வால்கிரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்கிரி
இயக்கம்ப்ரையன் சிங்கர்
தயாரிப்புகிறிஸ்டோபர் மெக்குவெரி
ப்ரையன் சிங்கர்
கில்பர்ட் ஆட்லர்
கிறிஸ் லீ
கதைகிறிஸ்டோபர் மெக்குவெரி
நாதன் அலெக்சாண்டர்
இசைஜான் ஆட்மேன்
நடிப்புடாம் க்ரூஸ்
கென்னத் ப்ரனா
பில் நை
எடி இஸார்ட்
டெரன்ஸ் ஸ்டாம்ப்
டாம் வில்கின்சன்
ஒளிப்பதிவுநியூட்டன் தாமஸ் சிகல்
படத்தொகுப்புஜான் ஆட்மேன்
கலையகம்யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
விநியோகம்MGM
வெளியீடுடிசம்பர் 25, 2008 (அமெரிக்கா)
ஜனவரி 22, 2009 (ஜெர்மனி)
ஜனவரி 23, 2009 (இங்கிலாந்து)
ஓட்டம்120 நிமிடங்கள்
மொழிஆங்கிலம், ஜெர்மன்
ஆக்கச்செலவு75 மில்லியன் அமெரிக்க டாலர்
மொத்த வருவாய்US$200,276,784

வால்கிரி (Valkyrie) என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க வரலாற்று த்ரில்லர் திரைப்படம் ஆகும், இது இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜி ஜெர்மனியில் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டதாகும். அடோல்ஃப் ஹிட்லரை கொன்று விட்டு நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆபரேஷன் வால்கிரி தேசிய அவசரநிலை திட்டத்தை பயன்படுத்துவதற்கு ஜெர்மனி ராணுவ அதிகாரிகள் தீட்டிய 20 ஜூலை சதித் திட்டத்தை இந்த திரைப்படம் விவரிக்கிறது. யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் என்னும் அமெரிக்க ஸ்டுடியோ தயாரித்த இந்த வால்கிரி படத்தை ப்ரையன் சிங்கர் இயக்கினார், டாம் க்ரூஸ் சதித்திட்டத்தின் முக்கிய மனிதரான கர்னல் க்ளாஸ் வோன் ஸ்டாஃபென்பெர்க் ஆக நடித்தார். கென்னத் ப்ரனா, பில் நை, எடி இஸார்டு, டெரன்ஸ் ஸ்டாம்ப் மற்றும் டோம் வில்கின்சன் ஆகியோர் சக சதிகாரர்களாக நடித்தனர்.

டாம் க்ரூஸ் சைன்டாலஜி (Scientology) நம்பிக்கை உடையவர் என்பதால் அவர் நடிப்பது ஜெர்மன் அரசியல்வாதிகள் மற்றும் வோன் ஸ்டாஃபன்பர்க் குடும்பத்தாரிடையே சர்ச்சையை உண்டுபண்ணியது, இது அந்நாட்டினர் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வழிவகுத்தது. வோன் ஸ்டாஃபென்பெர்கின் சதி குறித்து உலகளாவிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஜெர்மன் செய்தித்தாள்களும் திரைப்படத் துறையினரும் இந்த திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். சர்ச்சையின் காரணமாக ஆரம்பத்தில் படப்படிப்பு தளங்களை தேர்வு செய்வது பட உருவாக்குநர்களுக்கு சிரமமளிப்பதாய் அமைந்தது, ஆயினும் பின்னர் அதற்கு வழிபிறந்து, பெர்லினின் வரலாற்று சிறப்பு மிக்க பெண்ட்லர்பிளாக் போன்ற படத்தின் கதைக்கு சம்பந்தப்பட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அவர்களால் இயன்றது.

இந்த படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை மாற்றம் கண்டது, ஜூன் 27, 2008 என்பதில் ஆரம்பித்து பிப்ரவரி 14, 2009 வரை இந்த தாமதம் இருந்தது. இந்த தேதி மாற்றங்களும் யுனைடெட் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் ஆரம்ப விளம்பரங்களுக்கு கிட்டிய வரவேற்பின்மையும் ஸ்டுடியோவின் திறன் குறித்து விமர்சனத்தைக் கொண்டு வந்தது. ஒரு சோதனை திரையிடல் சாதகமாக அமைந்த பின், இறுதியாக வட அமெரிக்காவில் வால்கிரி ' வெளியீடு டிசம்பர் 25, 2008 தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த திரைப்படம் அமெரிக்காவில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வர்த்தகரீதியாக இப்படம் ஜெர்மனியில் ஜனவரி 22, 2009 அன்று வெளியானது, அங்கும் படத்திற்கு வரவேற்பு கலவையாக இருந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை, வால்கிரி உலகளாவிய அளவில் மொத்தம் 200 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது.

கதைக்கரு[தொகு]

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், வெர்மாச்ட் (ஜெர்மன் ராணுவப் படைகளின் பெயர்) கர்னல் க்ளாஸ் வோன் ஸ்டாஃபென்பெர்க்(க்ரூஸ்) துனிசியாவில் ஒரு RAF விமானத் தாக்குதலில் படுகாயமுறுகிறார், அதனையடுத்து நாஜி ஜெர்மனிக்கு அவர் திருப்பியனுப்பப்படுகிறார். இதனிடையே, மேஜர் ஜெனரல் ஹெனிங் வோன் ட்ரெஸ்கோ (ப்ரனா) அடோல்ஃப் ஹிட்லரின் தனி விமானத்திற்குள் ஒரு வெடிகுண்டை ரகசியமாய் எடுத்துச் சென்று ஹிட்லரை படுகொலை செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்காமல் போய் விடுகிறது, ட்ரெஸ்கோ அதனை தெரியாமல் மீட்டு தனது ரகசிய நோக்கத்தை தெரியாமல் காப்பாற்றுகிறார். ஜெர்மன் ரகசிய போலிசார் மேஜர் ஹேன்ஸ் ஓஸ்டெரை கைது செய்திருப்பதை அறிந்த பின், அவரிடத்தில் அமர்த்துவதற்கான நபரைக் கண்டறிய ஜெனரல் ஆல்பிரிச்ட்க்கு (நை) அவர் உத்தரவிடுகிறார். ஜெர்மன் எதிர்ப் படைக்குள் (ரெசிஸ்டன்ஸ்) வோன் ஸ்டாஃபென்பெர்கை பணியமர்த்திய பின், ஹிட்லரின் உயிரைக் கொல்லும் முயற்சிகளில் பங்களித்த ரகசியக் கமிட்டியின் கூட்டத்திற்குள் வோன் ஸ்டாஃபென்பெர்கை ஆல்பிரிச்ட் அனுமதிக்கிறார். ஜெனரல் லுட்விக் பெக் (ஸ்டாம்ப்), டாக்டர் கார்ல் கோர்டெலெர் (மெக்நாலி), மற்றும் எர்வின் வோன் விட்ஸ்லெபன் (ஸ்கோஃபீல்டு) ஆகியோர் இதன் உறுப்பினர்களில் இருந்தனர். ஹிட்லரைப் படுகொலை செய்ய எந்த திட்டங்களும் இருக்கவில்லை என்பதையறிந்து கர்னல் அதிர்ச்சியுறுகிறார்.

பெர்லின் மீது ஒரு விமானத் தாக்குதல் நடந்த பின், ஆபரேஷன் வால்கிரி திட்டத்தை பயன்படுத்தும் யோசனை அவருக்கு உதிக்கிறது, தேசிய அவசரநிலை சமயத்தில் ஒழுங்கைப் பராமரிக்க ரிசர்வ் ராணுவத்தை நிறுத்துவதை இந்த திட்டம் உள்ளடக்கியிருந்தது. ஹிட்லரை கொன்ற பின் நாஜி ஆட்சியை அகற்றும் வகையில் திட்டம் தீட்டியவர்கள் கவனமாக இத்திட்டத்தை மறுவரைவு செய்தனர். ரிசர்வ் ராணுவப் படையின் தலைவரான ஜெனரல் ஃபிரம் (வில்கின்சன்) மட்டுமே வால்கிரிக்கு துவக்கமளிக்க முடியும் என்பதை உணர்ந்து, நாஜிக்கு பிந்தைய ஜெர்மனியில் வெர்மாச்ட் (இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மன் ராணுவப் படைகளின் பெயர்) தலைவர் பதவியை அவருக்கு அளிக்க வாக்குறுதியளித்து அவரது ஆதரவைப் பெற தலைப்படுகின்றனர். இந்த திருத்திய திட்டம் ஹிட்லரிடம் (பேம்பர்) ஒப்புதல் பெற வேண்டியது என்பதால், பவேரியாவின் பெர்கோஃப் எஸ்டேட்டில் ஃப்யூரரை (தலைவர்) வோன் ஸ்டாஃபென்பெர்க் சந்திக்கிறார். தனது நெருங்கிய வட்டத்தாரிடையே, வட ஆப்பிரிக்காவில் வோன் ஸ்டாஃபென்பெர்கின் சாகச தீரம் குறித்து புகழும் ஹிட்லர் திருத்தங்களை முழுமையாக ஆராயாமல் அதில் கையெழுத்திட்டு விடுகிறார்.

கோர்டெலரின் வலியுறுத்தலில், ஹிட்லர் மற்றும் SS தலைவரான ஹிம்லர் இருவரையும் ஃப்யூரரின் ராணுவத் தலைமையகமான வூல்ஃப்’ஸ் லேய்ரில் கொல்வதற்கு வோன் ஸ்டாஃபென்பெர்கிற்கு உத்தரவு கிடைக்கிறது. இறுதி விளக்கக் கூட்டத்தில், பென்சில் வெடிகுண்டுகளை எவ்வாறு வெடிக்கச் செய்வது என்பதில் குழு உறுப்பினர்களுக்கு விளக்கிக் காட்டுகிறார் கர்னல் மெர்ட்ஸ் வோன் குவிர்ன்ஹெய்ம் (பெர்கெல்). வூல்ஃப்’ஸ் லேய்ரில் அனைத்து தகவல் தொடர்புகளையும் கட்டுப்படுத்துபவரான ஜெனரல் ஃபெலிகிபெல்(இஸார்டு) குண்டு வெடித்தவுடன் அனைத்து தகவல்தொடர்புகளையும் துண்டித்து விடுவதற்கும் அவரை சம்மதிக்க செய்கிறார் வோன் ஸ்டாஃபென்பெர்க். ஜூலை 15, 1944, வூல்ஃப் லேய்ரில் நடக்கும் ஒரு உத்தி விவாதக் கூட்டத்திற்கு ப்ரீஃப்கேஸில் வெடிகுண்டுடன் வோன் ஸ்டாஃபென்பெர்கும் கலந்து கொள்கிறார், ஆனால் கூட்டத்தில் ஹிம்லர் இல்லாத நிலையில், கூட்டம் முடியும் வரை கமிட்டி தலைவர்களிடம் இருந்து வோன் ஸ்டாஃபென்பெர்கிற்கு சமிக்ஞை கிட்டாது போய் விடுகிறது. இதனிடையே, ஃப்ரம்க்கு தெரியாமலேயே ரிசர்வ் ராணுவம் ஆல்பிரிச்ட் உத்தரவால் ஒரு பக்கபலத்துக்காக திரட்டப்பட்டிருக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தலைமையகத்தில் இருந்து தன்னையும் வெடிகுண்டையும் பாதுகாப்பாக மீட்டுக் கொள்கிறார் வோன் ஸ்டாஃபென்பெர்க், இந்த அணிதிரட்டல் ஒரு பயிற்சி என்பதாய் தெரிவிக்கப்பட்டு ரிசர்வ் ராணுவப் படையும் திருப்பி அனுப்பப்படுகிறது. கோபமுறும் வோன் ஸ்டாஃபென்பெர்க் கமிட்டியிடம், முடிவெடுக்க முடியாமை குறித்தும், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கோர்டெலரின் குழப்பும் செயல்பாடு குறித்தும் புகார் கூறுகிறார். வோன் ஸ்டாஃபென்பெர்கை பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி கோர்டெலர் கோர, SS அவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் எனவே அவர் உடனடியாக நாட்டை விட்டு சென்று விட வேண்டும் என்றும் அவரிடம் பெக் தெரிவிக்கிறார்.

