விக்கிப்பீடியா:தடுக்கப்பட வேண்டிய பயனர் கணக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலமுறை அறிவுறுத்தப்பட்டும், பயனர்:இரத்தினவேலு தொடர்ந்து கலைக்களஞ்சிய நடைக்கு புறம்பாக பங்களிப்பு செய்து வருகிறார். அவருடைய பங்களிப்புகளை பரிசீலித்த பின் அவருடைய பயனர் கணக்கை முடக்கலாமா வேறு வழிகளில் அவரை நன்முறையில் பங்களிக்க செய்யலாமா என்பது குறித்த உங்கள் ஆலோசனைகளை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். எவருக்கும் ஆட்சேபணை இல்லா பட்சத்தில் இன்னும் 7 நாட்கள் அவகாசம் கொடுத்து அந்த பயனர் கணக்கை முடக்கலாம் என்பது என் கருத்து. அதற்கு பிறகும் தொடர்ந்து அவரிடமிருந்து வேறு பயனர் கணக்குகளின் வழியாகவோ பிற பயனர்களிடமிருந்தோ வரக்கூடிய ஒழுங்கற்ற பங்களிப்புகளை கட்டுப்படுத்துவது குறித்தும் உங்கள் ஆலோசனைகளை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்--ரவி (பேச்சு) 15:50, 13 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

இப்பயனரின் பயனர் பக்கம், வலைப்பதிவு போன்றவற்றை பார்த்த பிறகு இவர் திருச்சியைச் சேர்ந்த ஐம்பது வயதைத் தாண்டிய, ஓரளவே ஆங்கில அறிவு உடைய, சமீபத்திலேயே இணையத்தை அறிந்து கொண்ட, தனக்கு தெரிந்தவற்றை மற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் ஆவல் உடைய மனிதர் என்பது நான் தெரிந்து கொண்டது. உண்மையில் இவரைப்போன்ற பயனர்கள் பெருக வேண்டும் என்பதே என் ஆவல். இவர் வேண்டுமென்றே ஒழுங்கற்ற பங்களிப்புகளை செய்கிறார் என்று கூறிவிட முிடியாது. கலைக்களஞ்சிய, மற்றும் விக்கிபீடிய நடை, விதிமுறைகள், வழக்கங்களின் அறியாமையாலேயே இவருடை பங்களிப்புகள் ஒழுங்கில்லாமல் இருக்கிறது என்று தோன்றுகிறது. எனக்கென்னவோ இவர் விக்கிபீடியாவை வலைப்பதிவு போல் நினைத்துக்கொண்டார் என்றே தோன்றுகிறது. இவர் ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் அவ்வளவாக கை வைப்பதில்லை என்பதை கவனிக்கவும். தான் செய்த பங்களிப்பை மற்றோர் மாற்றும் போதும் அதை இவர் பெரிது படுத்துவதில்லை என்பது திராவிடர் கட்டுரையின் வரலாற்றை பார்த்தால் தெரியும். இவர் உருவாக்கிய சிகாகோ, தொடர்ச்சி போன்ற கட்டுரைகளை நீக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர் தொடங்கிய வேலு நாச்சியார், வாஞ்சிநாதன், வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற கட்டுரைகளை சுத்தம் செய்து விக்கி நடையில் கொண்டு வரலாம். அனைவரும் ஒழுங்கான பங்களிப்புகளையே அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடது. இவர் போன்ற பயனர்களையும் அரவணைத்துக் கொள்வதே விக்கிபீடியாவின் பலம். இவருடைய பேச்சு பக்கத்தில் கடும் எச்சரிக்கைகள் செய்வதற்கு பதில் அவரிடம் கனிவுடன் பேசி விக்கிபீடியா பற்றி எடுத்துக் கூறலாம். பிறகும் இவருடைய பங்களிப்புகளில் சார்புடைய கருத்துகள் இருக்கலாம், ஆனால் அதை உடனே சரி செய்து விடலாம். அதற்கு மாறாக இவர் பயனர் கணக்கை முடக்குவது தீர்வாகிவிடாது. அவ்வாறு செய்தால் தான் இவர் ஆத்திரப்பட்டு புகுபதிகை செய்யாமல் மற்ற கட்டுரைகளையும் கெடுக்க முயற்சிக்கலாம். ஒரு பயனரின் கணக்கை முடக்குவது என்பது இயன்றவரை தவிர்க்கப்பட வேண்டும். ஒருவர் வேண்டுமென்றே வெகு வேகமாக (மணிக்கு ஐம்பது பக்கங்கள் போன்ற விகிதத்தில்) நல்ல கட்டுரைகளை கெடுக்கும் போது வேண்டுமானால் இவ்வாறு செய்யலாம். அப்போதும் அவரிடம் முதலில் பேசி, பிறகும் அவர் கேட்கவில்லையென்றால், வேறு வழியில்லாத போதே கடைசி நடவடிக்கையாக அவர் கணக்கை முடக்கலாம். -ஸ்ரீநிவாசன் 05:57, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
அவர் அண்மையில் பயனர் பக்கத்தை உருவாக்கும் வரையில் நானும் அவர் வேண்டுமென்றே சரியற்ற பங்களிப்புகளைச் செய்கிறார் என்றே எண்ணியிருந்தேன். இப்பொழுதுதான் அவர் விக்கிபீடியாவைப் பற்றி அறியாததால் தான் இவ்வாறு செய்கிறார் என்று அறிந்தேன். நானே சென்று பழைய எச்சரிக்கைகளை அழித்துவிட்டு நயமாகப் பேசலாம் என்று நினைத்திருந்தேன். கண்டிப்பாக அவ்வாறே செய்வோம். அவருக்கு விக்கிபீடியாவின் நோக்கத்தைத் தெளிவாக அறிவுறுத்துவோம். அவர் அக்கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் நம் பயனர் பரம்பலில் ஒரு மூத்த, மாறுபட்ட கருத்துக்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் கல்வி தொழில் அனுபவங்களையும் கொண்ட ஒருவர் இணைய வாய்ப்புண்டு. அதை நாம் பயன் படுத்திக் கொள்ளலாம். முதலில் நடையைத் தெளிவுபடுத்தினாரென்றால் விவசாயத் துறையில் அவரை பங்களிக்கத் தூண்டுவோம். வரலாறு மற்றும் இடங்களைப் பற்றிய கட்டுரைகளில் நடுநிலைமையை எதிர்பார்க்க முடியாது.
நம்மால் சமாளிக்க முடிந்த அளவு பங்களிப்புகளைச் செய்யும் எந்த பயனரின் கணக்கையும் முடக்காமல் அப்பங்களிப்புகளை மட்டும் முன்னிலையாக்கவோ முன்னேற்றுவதோ நல்லது. -- Sundar \பேச்சு 06:52, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

