விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 10, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசாதி கோபுரம் என்பது ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரிலுள்ள நினைவுச் சின்னம் ஆகும். இது நகருக்கான மேற்கு நுழைவாயில் அடையாளமாகவும், நகரின் அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது. 2,500 வருட ஈரானிய முடியாட்சியை நினைவு கூர்வதற்கான விழாவுக்காக 1971 இல் இது கட்டப்பட்டது. "தெஹ்ரானுக்காக நுழைவாயிலான இது "சஹ்யாது" (மன்னரின் நினைவிடம்) என முகம்மத் ரிசா ஷா பஹ்லவியைப் பெருமைப்படுத்தும் விதமாகப் பெயரிடப்பட்டிருந்தது. மேலும்...


யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி இந்தோனேசியாவிலுள்ள சிறப்புநிலை தன்னாட்சி மாகாணங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைநகர் யோக்யகர்த்தா நகரம். தனி நிர்வாகப் பகுதியானாலும் இது வரலாறு மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் நடு-ஜாவாவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. ஜாவானிய-இந்துப் புராணங்களிலுள்ள அயோத்தி நகரின் பெயரால் இது யோக்யகர்த்தா என வழங்கப்படுகின்றது. மேலும்..