ஜூலை 20, 1944 தேதியில் வோன் ஸ்டாஃபென்பெர்க் மற்றும் அவரது துணை அதிகாரி லெப்டினென்ட் ஹெஃப்டென்(பார்க்கர்) மீண்டும் வூல்ஃப்’ஸ் லேய்ருக்கு வருகிறார்கள். வோன் ஸ்டாஃபென்பெர்க் எதிர்பாராத விதமாக கூட்டம் திறந்த சாளரத்துடனான கோடைக் கட்டிடத்திற்குள் நடக்கவிருந்தது, நிலவறையின் சுவர்களுக்குள் வெடிக்கையில் தான் அது அதிகப்பட்ச சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதாய் சதித்திட்டம் தீட்டியவர்கள் கணித்திருந்ததால் அது அவருக்கு ஏமாற்றமளிக்கிறது. தன்னுடைய உதவி அதிகாரி காருடன் வெளியில் காத்திருக்க, கூட்டத்தில் ப்ரீஃப்கேஸை விட்டு விட்டு வோன் ஸ்டாஃபென்பெர்க் அகல்கிறார். வெடிகுண்டு வெடிக்கத் தயாராக, கட்டிடத்தில் இருந்து காரை நோக்கி ஓடுகிறார் வோன் ஸ்டாஃபென்பெர்க். குண்டு வெடித்ததும், ஹிட்லர் இறந்திருப்பார் என்று உறுதிபட நம்பும் வோன் ஸ்டாஃபென்பெர்க் வூல்ஃப்’ஸ் லேய்ரை விட்டு ஓடுகிறார். தகவல் தொடர்புகளை துண்டிக்கும் முன்னதாக, மெர்ட்ஸை அழைக்கும் ஃபெல்கிபெல் வெடிகுண்டு வெடித்ததை பற்றி கூறினாலும் ஃப்யூரர் (ஹிட்லர்) இறந்தாரா இல்லையா என்பது குறித்து அவரால் தெளிவாய்க் கூற முடியவில்லை.

வோன் ஸ்டாஃபென்பெர்க் மீண்டும் பெர்லினுக்குப் பறக்க, ஹிட்லர் இறந்து விட்டார் என்பது சிறு சந்தேகமின்றி உறுதியாய் தெரிந்தால் ஒழிய தன்னால் ரிசர்வ் ராணுவத்தை திரட்ட முடியாது என ஆல்பிரிச்ட் மறுத்து விடுகிறார். ஆயினும் ஆல்பிரிச்ட்க்கு தெரியாமல் அவரது கையெழுத்தை மாற்றிப் போட்டு மெர்ட்ஸ் உத்தரவுகளை வழங்குகிறார். ஆபரேஷன் வால்கிரி செயல்பாட்டில் இருக்க, நாஜி கட்சி தலைவர்களையும் மற்ற SS அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவிடும் வோன் ஸ்டாஃபென்பெர்க் மற்றும் அவரது சக கவிழ்ப்புத் திட்டக் குழுவினர், ஒட்டுமொத்த ரெய்க் பிராந்தியத்திற்கும் உத்தரவிட தங்களுக்கு அதிகாரமளிக்கும் பெர்லினின் அரசாங்க தலைமையகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றத் துவங்குகின்றனர். ஹிட்லர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் தப்பிவிட்டதாக வதந்திகள் பெர்லினை எட்டுகின்றன, ஆயினும் அது SS இன் பிரச்சாரம் தான் என்று கூறி வோன் ஸ்டாஃபென்பெர்க் அதனை புறக்கணிக்கிறார். இதனிடையே, ஹிட்லர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை ஃபீல்டு மார்ஷல் கெய்டலிடம் இருந்து ஃப்ரம் தெரிந்து கொள்கிறார். ஜெனரல் கவிழ்ப்புக் குழுவினருடன் இணைய மறுத்து விடுகிறார், இதனையடுத்து அவர் கைது செய்யப்படுகிறார். கோயபல்ஸ் மூலம் தொலைபேசி வழியே ஹிட்லர் ரிசர்வ் ராணுவத்தை தொடர்பு கொள்கிறார், SS அதிகாரிகள் விடுவிக்கப்படுகிறார்கள், கவிழ்ப்புக் குழுவினர் பெண்ட்லர்பிளாக் உள்ளே முற்றுகையிடப்படுகின்றனர். தலைமையக ஊழியர்கள் தப்பியோடி விடுகின்றனர். ஆனால் வளையத்தலைவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில், ஜெனரல் ஃப்ரம் ஒரு அவசர நீதி விசாரணையைக் கூட்டி சதிகாரர்களுக்கு மரணதண்டனை விதிக்கிறார். அந்த இரவில் வளைய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், “புனித ஜெர்மனி நீடுழி வாழ்க!” என்று தன்னைச் சுடும் முன்னதாக முழக்கமிடுகிறார் வோன் ஸ்டாஃபென்பெர்க்.

ஹிட்லரை கொல்ல ஜெர்மனியினர் செய்த படுகொலை முயற்சிகளாக அறியப்பட்டவற்றில் கடைசி தான் இந்த ஜூலை 20, 1944 திட்டம் என்பதையும், அடுத்த ஒன்பது மாதங்களின் பின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என்பதையும், நினா வோன் ஸ்டாஃபென்பெர்க் மற்றும் அவரது குழந்தைகள் போரில் உயிர் தப்பினர் என்பதையும் சொல்லி படம் நிறைவடைகிறது.

நடிகர்கள்[தொகு]

  • அடோல்ஃப் ஹிட்லரை படுகொலை செய்ய சதித்தீட்டம் தீட்டியதில் மூளையாய் செயல்பட்ட வெர்மாச்ட் கர்னலான, கர்னல் க்ளாஸ் வோன் ஸ்டாஃபென்பெர்காக டாம் க்ரூஸ் நடித்திருக்கிறார். வோன் ஸ்டாஃபென்பெர்கை ஒரு “மிகுந்த மனிதாபிமானியாக” ப்ரையன் சிங்கர் கண்டார். சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கியிருக்கும் சிங்கர், விசுவாசமான கர்னல் மற்றும் சதிகாரர் ஆகிய இரட்டை வேஷம் போடும் வோன் ஸ்டாஃபென்பெர்கை சூப்பர்மேன் மற்றும் அவரது மனித அடையாளமான கிளார்க் கென்ட் ஆகிய பாத்திரப் படைப்புடன் ஒப்பிடுகிறார். மிஷன்: இம்பாசிபிள் அறிமுகக் காட்சியில் சந்தித்துக் கொண்டபோது சிங்கருடன் பணியாற்ற க்ரூஸ் விருப்பம் கொண்டார். கதையின் பின்புலம் க்ரூஸை ஈர்த்தது. வோன் ஸ்டாபென்பெர்கின் துணிகர செயல்பாடு குறித்து க்ரூஸ் விவரிக்கையில், ”[வோன்] ஸ்டாஃபென்பெர்க் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்சங்களைக் கொண்டு சிந்தித்தேன். இறுதியில் தனது உயிரையே கொடுக்க நிர்ப்பந்தித்த செயல்பாடுகளை தான் எடுத்தாக வேண்டியிருக்கிறது என்பதை அவர் உணர்ந்திருந்தார். எதைப் பணயம் வைத்திருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார்" என்று தெரிவித்தார். தான் ஒரு நாயகன் அல்ல என்றே வோன் ஸ்டாஃபென்பெர்க் கருதியதாக க்ரூஸ் உணர்ந்தார். ஒரு ஆராய்ச்சியாளரை வாடகைக்கு அமர்த்தி, வரலாற்று புத்தகங்களை படித்து, வோன் ஸ்டாஃபென்பெர்கின் குடும்பத்தார் சிலருடன் பேசி இந்த பாத்திரத்திற்காக எட்டு மாதங்கள் க்ரூஸ் தயாரிப்பு செய்து கொண்டார். வோன் ஸ்டாஃபென்பெர்க் தனது இடது கண், வலது கை மற்றும் இடது கையில் இரண்டு விரல்களை துனிசியாவில் நேசப் படைகளின் தாக்குதலில் இழந்து விடுகிறார் என்பதால், உடை உடுத்துவது, பொருட்களை நகர்த்துவது மற்றும் எழுதுவதில் பயிற்சி மேற்கொள்ள இதே முடக்கங்களை க்ரூஸ் தானும் ஏற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் கண்பிரச்சினையை கையாள க்ரூஸ்க்கு சிரமமாய் இருந்தது. ஆனால் வோன் ஸ்டாஃபென்பெர்க் அந்த கஷ்டத்தோடு தான் வாழ நேரிட்டது என்பதால் அவர் அதனை ஏற்றுக் கொண்டார்.
  • மேஜர் ஜெனரல் ஹெனிங் வோன் ட்ரெஸ்கோவாக கெனெத் பிரனா நடித்தார். உண்மையான ட்ரெஸ்கோ வழுக்கை கொண்டவராக இருக்க பிரனா அவரில் இருந்து உடல்ரீதியாய் வேறுபட்டவராய் இருந்தார். ஆனால், ”ட்ரெட்ஸ்கோவின் திறனை நீங்கள் பார்த்தால், பிரனாவிடம் இருக்கும் ஒரு நேர்மை அவரிடம் இருந்ததை நீங்கள் காண முடியும்” என்று சிங்கர் கூறினார்."
  • ஜெனரல் ஃபிரடரிக் ஆல்பிரிக்ட் ஆக பில் நை நடித்திருக்கிறார். ஆல்பிரைட் பாத்திரம் “விழுந்து விடாதிருக்கும்” வண்ணம் அதற்கு ஒரு அனுதாபம் பெறும் தன்மையைக் கொடுக்க நை இந்த பாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார். ஹிட்லரின் ஆட்சி குறித்து மனக்குறையுடன் இருப்பது மற்றும் அந்த ஆட்சியிலேயே ஒரு பாகமாக இருப்பது ஆகிய இரண்டுக்கும் இடையில் அல்லாடும் பாத்திரமாக நை வெளிப்படுத்த விரும்பினார். தனது சித்தரிப்பு குறித்து விவரித்த நை, “கற்பனைக்கு எட்டுவதில் மிகவும் கடினமாகத் தோன்றுகிற நாஜி சீருடையை அணிவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளவே எனக்கு பல நாட்கள் பிடித்தது" என்று கூறினார்.
  • கர்னல் ஜெனரல் லுட்விக் பெக் பாத்திரத்தை டெரன்ஸ் ஸ்டாம்ப் ஏற்றிருக்கிறார். சூப்பர்மேன் II திரைப்படத்தில் ஜெனரல் ஸோட் பாத்திரத்திற்கு பாராட்டப் பெற்றிருந்த நிலையில்,

X-மென் திரைப்படத்தில் ஒரு பாத்திரம் குறித்து விவாதிப்பதற்காக சிங்கர் ஸ்டாம்பை சந்தித்தார். ஒரு குழந்தையாக மின்னல்வேக தாக்குதல்களை பார்த்திருக்கும் ஸ்டாம்ப் வோன் ஸ்டாஃபென்பெர்குகள் நேசப் படையினரின் வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பி ஒளியும் காட்சிகளை படமாக்குவதில் சிங்கருக்கு உதவினார்.

