விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 18, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கைச் சிறுத்தை என்பது இலங்கையை தாயகமாகக் கொண்ட சிறுத்தை துணையினமாகும். வனவிலங்கு வர்த்தகம், மனித-சிறுத்தை முரண்பாடு என்பவற்றால் இதன் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இச்சிறுத்தை இனத்தை அருகிய இனம் என பட்டியலிட்டுள்ளது. 250 மேற்பட்ட எண்ணிக்கையில் இவை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இலங்கைச் சிறுத்தை துணையினம் பற்றி முதன் முதலில் 1956 இல் இலங்கை விலங்கியலாளரான போலஸ் எட்வட் பீரிஸ் தெரனியாகலை என்பவரால் குறிப்பிடப்பட்டது. மேலும்...


தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளும், தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுள்ள நாடுகளும் உள்ளன. உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்திராவிட மொழியிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர். உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். மேலும்...