வாழும் கைவினைப் பொக்கிசம் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாழும் கைவினைப் பொக்கிசம் விருது என்பது தமிழகத்தில் கைத்திறன் தொழிலில் சிறந்து விளங்கிய கைவினைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதாகும். [1]

இந்த விருது பஞ்சலோக சிற்பங்கள், பித்தளை விளக்குகள், பித்தளை கலைப் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், மர சிற்பங்கள், கற் சிற்பங்கள், சுடுகளிமண், கலம்காரி, பத்திக், அப்ளிக் துணி ஓவியங்கள், காகிதக்கூழ் பொம்மைகள், பாய் நெசவு, மூங்கில் மற்றும் பனை ஓலை பொருட்கள், நெட்டி வேலை, நார் பொருட்கள், கோயில் நகைகள், சித்திரத் தையல் வேலை போன்ற பதினாறு வகையான தொழில் செய்தவர்கள். அறுபத்து ஐந்து வயதுக்கும் மேற்பட்ட பத்து கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். [1]

விருதும் பரிசுத்தொகையும்[தொகு]

இந்த விருதுதினை பெறும் கைவினைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், தாமிர பத்திரமும், ஒரு பவுன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் தரப்படுகின்றன.

அறிவிப்பு[தொகு]

2013 இல்‌ மே 8 ஆம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் இந்த விருது குறித்தான அறிவிப்பினை வெளியிட்டார். இந்த விருதினை ஜப்பான் நாட்டில் வாழும் தேசிய பொக்கிஷங்கள் (Living National Treasures of Japan) என்ற விருதினை முன்மாதிரியாக கொண்டது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://tamil.thehindu.com/tamilnadu/சிறந்த-கைவினைக்-கலைஞர்களுக்கு-பூம்புகார்-வாழும்-பொக்கிஷம்-விருதுகள்-முதல்வர்-ஜெயலலிதா-வழங்கினார்/article6368807.ece/amp/

வெளி இணைப்புகள்[தொகு]