  • ஜெர்மனி ரிசர்வ் படையின் தலைவர் கர்னல் ஜெனரல் ஃபிரடரிக் ஃபிரம் பாத்திரத்தில் டாம் வில்கின்சன் நடித்தார். துரோகமிழைக்கும் ஃபிரம் மீது அனுதாபம் ஏற்படுவதற்காக அந்த பாத்திரத்தில் வில்கின்சன் நடிக்க அமர்த்தப்பட்டார்.
  • கேரைஸ் வோன் ஹூடென் வோன் ஸ்டாஃபென்பெர்கின் மனைவி நினா ஸ்கென்க் கிராஃபின் வோன் ஸ்டாஃபென்பெர்க் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாக் புக் கில் அவரது நடிப்பைப் பார்த்து இப்பட உருவாக்குநர்களுக்கு அவர் மீது அபிமானம் பிறந்தது, குறைந்த வசனங்களில் ஒரு வலிமையான நடிப்பை அவரால் தர முடியும் என்று அவர்கள் வாதிட்டனர். திரைக்கதையாசிரியர் நாதன் அலெக்சாண்டர் வோன் ஸ்டாஃபென்பெர்கின் உறவினர்களுடன் பேசினார். அப்போது நினா மற்றும் க்ளாஸ் கதைக்கரு குறித்து நேரடியாய் ஒருபோதும் பேசவில்லை என்றாலும் “ஒரு அர்த்தத்தில் அதைத் தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்” என்று குறிப்பிட்டார்.
  • வெற்றிகரமான ஆட்சிகவிழ்ப்புக்கு பின் ஜெர்மனியின் சான்சலராக விரும்பும் ஜெர்மனி அரசியல்வாதி டாக்டர் கார்ல் ஃபிரடரிக் கோர்டெலர் பாத்திரத்தில் கெவின் மெக்நேலி நடித்துள்ளார்.
  • ஓய்வு பெற்ற ஃபீல்டு மார்ஷலும் சதித்திட்டம் தீட்டுவோரில் ஒருவருமான எர்வின் வோன் விட்ஸ்லெபன் பாத்திரத்தில் டேவிட் ஸ்கோஃபீல்டு நடித்துள்ளார். ஸ்கோஃபீல்டின் தொழில்முறை உழைப்பையும் தனக்கான படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தரும் அர்ப்பணிப்பையும் கண்டு சிங்கரும் மெக்குவரியும் மகிழ்ந்ததையடுத்து, படத்தில் அவரது பாத்திரத்தை பட படைப்பாளிகள் விரிவுபடுத்தினர்.
  • வோன் ஸ்டாஃபென்பெர்க் திட்டத்தை செயல்படுத்த அவருக்கு துணைபுரியும் உதவி அதிகாரி லெப்டினென்ட் வெர்னெர் வோன் ஹேஃப்டன் பாத்திரத்தில் ஜேமி பார்க்கர் நடித்துள்ளார்.
  • ஹிட்லரின் நிலவறையான வூல்ஃப்’ஸ் லேய்ரில் தகவல்தொடர்பு பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பான ஜெர்மன் அதிகாரி ஜெனரல் எரிக் ஃபெல்கிபெல் பாத்திரத்தில் எடி இஸார்ட் நடித்துள்ளார்.
  • ஜெர்மனி ஃப்யூரர் அடோல்ஃப் ஹிட்லராக டேவிட் பேம்பர் நடித்துள்ளார். இந்த பாத்திரத்திற்கு பேம்பர் கலந்து கொண்ட தேர்வு ஒத்திகையின் போது பேம்பரின் கண்கள் சிங்கரை ரொம்பவும் கவர்ந்தது, ஹிட்லருக்கிருந்த ஏதோ ஒரு குணம் அவரிடம் இருந்தது என்று பேம்பர் கூறினர்.
  • க்ரோப்ட்யூஷெலாண்ட் தளபதி அதிகாரி மேஜர் ஓட்டோ எர்ன்ஸ்ட் ரெமர் பாத்திரத்தில் தாமஸ் கிரெட்ஸ்ச்மேன் நடித்துள்ளார். சிங்கர் பட உருவாக்கத்தில் பங்குபெறும் முன்னதாக மெக்குவரி இயக்கம் செய்ய உத்தேசித்திருந்த சமயத்தில் வோன் ஸ்டாஃபென்பெர்க் பாத்திரத்தை உண்மையில் கிரெட்ஸ்ச்மேன் தான் நடிப்பதாக இருந்தது.
  • பரப்புரை அமைச்சராகவும் ஹிட்லரின் நெருங்கிய வட்டத்தில் ஒருவராகவும் இருந்த டாக்டர் ஜோசப் கோயபல்ஸ் பாத்திரத்தில் ஹார்வீ ஃப்ரீட்மேன் நடித்துள்ளார்.
  • OKW தலைவராகவும் ஹிட்லருக்கு நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவராகவும் இருந்த ஃபீல்டு மார்ஷல் வில்ஹெல்ம் கெய்டல் பாத்திரத்தில் கென்னத் கிரான்ஹாம் நடித்துள்ளார்.
  • ஸ்க்டஸ்டாஃபெல் (ஜெர்மன் துணை ராணுவ அமைப்பு) தலைவராகவும் ஹிட்லரின் நெருங்கிய வட்டத்தில் ஒருவராகவும் இருந்த ஹென்ரிக் ஹிம்லர் பாத்திரத்தில் மத்யாஸ் ஃப்ரெயாஃப் நடித்துள்ளார்.
  • மேஜர் ஜெனரல் ஹெனிங் வோன் ட்ரெஸ்கோவின் உதவியாளராக பிலிப் வோன் ஸ்கல்தெஸ் நடித்துள்ளார். வோன் ஸ்கல்தெஸ் க்ளாஸ் வோன் ஸ்டாஃபென்பெர்கினது பேரனாவார். படத்தில் சித்தரிக்கப்பட்டது போல, 1944 சம்பவ காலங்களில் ஸ்டாஃபென்பெர்கின் மனைவி வோன் ஸ்கல்திஸின் தாயை வயிற்றில் சுமந்திருந்தார்.
  • ஹெர்மேன் கோரிங் பாத்திரத்தில் கெரார்டு ஹாஸெ-ஹிண்டன்பெர்க், ஆல்பர்ட் ஸ்பீர் பாத்திரத்தில் ஆன்டன் அல்க்ராங், மேஜர் எர்ன்ஸ்ட் ஜான் வோன் ஃப்ரெயெண்ட் பாத்திரத்தில் வெர்னெர் டேன், வூல்ஃப் ஹெய்ன்ரிச் கிராஃப் வோன் ஹெல்டோர்ஃப் பாத்திரத்தில் வால்டிமார் கோபஸ், கர்னல் ஹெய்ன்ஸ் பிராண்ட் பாத்திரத்தில் டோம் ஹாலண்டர், டாக்டர் ரோலண்ட் ஃப்ரெய்ஸ்லர் பாத்திரத்தில் ஹெல்மட் ஸ்டாஸ், லெப்டினென்ட்-ஜெனரல் அடோஃப் ஹ்யூசிங்கர் பாத்திரத்தில் மாத்யூ பர்டன், துனிசியாவில் ஸ்டாஃபென்பெர்க் உடன் பணிபுரியும் ஒரு ஜெனரலாக பெர்னார்டு ஹில், ஆட்சிக்கவிழ்ப்பு தலைமையகங்களை குலைக்க முயலும் கூட்டு “பாம்பஸ் ஜெனரல்” பாத்திரத்தில் இயன் மெக்நீய்ஸ் ஆகியோர் மற்ற நாஜி பாத்திர படைப்புகளில் அடக்கம். இந்த சீர்குலைப்பு ஜெனரலின் உண்மையான பெயர் படத்தில் குறிப்பிடப்படவில்லை எனினும், இந்த பாத்திரம் ஜெனரல் ஜோசிம் வோன் கோர்ட்ஸ்ஃப்லெய்ஸ்ச்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும், அவரும் இதே வகையில் தான் ஆட்சிக்கவிழ்ப்பு குழுக்களை சீர்குலைக்க முயற்சித்தார் என்றும் மெக்குவரி மற்றும் அலெக்ஸாண்டர் தெரிவித்தனர். பாட்ரிக் வில்சன் உண்மையில் வால்கிரி யில் நடிப்பதாக இருந்தது, ஆனால் படப்பிடிப்பு கால அட்டவணை மோதல்கள் மற்றும் பிற குறிப்பிடப்படாத காரணங்களினால் அவர் படத்திலிருந்து விலகி விட்டார். ஸ்டீஃபன் ப்ரைக்கும் இந்த படத்தில் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது, ஆனால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

ஜெர்மானியரல்லாத சில நடிகர்களும் ஆரம்பத்தில் ஜெர்மன் உச்சரிப்பைக் கொண்டு பரிசோதனை செய்ய முற்பட்டனர், ஆனால் இந்த யோசனையை சிங்கர் நிராகரித்து விட்டார், அதற்குப் பதிலாய் நடுநிலையான உச்சரிப்புகள் அவர்களைக் “கதையில் இருந்து தடம்புரளாமல் காக்கும்” என்று அவர் ஆலோசனையளித்தார். தான் ஒரு ஆவணப்பட-நாடகத்தை எடுக்கவில்லை என்றும் கதை சுவாரஸ்யமாய் செல்ல வேண்டும் என்பதையும் சிங்கர் வலியுறுத்தினார்.

தயாரிப்பு[தொகு]

உருவாக்கம்[தொகு]

2002 ஆம் ஆண்டில், இன்னொரு வேலைக்காக ஆராய்ச்சி செய்கையில் கிறிஸ்டோபர் மெக்குவெரி பெர்லினுக்கு சென்று வந்ததோடு அங்கு பெண்ட்லர்பிளாக்கில் இருக்கும் வோன் ஸ்டாஃபென்பெர்கின் நினைவிடத்திற்கும் சென்று பார்வையிட்டார். ஜூலை 20 சதி பற்றி ஆய்வு செய்கையில், திட்டம் தீட்டியவர்கள் தங்களின் கொலைமுயற்சி தோற்றால் என்னவாகும் என்பதை முழுமையாக அறிந்திருந்தனர் என்கிற உண்மை அவரை திகைப்பில் ஆழ்த்தியதோடு நெகிழச் செய்தது. அவர்களது கதையை இன்னும் உலகறியும் வகை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். படத்தில் உடன் எழுத்துப் பணிக்கு அவர் நாதன் அலெக்ஸாண்டரை அணுகினார். அலெக்ஸாண்டர் இந்த திட்டத்தில் ஆராய்ச்சி செய்ய துவங்கினார். 2001 ஆம் ஆண்டு தொலைக்காட்சி திரைப்படமான கான்ஸ்பிரசி யைப் பின்பற்றி கதையை அமைக்க மெக்குவரி விரும்பினார், அப்படம் நாஜிக்கள் இறுதி தீர்வை (ஃபைனல் சொல்யூஷன்) திட்டமிட்டதான வான்ஸீ மாநாட்டை விவரித்தது. அத்துடன் மெக்குவரியே இந்த படத்தை இயக்கவும் விரும்பினார். ஆனால் ப்ரையன் சிங்கர் இயக்கினால் தான் படத்திற்கு நிதியாதாரம் கிட்டும் என்பது தெரிய வந்ததும் அவர் முடிவை மாற்றிக் கொண்டார்.

