பள்ளிக் கட்டுரைகளில் இணைப்பாகக் கொடுக்கக் கூடாது.
  8. ஒரு வலுவான முன்னுரையை எழுதுங்கள். பள்ளியைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவருக்கு அர்த்தமுள்ள ஒன்று அல்லது இரண்டு பத்திகளாக பள்ளியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறும் ஒரு முன்னுரையை எழுதுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் பள்ளி அமைந்துள்ள நாட்டைச் சேர்க்க நினைவில் கொள்ளுங்கள்.
  9. உங்கள் பங்களிப்புகளை ஆதரிக்கவும். நீங்கள் ஒரு பள்ளியைப் பற்றி ஒரு கட்டுரையைத் தொடங்குவதற்கு முன்பு, அல்லது கூடுதல் சேர்க்கைகளைச் செய்வதற்கு முன், பள்ளியைப் பற்றிய போதுமான அளவு சரிபார்க்கக்கூடிய தகவல்களை முதலில் வைத்திருக்க வேண்டும் என்று கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது.
  10. படங்கள்.: படங்கள், சின்னங்கள் அல்லது இலச்சினைகள் பயன்படுத்துவது கட்டுரைகளை பெரிதும் மேம்படுத்தும், ஆனால் அவை தலைப்பை விளக்க உதவும்போது மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம். அவை இலவசமாக உரிமம் பெற்றவை அல்லது பொது உரிமக் களத்தில் இருப்பதை உறுதிசெய்யவும். (பார்க்கவும்: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்). பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இதைச் செய்வதற்கான ஒரே வழி, உரிமம் பெறுவதற்கான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நீங்களே புகைப்படத்தை எடுத்து பதிவேற்றம் செய்வதாகும். முகடுகள், சின்னங்கள் அல்லது இலச்சினைகள், தகவற்பெட்டி பிரிவில் உள்ள சிறப்பு வழிமுறைகளைப் பார்க்கவும்.
  11. தகவல் பெட்டி. விக்கிப்பீடியா தகவல் பெட்டிகள் பல பக்க வகைகளில் ஒரு முக்கிய அங்கமாகும். அத்தியாவசிய பள்ளித் தகவல்களின் கண்ணோட்டத்தை அவை அனைத்து பள்ளிக் கட்டுரைகளுக்கும் பொதுவான வடிவத்தில் வழங்குகின்றன.
  12. புதிய கட்டுரையினைக் கவனிக்கவும்: நீக்கல் வார்ப்புரு உடப்பட்டுள்ளதா என்பதனைப் பார்க்கவும்..
  13. உங்கள் கட்டுரைக்கு அடிக்கடி திரும்பவும். ஒரு விக்கிப்பீடியா கட்டுரை, மற்ற கலைக்களஞ்சியங்களைப் போலவே, எப்போதும் முன்னேற்றத்தில் இருக்கும் ஒரு படைப்பாகும். தலைமை ஆசிரியர்கள் மாறுகின்றனர், மாணவர்களின் எண்ணிக்கை மாறுகிறது, புதிய ஆய்வுகள் வெளியிடப்படுகின்றன, சில மேனாள் மாணவர்கள் (முன்னாள் மாணவர்கள்) பிரபலமடைகிறார்கள், யாராவது உங்கள் திருத்தங்களை மாற்றி உங்கள் படைப்புகளை சேதப்படுத்தியிருக்கலாம்.
  14. சிறு கட்டுரைகளைத் தவிர்க்கவும். வெறும் கட்டுரை எண்ணிக்கைக்காக மூன்று வரிக்கும் குறைவான கட்டுரைகளை உருவாக்கினால் நீங்கள் தடுக்கப்படலாம்.
  15. பள்ளி ஏன் தனித்துவமானது என்பதை விளக்குங்கள். ஒரு நல்ல பள்ளிக் கட்டுரையை எழுதுவதற்கான திறவுகோல், மற்ற பள்ளிகளிலிருந்து அதை வேறுபடுத்துவது என்ன என்பதை விளக்குவதாகும்.
  16. உதவி பெறுங்கள்: விக்கிப்பீடியா:[[விக்கித்திட்டம் பள்ளிகள்/உதவி உரையாடல்]] இல் உதவி கேட்கலாம். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயலில் உள்ள உறுப்பினர்களின் பல்வேறு பட்டியல்களைப் பாருங்கள் மற்றும் அவர்களின் பேச்சு பக்கத்தில் உதவி கேட்க தயங்க வேண்டாம்.
  17. தைரியமாக இருங்கள்! நீங்கள் ஏற்கனவே விக்கிப்பீடியா பக்கங்களைத் திருத்தியிருந்தால், நல்ல கட்டுரைகள் எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இறுதியில், நல்ல நம்பிக்கையோடு சில நல்ல கட்டுரைகளை எழுதுங்கள்! வாழ்த்துகள்.

நடுநிலை நோக்கு[தொகு]

பள்ளியை விவரிக்கும் போது நடுநிலையான கண்ணோட்டத்தை பராமரிப்பதில் கவனமாக இருங்கள். தெளிவற்ற பாராட்டு மற்றும் அதிகப்படியான விளக்கமான உரிச்சொற்கள், ஆதாரமாக இருந்தாலும், அதனைத் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனமோ, பள்ளிக் கட்டுரைகள் ஒருபோதும் விளம்பரப் பொருளாகத் தோன்றக்கூடாது.

பணி அறிக்கைகள் (தேர்ச்சி விழுக்காடு) மற்றும் இலக்குகளை தவிர்க்கவும், ஏனெனில் அவை பொதுவாக விளம்பரமாகவே கருதப்படும்.

பள்ளிகளை மற்ற பள்ளிகளோடு (விளையாட்டு முடிவுகள், தேர்வு முடிவுகள்) ஒப்பிடுவதைத் தவிர்க்கவும். சில உதாரணங்கள்:

  • "பள்ளி X ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது."
  • "பள்ளி X தொடர்ந்து மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகும்."
  • "பள்ளி X நாட்டிலேயே குறைந்த சேர்க்கை விகிதங்களைக் கொண்டுள்ளது."
  • "பள்ளி X 98% தேர்ச்சி பெற்றுள்ளது, 12 மைல் தொலைவில் உள்ள பள்ளி Y 75% மட்டுமே பெற்றுள்ளது."

X, Y மற்றும் Z பல்கலைக்கழகங்களில் இடம் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அல்லது எண்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Notable definition and meaning | Collins English Dictionary". www.collinsdictionary.com. Collins. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.