வா. ப. சிவக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வா. ப. சிவக்குமார்
பிறப்பு(1947-05-15)15 மே 1947
மாவேலிக்கரா, ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா
இறப்பு27 சூலை 1993(1993-07-27) (அகவை 46)
திருவனந்தபுரம், கேரளா
பணிசிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்
பெற்றோர்
  • பத்மநாபன் நாயர் (தந்தை)
  • ஜானகி அம்மா (தாயார்)
வாழ்க்கைத்
துணை
கீதா

வாழப்பிள்ளியில் பத்மநாபன் நாயர் சிவகுமார் (Vazhappilliyil Padmanabhan Nair Sivakumar) (1947 - 1993) என்கிற வா. ப. சிவகுமார் ஓர் இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் தனது சிறுகதைகள் மூலம் மலையாள இலக்கியத்தில் ஒரு புதிய உணர்வைக் கொண்டு வந்தார். நான்கு சிறுகதைத் தொகுப்புகளைத் தவிர, இவர் நையாண்டி கட்டுரைகளின் தொகுப்பையும் வெளியிட்டார். மேலும், ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ், யூஜின் அயோனெஸ்கோ ஆகியோரின் பல படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.

சுயசரிதை[தொகு]

சிவகுமார், 15 மே 1947 அன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள மாவேலிக்கரையில் பொழராமத் பத்மநாபன் நாயர் - தெக்கே வாழப்பிள்ளியில் ஜானகி அம்மாவுக்குப் பிறந்தார்.[1] பந்தளத்திலும் மாவேலிக்கரையிலும் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கேரளப் பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பைப் பெறுவதற்காக புனித பெர்க்மன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, இவர் 1966இல் தொலைபேசித் துறையில் சேர்ந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக இவர் பணியிலிருந்து இருந்து நிறுத்தப்பட்டார். இந்த வாய்ப்பை இவர் மேலும் படிக்க பயன்படுத்தினார் . மலையாளத்தில் முதல் தரத்துடன் முதுகலை பட்டம் பெற்று, கேரளாவிலுள்ள பல்வேறு அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றினார்.[1]

சிவகுமார், கீதா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு கிரண் சிவகுமார், நவீன் சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர் 27 ஜூலை 1993 இல், தனது 46 வயதில், புற்றுநோயால் இறந்தார்.[1]

மரபும் மரியாதையும்[தொகு]

சிவக்குமாரின் படைப்பு நான்கு சிறுகதைத் தொகுப்புகளை உள்ளடக்கியது. 1979 வெளியீடான திருவிதாங்கூர் கதைகள், அதைத் தொடர்ந்து கரயோகம் ஓட்டா, வி.பி.சிவகுமாரின்டே கதகள் ஆகியன.[2] இவர் தலஸ்தானதே அனுமன் என்ற தனது சில நையாண்டி கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார்.[3] போர்கெஸ் கதகள் என்பது சிவகுமாரால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸின் சிறுகதைகளின் தொகுப்பாகும்.[4] யூஜின் அயோனெஸ்கோவின் மூன்று நாடகங்களும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டன.[1] இவரது எழுத்துக்கள் பல விமர்சகர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.[5] வி.பி.சிவகுமார் என்ற ஆய்வை எழுதிய டி.பிரதீப் குமார் அவர்களில் ஒருவர்.[6] ஸ்மரானா (நினைவூட்டல்கள்), என்ற நூல் 2003இல் இவரைப் பற்றி வெளியிடப்பட்ட ஒரு நூலாகும்.[7]

இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக "வி.பி. சிவகுமாரின் நினைவு கேலி விருது" என்ற ஒரு இலக்கிய விருது தொடங்கப்பட்டது. கெ. ஆர். மீரா,[8] சுபாஷ் சந்திரன்,[9] எஸ். ஹரிஷ்[10] அம்பிகாசுதன் மாங்கத்[11] ஆகியோர் இவ்விருது பெற்றவர்களில் அடங்குவர்

நூலியல்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

கட்டுரைகள்[தொகு]

வா. ப. சிவக்குமரைப் பற்றிய படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  2. "List of works". Kerala Sahitya Akademi. 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  3. V. P. Sivakumar (1995). Thalasthanathe Hanuman. Kozhikode: Mulberry Publications. http://103.251.43.202:8080/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=16851. 
  4. V. P. Sivakumar (translator) (1983). Borges Kathakal. Paridhi Publications. http://103.251.43.202:8080/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=44317. 
  5. W Media (2017-11-18). "V. P. Sivakumar - Malayalam Short Story Writer - A Discussion". பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  6. D. Pradeep Kumar (2016) (in en). V. P. Sivakumar. Kerala Bhasha Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120038547. http://keralabookstore.com/book/v-p-sivakumar/10980/. 
  7. Smarana -V. P. Sivakumar. DC Books. 2003. https://www.amazon.in/Smarana-VP-Sivakumar-V-P-Sivakumar/dp/B007E4WTHC/ref=sr_1_2?s=books&ie=UTF8&qid=1553319741&sr=1-2&refinements=p_27%253AV.P.Sivakumar. 
  8. K R Meera (13 June 2017). The Gospel of Yudas. Penguin Random House India Private Limited. பக். 88–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-86057-15-0. https://books.google.com/books?id=dYQ_DAAAQBAJ&pg=PT88. 
  9. "Subhash Chandran wins Keerthi Mudra Award". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  10. "S Hareesh". Mathrubhumi. Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  11. "Ambikasuthan Mangad". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வா._ப._சிவக்குமார்&oldid=3571101" இலிருந்து மீள்விக்கப்பட்டது