X-மென் (2000), X2 (2003) மற்றும் சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் (2006) ஆகிய பெரிய தயாரிப்பு படங்களை சிங்கர் முடித்திருந்த நிலையில், சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் படத்தின் நின்றுபோயிருந்த தொடர்ச்சி வரிசையின் அடுத்த படத் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்னதாக ஒரு சிறிய படத்தை செய்யலாம் என அவர் நினைத்தார். சிங்கரும் மெக்குவெரியும் தாங்கள் நியூ ஜெர்சியில் வளர்ந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் தொடர்பான படங்களை செய்துள்ளனர், அதன்பின் சிங்கர் நாஜி விவகாரத்தை தனது ஆப்ட் ப்யுபிள் மற்றும் X-மென் படங்களில் கையாண்டிருக்கிறார். 1980களின் ஆரம்பத்தில் சிங்கரின் தாய் போனுக்கு சென்று அங்கு க்ரெய்சு வட்ட எதிர்ப்பு குழு நிறுவனர்களில் ஒருவரான ஹெல்மத் வோன் மோல்ட்கேயின் விதவையான ஃப்ரெயா வோன் மோல்ட்கேயைச் சந்தித்த சமயத்தில் தான் இந்த சதித் திட்டம் குறித்து சிங்கர் முதன்முதலாய் அறிந்து கொண்டார். மெக்குவரி மற்றும் அலெக்ஸாண்டர் திரைக்கதை எழுதுவதை அறிந்து இயக்குவதற்கு கையொப்பமிட்ட பின், நாஜி ஜெர்மனியின் அரசியல் சரிதத்தை ஆழமாய் புரிந்து கொள்வதற்கு வில்லியம் எல்.ஷைரெர் எழுதிய மூன்றாவது ரெய்க்கின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்கிற புத்தகத்தை சிங்கர் படித்தார், அத்துடன் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டபோது நிலவறையில் இருந்து வெளியேறிய கடைசி மனிதரான ஹிட்லரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவரான ரோகஸ் மிஸ்கையும் அவர் சந்தித்தார். வோன் ஸ்டாஃபென்பெர்க்கின் புதிரான செயல்பாடுகளுக்கு உண்மையான உந்துதல் என்னவாக இருந்தது என்பதில் குழப்பம் இருக்கிறது என்பதை படைப்புக் குழு ஒப்புக் கொண்டது, ஆனால் அவர் செய்த செயல்களில் இருந்து அவர் மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளக் கூடிய ஒரு மனிதர் என சிங்கரும் மெக்குவரியும் தீர்மானித்தனர். கான்ஸ்பிரசி யை ஒத்த ஒன்றாக வால்கிரி யை உருவாக்க மெக்குவெரி தலைப்பட்டார் என்றாலும், “வயதான மனிதர்கள் அறைகளில் பேசிக் கொண்டிருப்பதை விடவும்” அதிகமாய் கொண்டிருக்கக் கூடிய ஒரு படமாக உருவாக்கும் பெரும் நோக்கங்களை சிங்கர் கொண்டிருந்தார். தனது முடிவு குறித்து சிங்கர் நினைவுகூருகையில் இவ்வாறு கூறுகிறார், “உண்மையான கதை ஒரு அழகிய மர்மப் படத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தது..... பார்வையாளர்களை [வோன்] ஸ்டாஃபென்பெர்க் உடன், அவரது இலட்சியங்களுடன் பயணிக்க செய்ய வைக்க என்னால் முடிந்ததென்றால், அவர்கள் கதையோட்டத்துடன் சென்று விடுவார்கள். வரலாற்றில் இருந்தான விஷயங்களை அனுமானிக்கத் துவங்குவதில் அவர்களுக்கு ஆர்வம் மங்கி விடும் என எனக்குத் தெரியும்."

யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவன பார்ட்னர்களான பவுலா வேக்னர் மற்றும் டாம் க்ரூஸ் ஆகியோரிடம் இந்த திரைப்படத் திட்டத்தை கொண்டு வர மெக்குவெரி ஆலோசனை கூறினர், அவர்கள் உடனடியாக 2007 மார்ச்சில் இத்திரைப்படத்திற்கு நிதிஏற்பாடு செய்ய ஒப்புக் கொண்டனர். டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என சிங்கர் அழைப்பு விடுத்தார், அதை க்ரூஸும் ஒப்புக் கொண்டார். வோன் ஸ்டாஃபென்பெர்க் குறித்த ஒரு சித்திரம் டாம் க்ரூஸிடம் விவரிக்கப்பட்டது, அந்த ஜெர்மன் கர்னலின் தோற்றத்தில் தனக்கு ஒரு ஒற்றுமை இருப்பதை கவனித்த க்ரூஸ், தன்னை அந்த பாத்திரத்திற்குள் இணைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் வால்கிரி 20 மில்லியன் டாலர் பட்ஜெட்டுக்குள்ளான “சிறிய” படம் தான். அதனை பல மாதங்களுக்குள் முடித்து விடலாம் என்று தான் இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் கருதினர், ஆனால் வோன் ஸ்டாஃபென்பெர்க் பாத்திரத்தில் க்ரூஸ் ஆர்வம் காட்டியதானது இந்த படத்தின் விளம்பரத்தை அதிகப்படுத்தியிருப்பதால் அதன் பட்ஜெட்டும் அதிகமாகும் என்பதை சிங்கர் உணர்ந்தார். அதன்பின் படத்தின் பட்ஜெட் 60 மில்லியன் டாலர்களாய் உயர்த்தப்பட்டது. ஒரு அதிரடி திரைப்பட பெயர்த்தலைப்பை பயன்படுத்த விரும்பாமல் ஆபரேஷன் வால்கிரி என்று படத்திற்கு பெயரிட இயக்குநர் கருதினார். இறுதியில் படத்தின் ஆங்கில மொழி தலைப்பு வால்கிரி என இடப்பட்டது, ஏனெனில் படம் அந்த ஆபரேஷனைக் கடந்த அம்சங்களையும் கையாளுவதாக அவர் உணர்ந்தார். அத்துடன் வேக்னரின் இசை உடன் அதன் தொடர்பையும் விரும்பினார்.

பெண்டர்பிளாக்கில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஆரம்பத்தில் ஜெர்மனியின் நிதி அமைச்சகம் படத் தயாரிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது, “நினைவிடமாகவும் அஞ்சலித் தலமாகவும்” இந்த இடம் கருதப்பட வேண்டும். “அதனை ஒரு படப்பிடிப்பு தளமாகப் பயன்படுத்தினால் அதன் கண்ணியம் குறைந்து விடும்” என்று அது விளக்கமளித்தது. பெர்லின் காவல் நிலையத்திலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு விடுக்கப்பட்ட ஒரு கோரிக்கையை அத்துறை நிராகரித்தது, இது அந்த இடத்திற்கு எதிர்மறை விளைவுகளைக் கொடுத்து விடும் என்று அத்துறை விளக்கமளித்தது. இறுதியில் பெண்டர்பிளாக் விஷயத்தில் தனது மனதை ஜெர்மனி அரசாங்கம் மாற்றிக் கொண்டு அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளித்தது. இந்த முடிவுக்கு தாங்கள் “மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளதாக” யுனெடெட் ஆர்டிஸ்ட்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த இடம் ”அடையாளரீதியாகவும், படைப்பாக்கரீதியாகவும் அத்துடன் வரலாற்றுரீதியான அங்கீகாரரீதியாகவும் எங்களுக்கு எப்போதும் முக்கியமானதாக இருந்தது” என்று அவர் கூறினார். எனவே படத்தின் தன்மை குறித்து ஏதேனும் தவறான கருத்துகள் இருந்தால் அதனை நீக்கும் வகையில் பட நிறுவனம் ஜெர்மனி அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். ஜெர்மன் கிளர்ச்சிக் குழுவின் நினைவிடமும் தங்களிடமிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை அணுகுவதற்கு படத் தயாரிப்பாளர்களுக்கு அனுமதி அளித்து உதவியது. ஜெர்மன் ராணுவப் படைப்பிரிவுக்கு ஆவணப்பட்ட விஷயங்கள் மற்றும் ராணுவ ஆலோசகர்களிடம் இருந்தான உள்ளடக்கம் ஆகியவற்றில் இருந்து வடிவம் கொடுக்கப்பட்டது.

எழுத்து[தொகு]

முதல்நபர் கணக்குகள், புகைப்படங்கள், நியூஸ்‌ரீல்கள் மற்றும் உரைகளை மெக்குவரி மற்றும் அலெக்ஸாண்டர் ஆய்வு செய்தனர். ஜெர்மன் ரகசிய போலிசான கெஸ்டபோ மற்றும் SS ஆவணங்களையும் அவர்கள் ஆராய்ந்தனர், ஏனெனில் இந்த சதித்திட்ட நிகழ்வுகளை மறுகட்டுமானம் செய்வதில் இந்த அமைப்புகள் வெகுகவனமாய் இருக்க வேண்டியிருந்தது. நிகழ்வுகளின் ஒரு காலவரிசை உருவாக்கப்பட்டது, அதிலிருந்து மெக்குவெரியும் அலெக்ஸாண்டரும் ஸ்கிரிப்டுக்கு வடிவம் கொடுத்தனர். பெர்லினில் படத் தயாரிப்பு துவங்கியதும், எழுத்தாளர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று கவிழ்ப்பு திட்டம் தீட்டியோரின் உறவினர்களை சந்திக்க முடிந்தது; இந்த சந்திப்புகள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே கதையில் நுட்பமான மாற்றங்கள் செய்ய உதவின.