ஸ்ரீநிவாசன், Sundar உங்கள் நிதானமான கருத்துகளுக்கு நன்றி. நான் கடைசியாக அவருடைய பேச்சுப்பக்கத்தில் செய்த அறிவுறுத்தலில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஒத்தாசை பக்கத்தில் கேட்குமாறு கூறியிருந்தேன். அதன் பிறகும் தன் செய்கைகளை திருத்திக் கொள்ள முனையாமல் தொடர்ந்து பழைய மாதிரியே பங்களித்து வந்ததால் தான் இந்த உரையாடலை ஆரம்பிக்க நேர்ந்தது. ஸ்ரீநிவாசன் அவருடைய வயது, அனுபவம் குறித்து கூறியுள்ள விடயங்கள் கருத்தில் கொண்டு, மேலும் அவரிடம் நயமாக எடுத்துக்கூற முனையலாம் என்று விரும்புகிறேன். ஆனால், பேச்சுப்பக்கத்தில் கொடுக்கும் செய்திகளை அவர் படிக்கிறாரா என்று தெரியவில்லை. இந்தியாவில் இருக்கும் எவரும் அவருடன் நேரில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விக்கிபீடியா பாணி, கொள்கைகள் குறித்து விளக்க முயலலாம். அவருடைய வலைப்பதிவிலும் மின்னசணலிலும் இது குறித்து பதியலாம். அவருடைய சிகாகோ, தொடர்ச்சி பக்கங்களை விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் என்ற தலைப்புக்கு நகர்த்தலாம். எனினும் முழு சொற்பொழிவையும் சேமித்து வைக்கும் இடமாக விக்கிபீடியா இருக்கலாமா என்பதில் எனக்க் தெளிவில்லை. அவருடைய மற்ற கட்டுரைகள் பெரும்பாலும் குறிப்பிட்ட சாதி சார்ந்து எழுதப்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. அவற்றை துப்புரவு செய்தல் அவசியம்--ரவி (பேச்சு) 09:36, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

முழு சொற்பொழிவையும் விக்கிசோர்ஸுக்கு ([1]) நகர்த்திவிட்டு ஒரு அறிமுகத்தை மட்டும் இங்கே வைத்துக் கொள்ளலாம். நான் அவரது பேச்சுப் பக்கத்தில் சில செய்திகளை விட்டுள்ளேன். நீங்களும் தேவையானவற்றைக் கூறுங்கள். கொள்கைப் பக்கங்களை மொழிபெயர்க்கவும் இற்றைப்படுத்தவும் வேண்டிய தேவையை இது விளக்குகிறது. -- Sundar \பேச்சு 09:53, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

இது குறித்து எனக்கும் இரத்தினவேலுவுக்கும் இடையில் நடந்த மின் மடல் உரையாடலை அவருடைய பேச்சுப்பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். சுந்தர் சொன்னது போல் விக்கிபீடியா கொள்கை விளக்க பக்கங்கள், நடைப்பக்கங்களை விரிவாக்கி தமிழாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.--ரவி (பேச்சு) 10:34, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]