விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 2, 2011
Appearance
கிரிஸ் கத்தி மலாய் தீவு கூட்டங்களில் வாழும் மக்களின் பாரம்பரிய கத்தியாகும். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை, ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் முன்னர் பயன்படுத்தப்பட்ட போதிலும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. மற்ற கத்திகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இது வடிவத்தில் அதிகளவில் வேறுபட்டிருக்கும்; நெளிவு நெளிவாக முறுக்கியபடியான அமைப்பைக் கொண்டிருக்கும். இது இரும்பினால் செய்யப்படுகிறது. படத்தில் உள்ள கிரிஸ் கத்தியின் பிடியில் சாவகத் தொன்மவியல் பாத்திரமான செமாரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. |