துனிசியாவில் வோன் ஸ்டாஃபென்பெர்கின் ஆரம்ப காட்சிகள் படத்தின் எஞ்சிய பகுதிக்கு வரலாற்று அர்த்தத்தை கொடுக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டன. யூதப் படுகொலை பற்றிய குறிப்புகள் உட்பட சூழ்நிலையின் சிக்கலான தன்மையை அவை ரொம்பவும் பட்டவர்த்தனமாய் இல்லாத வகையில் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் காட்சிகள் எழுதப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் மனோநிலையை ஏற்படுத்தவும், ஜெர்மன் அதிகாரிகளிடையே நிலவிக் கொண்டிருந்த வெறுப்பு குறித்து வெளிப்படுத்தவும் எழுத்தாளர்கள் விரும்பினர். சதித்திட்டம் தீட்டியவர்களின் நோக்கங்களை வெளிப்படுத்துவது தான் மிகச் சிரமமான காரியமாக மெக்குவெரியும் அலெக்சாண்டரும் கண்டனர்; வோன் ஸ்டாஃபென்பெர்கும் கிளர்ச்சிக் குழுவின் மற்ற உறுப்பினர்களும் தங்களது மனச்சாட்சி கொந்தளிப்பால் உந்தப்பட்டு தான் செயல்பட்டதாக எழுதியவர்கள் நம்பியபோதிலும், வோன் ஸ்டாபென்பெர்க் ஒரு புதிரான மனிதராகத் தான் செயல்பட்டார். அடக்குமுறைகளை வோன் ஸ்டாஃபென்பெர்க் கண்ணால் காண்பது போன்ற காட்சியை நுழைக்க மெக்குவெரியும் அலெக்சாண்டரும் முயற்சி செய்தனர், ஆனால் அவர் ஒரு வழங்கல் அதிகாரி என்பதால் நிகழ்ந்த விஷயங்களைக் காணும் வாய்ப்பு அவருக்கு குறைவாகவே இருந்தது. ரஷ்யர்கள் பட்டினியிடப்படுவது போன்ற சில விஷயங்களை அவர் கண்ணால் கண்டார் என்றாலும், “கள விவரங்களின்” அடிப்படையில் வோன் ஸ்டாஃபென்பெர்க் செயல்பாட்டுக்கு உந்தப்பட்டார் என்பதாய் சித்தரிப்பது கடினம் என அவர்கள் நம்பினர். ஹிட்லரை சித்தரிக்கும் விதமும் அவர்களுக்கு சிரமம் அளிப்பதாய் இருந்தது; அவரது பேச்சுகளை ஆராய்ச்சி செய்த சமயத்தில், அவர் மிகவும் எதிர்மறையாய் பேசியதைக் கண்டறிவதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

படப்பிடிப்பு[தொகு]

படப்பிடிப்பு ஜூலை 18, 2007 இல் பெர்லினில் துவங்கியது. அப்போது வால்கிரி தயாரிக்க 80 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது, இதில் மூன்றில் இரண்டு பங்கு ஜெர்மனியில் செலவிடப்பட்டது. தி ஜெர்மன் ஃபெடரல் பிலிம் ஃபண்ட் 4.8 மில்லியன் யூரோக்களை (6.64 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) யுனெடெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கி தயாரிப்பில் உதவியது. முன்னாளில் அரசியல் கைதிகளுக்கான சிறைச்சாலையாக இருந்த டெம்பெலோஃப் சர்வதேச விமானநிலையத்தின் கொலம்பியா ஹாஸ் பகுதியில் படம்பிடிக்க படக்குழுவினருக்கு அனுமதி கிட்டியது. பிராண்டன்பர்குக்கு மேலுள்ள வான்வெளியில் இரு பக்கம் ஸ்வஸ்திக அடையாளங்கள் பெயிண்ட் செய்யப்பட்ட இரண்டாம் உலகப் போர் விமானங்கள் பயிற்சி செய்வது போன்ற காட்சியும் தயாரிப்பில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்திற்காக சுமார் 70 செட்டுகள் போடப்பட்டன. முன்னாள் ரெய்க் வான் அமைச்சக கட்டிடம் மற்றும் வோன் ஸ்டாஃபென்பெர்க் அவரது சகோதரருடன் வசித்த வீட்டின் வெளிப்பகுதி ஆகிய இடங்களிலும் இப்படக் குழுவினர் படப்பிடிப்பு நடத்தினர்.

ஹிட்லரின் கிழக்கு முனை தலைமையகமான வூல்ஃப்’ஸ் லேய்ரின் ஒரு மாதிரி பெர்லினின் தெற்கே 60 கிலோமீட்டர்கள் தொலைவில் கட்டப்பட்டது, ஆயினும் உண்மையில் அத்தலைமையகம் அமைந்திருந்தது இன்றைய போலந்தில் ஆகும். இந்த அச்சுமாதிரியைக் கட்ட பன்னிரண்டு வாரங்கள் பிடித்தது. 1944 ஆம் ஆண்டில் வெடிகுண்டுகளை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வீடுகள் சிலவற்றிலும் படப்பிடிப்பு நடந்தது. ஹிட்லரின் துணைவி இவா ப்ரவுன் எடுத்த படச்சுருள் மற்றும் ரகசிய சேகரிப்பாளர்களிடம் இருந்த மரச்சாமான் வடிவமைப்புகளின் உதவியுடன் ஹிட்லரின் பவேரிய வீடான பெர்காஃபின் உள்வடிவமைப்பின் ஒரு அச்சுமாதிரியும் உருவாக்கப்பட்டது. நாஜி கால அம்சங்களையும் தயாரிப்பு பயன்படுத்தியது, ரெய்க் அமைச்சரவையால் பயன்படுத்தப்பட்ட மரச்சாமான்கள் மற்றும் ஒரு சமயத்தில் ஹிட்லரின் மேஜையை அலங்கரித்த பொருட்கள் ஆகியவை இதில் அடக்கம். ஜெர்மனியில் கடுமையாய் தடை செய்யப்பட்டிருந்த நாஜி அடையாளங்கள் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டன, உள்ளூர்வாசிகளுக்கு படத்தயாரிப்பு குழுவினர் முன்கூட்டிய அறிவிப்புகளை அளித்து வந்தனர் என்றாலும், பெர்லினில் ஸ்வஸ்திக் சின்னங்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்ட ஒரு வழிப்போக்கர் நகரவையில் அதிகாரப்பூர்வ புகார் அளித்தார். இப்பட உருவாக்கத்திற்காக நாஜி அடையாளங்களை அமைப்பதற்கு அனுமதியளித்த மற்ற இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகவும் இதேபோன்ற புகார்கள் பதிவாயின. பாபெல்ஸ்பெர்க் ஸ்டுடியோஸிலும் படப்பிடிப்பு நடந்தது. ஆகஸ்டு 19, 2007 அன்று நடந்த படப்பிடிப்பில், ஊழியர்கள் பயணம் செய்த வாகனத்தின் பக்கவாட்டு பேனல் முறிந்ததில் பதினோரு பேர் காயமுற்றனர், இதில் ஒருவரை மருத்துவமனையில் அனுமதிப்பதானது. காயமுற்றவர்கள் ஸ்டுடியோ அளித்த இழப்பீட்டை நிராகரித்து, 11 மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாய் கோரினர்.

பெண்டர்பிளாக்கில் வோன் ஸ்டாஃபென்பெர்க் கொல்லப்படும் காட்சியை படமாக்கும் முன்னதாக, “இந்த இடத்திற்கான மரியாதை நிமித்தமும் இங்கு சுடப்பட்டு கொல்லப்பட்ட மனிதர்களின் வாழ்நாள் சாதனைக்கு மரியாதை அளிக்கும் விதத்திலும்” நடிகர் நடிகையர் மற்றும் ஊழியர்களை ஒரு கணம் மவுனம் அனுசரிக்க செய்தார் டாம் க்ரூஸ் என்கிறார் நடிகர் கிறிஸ்டியன் பெர்கெல். இந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், அந்த படச்சுருள் ஜெர்மனியில் உள்ள ஒரு பிராசசிங் நிறுவனத்திற்கு படப்பிடிக்கு பிந்தைய தயாரிப்பு வேலைக்காக டெவலப் செய்ய அனுப்பப்பட்டது. டெவலப் செய்யும் சமயத்தில் எதிர்பாராமல் தவறான ரசாயனம் பயன்படுத்தப்பட்டு படச்சுருள் சேதாரமானது, இதனையடுத்து இக்காட்சிகளை மீண்டும் படமெடுக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரி படக்குழுவினர் விண்ணப்பிக்க நேர்ந்தது. அனுமதி வழங்கப்பட்டது, அத்துடன் இதனால் படத்தின் திட்ட காலமோ அல்லது பட்ஜெட்டோ பாதிக்கப்படவில்லை எனவும் படத்துக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.

சிங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் நியூட்டன் தாமஸ் சிகெல் இருவரும் சேர்ந்து படத்தின் தனித்தனி பாதிகளுக்கு மாறுபட்ட பாணிகளைத் தேர்வு செய்தனர். ஹிட்லரைக் கொலை செய்ய முயற்சி நடக்கையில் கிரேன்கள் போன்ற அழகிய கேமராவேலைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும், இரண்டாவது பாதியில் திட்டம் தீட்டியவர்கள் வேட்டையாடப்படும் சமயத்தில் கைக்கேமரா ஒளிப்பதிவின் மூலம் திகிலூட்டுவதாய் இருக்கும். கதை நகர்வில் படத்தின் நிறங்களும் கூடுதல் செறிவுற்றதாய் ஆகும். நாஜி கொடியின் வண்ணமான சிவப்பு அவர்களது சித்தாந்தத்தின் வன்முறையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாய் கருதிய சிகெல் அந்நிறத்தை அதிகமாய் பயன்படுத்தினார். 1940களின் த்ரில்லர்களையும் இவா ப்ரவுன் எடுத்த இல்லத் திரைப்படங்களையும் முன்மாதிரியாய் எடுத்துக் கொண்டு சிங்கர் படம்பிடித்தார். இரவில் காட்சிகளைப் படம்பிடிப்பது சிரமமானதாய் இருந்தது ஏனென்றால் சகாப்தத்தின் வரலாற்று துல்லியத்தை சரியாக வழங்க வேண்டுமென்றால் பிளாக்அவுட்கள் அவசியமாய் இருந்தது. யதார்த்தத்தில் பெண்டர்பிளாக்கில் சுடுவோருக்கு சரியாகக் குறி வைப்பதற்கும் சதிகாரர்களை சுடுவதற்கும் கார் ஹெட்லைட்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை சிகெல் கவனித்தார். 1:85 என்கிற விகிதத்தில் படம்பிடிக்க சிங்கர் முடிவு செய்தார். படப்பிடிப்பு ஜெர்மனியில் நடைபெற்றதால், ஸெய்ஸ் லென்ஸ்கள் உடனான ஆர்ரிஃப்ளெக்ஸ் கேமராக்களை இயக்குநர் பயன்படுத்தினார்.

படத்துவக்கமாய் வரும் துனிசியா யுத்தக் காட்சிகள் தான் படம்பிடிக்கப்பட்ட கடைசி பெரிய காட்சி வரிசையாகும். இந்த யுத்தகளத்தில் தனக்கு நேர்ந்த காயங்கள் தான் வோன் ஸ்டாஃபென்பெர்கிற்கு ஹிட்லரை கொல்வதற்கான விருப்பத்தைக் கொண்டுவந்தது என்பதான தோற்றத்தை தவிர்க்க பட உருவாக்குநர்கள் விரும்பினர். அக்டோபர் 2007 இல் அவர்கள் ஒரு முரட்டு வெட்டு தொகுப்பு முறையை பயன்படுத்தினர், அந்த காலத்திற்கும் ஜூன் 2008 க்கும் இடையே, அந்த யுத்த காட்சிகள் இல்லாமல் பல்வேறு சோதனைத் திரையிடல்கள் நிகழ்ந்தன. ஜூன் 2008 வாக்கில், அந்த சண்டை காட்சியை படம்பிடிக்கையில் பாத்திரங்களை எவ்வாறு பொருத்தமாய் ஃபிரேம் செய்வது என்பதை தாங்கள் அறிந்து கொண்டிருந்ததாக படக்குழுவினர் கருதினர். படப்பிடிப்பு தளங்களை தெரிவு செய்ய ஜோர்டான் மற்றும் ஸ்பெயினில் சிங்கர் தேடுதல் வேட்டை நடத்தினார், ஆயினும் இந்த தளங்கள் அழகியல் மற்றும் பொருளாதார தகுதிவகைகளைப் பூர்த்தி செய்யவில்லை. துனிசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இறுதியாய் கலிபோர்னியாவில் உள்ள தி கௌகர் படெஸ் பாலைவனம் தெரிவு செய்யப்பட்டது. வோன் ஸ்டாஃபென்பெர்கின் காயங்கள் உண்மையாய்த் தோன்றும் வகையில் விஷுவல் எஃபெக்ட்ஸ்க்காக தயாரிப்பு செலவு மதிப்பீடு சீர்படுத்திக் கொள்ளப்பட்ட அதே சமயத்தில், முழுமையாய் கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட போர் விமானங்களுக்கு அதிகமாய் ஒதுக்கீடு செய்ய இயலாமல் போனது. அதற்குப் பதிலாய் பி-40 வார்ஹாக்ஸ் விமானங்களை இந்த யுத்த காட்சிகளில் பயன்படுத்தினார் சிங்கர். ஜெர்மனியில் படப்பிடிப்பு நடந்தது; செட்டுகள் மறுபடியும் கட்டப்பட்டது; படப்பிடிப்பு நாட்கள் இழப்பு ஆகிய காரணங்களால் படப்பிடிப்பு சமயத்தில் பட்ஜெட் அதிகரித்தது; ஆனால் ஜெர்மனி அரசின் வரிச் சலுகைகள் வளர்ச்சியை திடப்படுத்தின. தனது இறுதி தயாரிப்பு பட்ஜெட் 75 மில்லியன் டாலர்கள் என ஸ்டுடியோ தெரிவித்தது. ஆனால் போட்டி ஸ்டுடியோக்கள் இந்த மதிப்பு 90 மில்லியன் டாலருக்கு நெருக்கமாய் இருக்கலாம் என நம்பின.

விஷூவல் எஃபெக்ட்ஸ்[தொகு]

இந்த படத்திற்கான விஷூவல் எஃபெக்ட்ஸ் சோனி பிக்சர்ஸ் இமேஜ்ஒர்க்ஸ் நிறுவனத்தால் செய்யப்பட்டதாகும், இந்நிறுவனம் ப்ரையன் சிங்கர் உடன் சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தது. வோன் ஸ்டாஃபென்பெர்கின் காயங்களை தத்ரூபமாய் காட்டுவதும் பெர்லினுக்கு 1943 ஆம் ஆண்டு காலகட்ட தோற்றத்தை அளிப்பதும் தான் VFX நிறுவனத்தின் முக்கிய இரு இலக்குகளாய் இருந்தது. பல வெடிப்புகள் மற்றும் சண்டைகள் எல்லாம் உண்மையாக எடுக்கப்பட்ட நிலையில், கணினி வேலைகளில் பெரும்பான்மையானவை வோன் ஸ்டாஃபென்பெர்கின் காயங்களைக் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன. க்ரூஸின் கையின் ஒரு டிஜிட்டல் வடிவம் வடிவமைக்கப்பட்டு, இழந்த விரல்களை அதில் அழிக்கும் பொருட்டு, VFX ஊழியர்கள் அந்த டிஜிட்டல் கையின் ஒவ்வொரு அசைவிலும் ரோடோஸ்கோப் செய்து அதனைப் பதிவு செய்தனர். விரல்களை இழந்த நிலையில் வோன் ஸ்டாஃபென்பெர்கின் பல குளோஸ்-அப்கள் எடுக்கப்பட்ட பின், இந்த காயங்கள் உண்மையான வடுக்களைப் போல் தோன்றும் வகையில் இழைமம் கொடுக்கப்பட்டன. விஷூவல் எஃபெக்ட்ஸ்க்கு எளிதாக அமையும் வகையில் எப்படி தான் கைகளை அசைக்க முடியும் என்பதில் க்ரூஸ் ஆலோசனை பெற்றுக் கொண்டார். ஆயினும் தானே உடைமாற்றிக் கொள்வது போன்ற சில சவால்களில் இருந்து அவர் தப்பிக்கவியலாது போனது. “வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து காண்கையில் தனது காயங்களை மறைப்பதற்கு முயன்று வோன் ஸ்டாஃபென்பெர்க் தனது கைகளை ஆடைப்பைக்குள் மறைத்துக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் அறிவோம்” என்று VFX மேற்பார்வையாளர் ரிச் ஹூவர் தெரிவித்தார்.

வட ஆப்பிரிக்காவில் நடந்த யுத்த காட்சிகளுக்கு, இரண்டு உண்மையான பி-40 வார்ஹாக் விமானங்களும் அவற்றின் பிரதிகள் அல்லது கம்ப்யூட்டர் வரைகலையில் உருவான விமானங்களும் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டன. ஹிட்லரின் பவேரிய இல்லமான பெர்கோஃபின் வெளிப்பகுதி டிஜிட்டல்முறையில் உருவாக்கப்பட்டது. ஏனெனில் உண்மைக் கட்டிடத்தில் கொஞ்சம் தான் எஞ்சியிருந்தது. பெர்லினிலேயே கூட, படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில் வார இறுதி நாட்களில் மின் கம்பங்களையும் நவீன வெளிச்ச வசதிகளையும் நீக்கி விடுவது அடுத்த வாரம் துவங்குகையில் அவற்றை மீண்டும் இட்டுக் கொள்வது ஆகியவை மூலம் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்கான தேவையைக் குறைக்க நகரவை அதிகாரிகளும் உதவினர்.

படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை[தொகு]

ப்ரையன் சிங்கர் உடன் தனது முந்தைய வேலைகளான தி யூஸ்வல் சஸ்பெக்ட்ஸ் , சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் மற்றும் X2 படங்களில் போலவே படத்தொகுப்பு கலைஞரும் இசைத் தொகுப்பாளருமான ஜான் ஓட்மேன் இந்த படத்தை தற்காலிக இசை இல்லாமலேயே எடிட் செய்தார், இசை இல்லாமலேயே படம் நன்றாக அமைகிறது என்றால், அது ஒரு வலிமையான படைப்பாக மாறுகிறது என்பது அவரது கருத்து. தி கிரேட் எஸ்கேப் (1963), வேர் ஈகிள்ஸ் டேர் (1968), பாட்டன் (1970), மற்றும் மிட்வே (1976) ஆகிய இரண்டாம் உலகப் போர் தொடர்பான முந்தைய திரைப்படங்களை வால்கிரி முன்மாதிரியாய் கொண்டிருந்தது என்பதால், பாத்திரங்களையும் அவர்களின் பங்களிப்புகளையும் அறிமுகப்படுத்தும் பெயர் அட்டைகள் உடனான ஒரு கட் இடம்பெற்றிருந்தது. இந்த கட் அமெரிக்க பார்வையாளர்களிடையே திரையிடப்பட்ட போது, பின்பற்றுவதற்கு சிரமமாய் ஏராளமான பாத்திரங்கள் உள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த பெயர் அட்டைகள் அகற்றப்பட்டன.

உரையாடல் காட்சிகளில் இருந்து பதட்டத்தை உருவாக்குவது தான் வால்கிரி யில் சவாலான விஷயமாக இருந்தது என்பதால் அதனைச் செய்வதற்கு, மொத்த காட்சிகளையும் வெட்டுவதை விட அங்கங்கு சில தருணங்களை மட்டும் வெட்டும் பாணியை கையாண்டு காட்சிகளை மறுவடிவமைத்ததாக ஓட்மேன் தெரிவித்தார். வரலாற்றுரீதியாக துல்லியமாக இருக்க வேண்டும் என்பதால், காட்சிகளை மறுஒழுங்கமைப்பதில் ஓட்மேனுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன, ஆயினும் எந்த கோடுகள் அல்லது குளோஸ்-அப்களில் அவர் கவனம் செலுத்தலாம் என்பதை தெரிவு செய்ய அவரால் முடிந்தது. வோன் ஸ்டாஃபென்பெர்க் தன் மனைவியுடன் நடனமாடும் காட்சியை நீக்குகையில் தான் மிகவும் சோகமுற்றதாக ஓட்மேன் தெரிவித்தார். ஏனென்றால் அந்த காட்சிக்கு பின்னணி இசை அமைக்க அவர் ஆர்வமாய் இருந்தார்.

ஆரம்பத்தில் வால்கிரிக்கு குறைந்தபட்ச பின்னணி இசை வழங்கவே ஓட்மேன் திட்டமிட்டிருந்தார். ஆனால் படம் வசனம் மிகுதியாய் இருந்தாலும் கூட, அதற்கு ஒரு பரபரப்பான சூழலைக் கொண்டுவர இசை அவசியமாய் இருந்தது என்பதை அவர் கண்டு கொண்டார். புதிய அணுகுமுறை குறித்து ஓட்மேன் விவரித்தார்: “ரொம்பவும் யூஸ்வல் சஸ்பெக்ட்ஸ் போல் தான் இருந்தது - ஏராளமாய் உரையாடல் இருக்கும் காட்சியில் பதட்டத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமாயின் பின்னணி இசையைத் தான் நாம் ரொம்பவும் நம்பியாக வேண்டும். எனினும் படத்துக்கான இசை ஒரு வகை பரபரப்பூட்டும் வகையில், படத்தோடு ஒன்றிய வகையில் செய்யப்பட்டுள்ளது. ரொம்பவும் வெளிப்பட்ட இசையாக இருக்காது, படம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு துடிப்பு போல் இருக்கும்." காட்சிகளைக் காணுகையில் வேகம் அதிகரிக்கும் இடங்களில் எல்லாம் “கிளிக் சத்தம் துவங்குகிற” ஒரு கற்பனையான கிளிக் சாதனத்தை சிங்கர் பயன்படுத்தினார். தனது படத்திற்கென ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் இசையை சிங்கர் விரும்பினார், அது “தி விண்ட்ஸ் ஆஃப் வார் ” வகை இசையைக் காட்டிலும் நவீனப்பட்டதாய் ஓட்மேன் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். பரபரப்பு இசை தொகுப்பதில் இன்னுமொரு சவாலாக, பட முடிவில் நிகழும் சோகத்திற்கேற்ற வகையில் பின்னணி இசை “மெதுவாய் தளர” வேண்டியிருந்தது. நிறைவுற்ற பின்னணி இசையில் சில தாளக் கருவிகள் மற்றும் சில பிராஸ்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் எந்த ஸ்னேர் டிரம்கள் அல்லது ட்ரம்பெட்களும் பயன்படுத்தப்படவில்லை. இந்த மரபுகளை சிங்கரும் ஓட்மேனும் தவிர்த்து விட்டனர்.

வட ஆப்பிரிக்க யுத்தக் காட்சி படம் பிடிக்கப்படுவதற்கு முன்னரே அதற்கான இசையை ஓட்மேன் தொகுக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் திரைப்பட இசையை பதிவு செய்ய முன்பதிவு செய்வது கடினமானதாய் இருந்தது. காட்சியமைப்பின் அடிப்படையில் இசையமைப்பது ஏற்ற இறக்கமான காட்சித்துண்டுகளை உருவாக்கி விடுகிறது என்பதை அவர் கண்டாலும், அந்த காட்சி வரிசைக்கு இசை பொருந்தியிருப்பதாய் அவர் உணர்ந்தார். படத்தின் நிறைவு வரிகளான, “தே’ல் ரிமெம்பர் யூ” ஒரிஜினல் தொகுப்பு ஆகும், ஆயினும் பாடல் வரிகள் ஜெர்மன் கவிஞரான ஜோஹான் வூல்ஃப்கேங் வோன் கோயதெ எழுதிய வாண்டரர்’ஸ் நைட்சாங் என்னும் கவிதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

படத்தயாரிப்புக்கு ஜெர்மானியர்களின் மறுமொழி[தொகு]

ஜூன் 2007 இல், படத் தயாரிப்புக்கு முன்னதாக, ஜெர்மன் அதிகாரிகளால் ஒரு அபாயகரமான மரபாக கருதப்படும் சைண்டாலஜி தத்துவத்தை பின்பற்றும் டாம் க்ரூஸ் கதாநாயகன் கர்னல் க்ளாஸ் வோன் ஸ்டாஃபென்பெர்க் பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தால் நாட்டின் ராணுவ தலங்களில் வால்கிரி படப்பிடிப்பு அனுமதிக்கப்படாது என்று ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். அந்த சமயத்தில் வால்கிரி படத்தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக முறையான படப்பிடிப்பு கோரிக்கைகள் எதுவும் அமைச்சகத்திற்கு வரவில்லை என்பதையும் செய்தித் தொடர்பாளர் கூடுதலாய் சுட்டிக் காட்டினார். கர்னல் வோன் ஸ்டாஃபென்பெர்கின் மகனும் தனது தந்தை பாத்திரத்தில் க்ரூஸ் நடிப்பதற்கு கவலை தெரிவித்தார், படம் தயாரிப்பதை தான் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் க்ரூஸ் அந்த பாத்திரத்தை ஏற்கமாட்டார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த பட உருவாக்கத்தில் இருந்து மலிவான ஒன்று தான் வெளியில் வரும் என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயம் இந்த படைப்பு அபத்தமாகத் தான் இருக்கும்” என்று பெர்தோல்ட் மரியா ஸ்கெங்க் கிராஃப் வோன் ஸ்டாஃபென்பெர்க் தெரிவித்தார். "என்னுடைய தந்தை விஷயத்தை இழுக்காமல் க்ரூஸ் விலக வேண்டும்." அந்த மாதத்தின் பிற்பகுதியில், அமைச்சகம் தனது நிலைப்பாட்டை திருப்பிக் கொண்டு வால்கிரி தயாரிக்கப்படுவதை வரவேற்றது. ஆரம்ப சர்ச்சை ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினரான அண்ட்ஜெ ப்ளுமெந்தால் துவக்கி வைத்ததாக கூறப்படுகிறது, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் மரபுகளுக்கான பொறுப்பு மனிதராகவும் சைண்டாலஜியின் பிரபல எதிர்ப்பாளராகவும் இருக்கும் இவர், படப்பிடிப்பு இந்நாட்டில் நடைபெறாது என்கிற உறுதியை ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் தன்னிடம் வழங்கியிருப்பதாக கூறினார். மேலும் பாடென்-வுர்டெம்பெர்க் மாநிலத்தில் உள்துறை விவகார மாநில செயலராக இருக்கும் ருடோல்ஃப் கோபெர்லி போன்ற இளைய அரசியல்வாதிகளிடம் இருந்தும் க்ரூஸ் தாக்குதலை சந்தித்தார், சைண்டாலஜி உடன் க்ரூஸ் தொடர்புபட்டிருந்ததையே அவர்களும் காரணமாய் கூறினர். ஜெர்மன் புரொட்டெஸ்டன்ட் திருச்சபையின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான தாமஸ் கண்டோ, இப்படத்தில் க்ரூஸ் ஈடுபாடு காட்டுவது, “நாஜிக்களுக்கு 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் செய்த அதே பரப்புரை அனுகூலங்களை சைண்டாலஜிக்கு வழங்கும்” என்று கூறியதோடு க்ரூஸை நாஜியின் பரப்புரை அமைச்சரான ஜோசப் கோயபல்ஸ் உடன் ஒப்பிட்டார்.

அதன் பின் இப்படம் ஜெர்மனியில் உள்ளூர் ஆதரவை வென்றது. க்ரூஸ் நடிப்பது ஒரு புறக்கணிக்கப்பட்ட கதையின் மீது விழிப்புணர்வை ஊக்குவிக்கும் என்று இயக்குநர் ஃப்ளோரியன் ஹெங்கெல் வோன் டோனர்ஸ்மார்க் கண்டார், அத்துடன் பழம்பெரும் ஜெர்மன் நடிகரான அர்மின் முயலர்-ஸ்டாஹ்லும் தனது ஆதரவை இப்படத் தயாரிப்புக்கு நல்கினார். இப்படத்தில் ஒரு உதவியாளராகத் தோன்றிய கர்னல் வோன் ஸ்டாஃபென்பெர்கின் பேரன் ஒருவர் க்ரூஸின் தொழில் அர்ப்பணிப்பை புகழ்ந்ததோடு தனது குடும்பத்தில் அநேகம் பேர் நிறைவடைந்த தயாரிப்பைக் காண ஆவலாய் இருப்பதாகவும் கூறினார். செப்டம்பர் 2007 இல், ஆரம்பத்தில் பாதுகாப்பு அமைச்சகம் பெண்டர்பிளாக்கில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்த போது, இந்த படத்திற்கு ஜெர்மன் செய்தித்தாள் கட்டுரையாளர்களும் திரைப்பட படைப்பாளிகளும் ஆதரவுக் கரம் நீட்டினர், இயக்குநர் வூல்ஃப்கேங் பீட்டர்சன் மற்றும் Frankfurter Allgemeine Zeitung செய்தித்தாளின் செய்தியாளரும் இணை வெளியீட்டாளருமான பிராங்க் ஸ்கிர்மேகர் ஆகியோர் இதில் அடக்கம். படப்பிடிப்பு தளத்திற்கு பார்வையிட்ட ஸ்கிர்மேகர் இந்த படம் ஜெர்மன் எதிர்ப்படை குறித்த உலகளாவிய விழிப்புணர்வை முன்னெடுக்கும் என்பதை ஒப்புக் கொண்டார். கதையமைப்பை திறனாய்வு செய்த பிறகு பெண்டர்பிளாக்கிற்கு இறுதியாய் அனுமதி வழங்கிய பாதுகாப்பு அமைச்சகம், “காட்டுமிராண்டித்தனம் வெற்றி பெறவில்லை ஆனால் அது ஒரு ஜனநாயக ஜெர்மனி ஸ்தாபிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது” என்பதை இது எடுத்துக்காட்டுவதாக கூறியது. சைண்டாலஜியை கண்காணிக்கும் ஜெர்மானிய அரசுப் பொறுப்பில் இருக்கும் ஊர்சுலா கபெர்டா அமைச்சகத்தின் முடிவில் ஏமாற்றமுற்றார், “அரசியல்சட்ட விரோத அமைப்பில் டாம் க்ரூஸ் ஒரு பெரும்புள்ளியாய் இருக்கிறார், அவரை அதே முறையிலேயே அணுகப்பட வேண்டும்” என்றார் அவர்.

பெர்லினில் சைண்டாலஜியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான செபின் வெபெர் ஆகஸ்டு 2007 இல் கூறும்போது, ஜெர்மன் அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் தனக்கு அதிர்ச்சியூட்டியதாக தெரிவித்ததுடன், ஒருவரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் “வேறுபாடு காட்டுவதற்கான அழைப்பு” இது என்றும் தெரிவித்தார். அதே மாதத்தில், தன்னுடைய படத்தை விமர்சிக்கும் முன்னதாக அதனைக் காணும்படி தனது விமர்சகர்களுக்கு க்ரூஸ் ஆலோசனை கூறினார். அக்டோபர் 2007 இல், சக வால்கிரி நடிகரான கென்னெத் பிரனா கூறுகையில் இந்த பிரச்சினை “பெரிய அளவில் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும்” என்றும், ஆரம்பத்தில் புகார்களுக்கு தூண்டிய ஒரு ஜெர்மன் அதிகாரி படப்பிடிப்பு துவங்கும் ஒரு வாரம் முன்னதாக படக்குழுவினரை சந்தித்து, கதையைப் படித்த பின் படக் கதையை தான் தவறாய் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டதாக கூறி மன்னிப்பு கோரினார் எனவும் தெரிவித்தார்.

நவம்பர் 2007 இல், ஜெர்மன் எதிர்ப்படை நினைவிட மைய தலைவர் படத்தின் விளைவாக வோன் ஸ்டாஃபென்பெர்க் குறித்து ”தவறான கருத்து உருவாகும் சாத்தியம்” குறித்து எச்சரித்தார். கர்னலைப் பற்றிய எந்த புரிதலிலும் தனது ராணுவ வாழ்க்கையின் அநேக காலத்தில் நாஜிக்களுக்கு அவர் விசுவாசமாய் இருந்து வந்தவர் என்கிற உண்மையும் புரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதே மாதத்தில் ஜெர்மன் ஊடக நிறுவனமான ஹூபர்ட் பர்டா மீடியா (Hubert Burda Media) “ஹாலிவுட்டில் இதுவரை ஒருபோதும் கவனிக்கப்பட்டிராத ஒரு கதையை கையாண்டதற்காக” க்ரூஸ்க்கு பேம்பி (Bambi) துணிச்சல் விருதினை வழங்கியது.

சந்தைப்படுத்தல்[தொகு]

டாம் க்ரூஸ் மற்றும் பவுலா வேக்னர் இருவரும் பகுதி உரிமையாளர்களாய் இருந்த யுனெடெட் ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவுக்கு பெரும் ஊக்கமளிக்கும் ஒரு உயர் ரக படமாக அமையும் நோக்கத்துடன் வால்கிரி உருவாக்கப்பட்டிருந்தது. க்ரூஸ் நடித்த யுனெடெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் முந்தைய படமான லயன்ஸ் ஃபார் லேம்ப்ஸ் வசூலில் தோல்வியுற்றிருந்தது, ஆலிவர் ஸ்டோனின் பிங்க்வில்லியை தயாரிக்க திட்டமிட்டிருந்ததும் கைவிடப்பட்டதால் வால்கிரி நன்றாய் ஓடியாக வேண்டிய நெருக்கடியில் இருந்தது. இந்த படம் பலமுறை வெளியாகும் தேதி மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் ஆகஸ்டு 8, 2008 இல் வெளியாவதாக இருந்து பின் ஜூன் 27, 2008 என முன்கூட்டி வெளியிட தீர்மானிக்கப்பட்டது. WALL-E மற்றும் வாண்டட் படங்களில் இருந்தான போட்டியைத் தவிர்க்கும் பொருட்டும், வட ஆப்பிரிக்காவின் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு தாமதத்தினாலும் அக்டோபர் 3, 2008 காலத்தில் வெளியிடுவதாய் தீர்மானிக்கப்பட்டது. படத்தின் விருதுகள் வெற்றி சாத்தியத்தை அதிகப்படுத்துவதற்காகவும் உண்மையில் அக்டோபர் தேதி தெரிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 2008 இல், வெளியீட்டு தேதி பிப்ரவரி 13, 2009க்கு தள்ளி வைக்கப்பட்டது. இலையுதிர் கால வெளியீடுகள் துரிதமுற்றதை ஸ்டுடியோ காரணமாகக் கூறியது. அகாதமி விருதுக்கான படங்கள் மிக அதிகமாய் குவிந்திருந்தன. பிரெசிடெண்ட் தின வார இறுதி தேதிகளில் இருந்து தி வூல்ஃப்மேன் மற்றும் தி பிங்க் பாந்தர் 2 ஆகிய படங்கள் மாற்றப்பட்டு விட்ட நிலையில், லாபமிகுந்த அந்த காலத்தை வால்கிரி அனுகூலமாய்ப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஜூலை 2008 இல், யுனெடெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விளம்பர துறை தலைவர் டென்னிஸ் ரைஸ்க்கு பதிலாக மைக்கேல் வோல்மேன் மாற்றப்பட்டார். ”தொடர்ந்த ஊடக பரப்புரைகளால் திணறடிக்கப்பட்டு” ஒரு சந்தைப்படுத்தல் உத்தியை உருவாக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வோல்மேனின் கீழ், ஆகஸ்டு 2008 வாக்கில், படம் வெளியாகும் தேதி டிசம்பர் 26, 2008க்கு மாற்றப்பட்டிருந்தது. வெற்றிகரமான சோதனை திரையிடலுக்குப் பின் வர்த்தக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாய் தகவல்கள் கூறின. (இறுதியாய் இப்படம் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25, 2008 அன்று வெளியிடப்பட்டது.) வெளியீட்டு தேதி டிசம்பர் நிறைவடைவதற்குள் அமைந்தது, இது சந்தா சானலான ஷோடைம் சானலுடன் ஒரு வீடுதோறுமான விநியோகம் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள “முக்கியமாக” உதவியது. அதே ஆகஸ்டு மாதத்தில், படத்தில் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் நடைபெற்று வந்த சமயத்தில், ஸ்டுடியோவில் தனது பொறுப்பில் இருந்து பவுலா வேக்னர் பதவி விலகினார். வால்கிரி யின் மாறிக் கொண்டேயிருந்த வெளியீட்டு தேதி யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்த விமர்சனங்களைக் கொண்டு வந்தது, படம் இறுதியாக வெளியாகும் வரை இருந்து கொண்டிருந்த இந்த விமர்சனத்தை எதிர்கொண்டு போராட ஸ்டுடியோ எண்ணியது. இது தவிர, 2008 ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட முதல் திரையரங்கு டிரெய்லர், வோன் ஸ்டாஃபென்பெர்க் பாத்திரத்தில் க்ரூஸ் அமெரிக்க உச்சரிப்புடன் நடித்திருப்பது குறித்து “கலவையான பேச்சு” எழுந்தது. டிரெய்லர் குறித்து வர்த்தக செய்தித்தாளான வெரைட்டி விவரிக்கையில், “பழைய பிரிட்டிஷ் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு உரையாடல் மேடை நாடகத்தை விற்பது போல் இருந்தது” என்றது. படப்பிடிப்பு சமயத்தில் கர்னல் வோன் ஸ்டாஃபென்பெர்காக டாம் க்ரூஸ் நடித்திருந்த படங்கள் வெளியாகி பரவலான கேலிக்குள்ளானது. ”டாம் க்ரூஸ் கண்ணிழந்த திரைப்படம்” என்பதாய் வால்கிரி தவறாக முத்திரை குத்தப் பெற்றது என ஸ்டுடியோவின் ஒரு விளம்பர ஆலோசகரான டெரி பிரஸ் தெரிவித்தார்.

டிசம்பர் வெளியீட்டு தேதி நெருங்கிய சமயத்தில், யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் படம் குறித்த பொதுமக்கள் கருத்தை திருத்தும் நோக்கில் ஒரு பரப்புரையைத் துவக்கியது, டாம் க்ரூஸ் ஒரு ஜெர்மன் போர் நாயகனாக நடிக்கிறார் என்பதை பிரதானப்படுத்தாமல் அதற்குப் பதிலாய் வால்கிரி ஒரு “கதையம்சம் கொண்ட பரபரப்பூட்டும் மர்மப் படம்” என்பதாய் முன்னெடுத்து செல்லப்பட்டது. தி யூஸ்வல் சஸ்பெக்ட்ஸ் (1995) மற்றும் ஆப்ட் ப்யூபிள் (1998) ஆகிய பரபரப்புத் திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் ப்ரையன் சிங்கரின் மரியாதையை முன்வைத்தும் புதிய பரப்புரை நடத்தப்பட்டது. படத்திற்கான விருதுகள் பரப்புரையைக் கைவிட டெரி பிரஸ் வலியுறுத்தினார்; ஆலோசகரின் கருத்துடன் க்ரூஸ் உடன்பட்டார். ஆனால் இந்த முடிவு சிங்கருக்கு ஏமாற்றமளித்தது. அதற்குப் பதிலாய் டிசம்பரின் பிற்பகுதியில் போட்டி மிகுந்த ஒரு கால அட்டவணை நேரத்தில் பார்வையாளர்களைக் கவர்வதில் ஸ்டுடியோ கவனத்தைக் குவித்தது. பார்வையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்களுடன் வால்கிரியின் நம்பகத்தன்மையை புதுப்பிக்க இரண்டாவதாய் ஒரு திரையரங்கு டிரெய்லரும் ஒரு புதிய சுவரொட்டியும் அக்டோபர் 2008 இல் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. புதிய சுவரொட்டியில் பளிச்சிடும் கிராபிக்ஸ்கள் இடம் பெற்றிருந்ததோடு, தி கிரேட் எஸ்கேப் (1963) மற்றும் தி டர்ட்டி டஜன் (1967) ஆகிய போர்த் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் ஒரு குழு பாத்திரங்கள் மைய காட்சியாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த குழு விஷயம் ஸ்டுடியோ இலக்காகக் கொண்டிருந்த பார்வையாளர் குழுக்களிடையே செய்த சந்தை ஆராய்ச்சியில் இருந்து வந்ததாகும், அவர்கள் க்ரூஸை “பிரச்சினையைத் தீர்க்க புறப்படும் ஒரு குழுவிற்கு தலைமை தாங்கும் ஒரு பாத்திரமாக” காணவே விரும்பினர் என்பதை அந்த ஆய்வு சுட்டிக் காட்டியது. புதிய டிரெய்லர் அதிரடிக்கு அழுத்தம் கொடுத்தது, இது முதல் ட்ரெய்லரில் இருந்து ஒரு மேம்பட்ட வடிவமாக பரவலாய் கருதப்பட்டது. ஆன்லைன் ரசிகர்களிடையே முந்தைய டிரெய்லரைக் காட்டிலும் புதிய டிரெய்லருக்கு “குறிப்பிடத்தக்க அளவுக்கு” சாதகமான வரவேற்பு அதிகரித்திருப்பதாக நிறுவனத்திற்குள்ளான MGM சுற்றறிக்கை ஒன்று தெரிவித்தது. ஸ்டுடியோ இரண்டு பார்வையாளர் துண்டுகளை இலக்கு கொண்டது: 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அதே போல் இளம் ஆண்கள். படத்தை தயாரிக்க 75 மில்லியன் டாலர் செலவானது என்றும், விளம்பரத்திற்கு 60 மில்லியன் டாலர் செலவிடப்பட்டது என்றும் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் கூறியதையடுத்து, ஸ்டுடியோ கடும் நிதி அழுத்தத்தில் இருந்தது. படத்தின் விநியோகஸ்தரான மெட்ரோ-கோல்ட்வின்-மயேரின் விடாமுயற்சி மற்றும் ஒரு சூப்பர்ஸ்டாராக க்ரூஸின் உறுதி ஆகியவற்றையும் இந்த படம் சோதிக்கும் ஒன்றாக அமைந்தது.

வெளியீடு[தொகு]

திரையரங்கு ஓட்டம்[தொகு]

டிசம்பர் 2008 இல் வால்கிரி ' வெளியிடப்படும் முன்னதாக, படம் நாஜி விவகாரத்தை கையாளுவதாய் இருந்ததாலும், தி பாய் இன் தி ஸ்ட்ரைப்டு பைஜாமாஸ் , தி ரீடர் , டீஃபையன்ஸ் மற்றும் குட் ஆகிய தொடர்புடைய படங்களின் போட்டியாலும் விடுமுறை பருவத்தில் படம் எத்தகைய வரவேற்பை பெறும் என்பது குறித்த கவலை எழுந்தது. 2008 பொருளாதார நெருக்கடி சமயத்தில் தி அட்வர்டைசிங் ஏஜ் எழுதியது: “பொருளாதாரத்தின் மந்தமான நிலையும் அமெரிக்க இளைஞர்களிடையே யூதப் படுகொலை குறித்த புரிதல் மிகக் குறைந்த அளவினதாய் இருப்பதும் இத்தகையதொரு வரலாறு செறிந்த படத்திற்கு கடினமான பாதையைக் காட்டுகின்றன."

அமெரிக்காவிலும் கனடாவிலும் டிசம்பர் 25, 2008 அன்று 2,711 திரையரங்குகளில் வால்கிரி படம் வெளியானது. துவக்க நாளில் இந்த படம் 8.5 மில்லியன் டாலர் வசூல் செய்தது. விடுமுறை வார இறுதி நாட்கள் நான்கில், வால்கிரி சுமார் 30 மில்லியன் டாலர் வசூல் செய்து, சராசரியாய் தியேட்டருக்கு 7,942 டாலர் வசூலுடன் வசூலில் நான்காவது இடத்தில் அமர்ந்த படமானது. வாரஇறுதி ஓட்டம் குறித்து வெரைட்டி யின் பமீலா மெக்கிளிண்டாக், “யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் MGMக்கான ஒரு வெற்றி” என்று எழுதினார்; ராட்டன் டொமேடோஸின் கிதேஷ் பந்த்யா இந்த வசூல் ஸ்டுடியோவுக்கு ஒரு “பெரும் வெற்றியை” குறிப்பதாய் கூறினார். பார்வையாளர்களில் 55% பேர் ஆண்கள் என்றும் 66% பேர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் ஸ்டுடியோ ஆய்வு தெரிவித்தது. பாக்ஸ்-ஆபிஸ் புள்ளிவிவர அமைப்பான மீடியா பை நம்பர்ஸின் தலைவரான பால் டெர்கெராபீடியன் கூறுகையில், “வார இறுதி வசூல் இந்த படத்தை தோல்விப் படமாக்க முயன்றவர்களின் ஆருடங்களை மொத்தமாய் பொய்யாக்கியிருக்கிறது” என்றார், முந்தைய கோடையில் ட்ராபிக் தண்டர் படத்தில் க்ரூஸின் நடிப்பு பார்வையாளர்களை மீண்டும் அவரை நோக்கி இழுக்கச் செய்ய உதவியிருக்கின்றன என்று அவர் நம்பினார். வால்கிரி யை ஒரு த்ரில்லர் படமாக ஸ்டுடியோ விளம்பரம் செய்ததும் படம் எதிர்பார்த்ததை விட அதிகமாய் வசூல் செய்வதற்கு ஒரு காரணம் என்று டெர்கெராபீடியன் தெரிவித்தார். க்ரூஸ் 20 மில்லியன் டாலர் சம்பளத்தையும் 20% பின்முனை முறையில் (படம் முடிந்த பிறகு சேகரமாகும் வருவாய்) பெறுவதாலும் MGM/UA முதலீடு 60 மில்லியன் டாலர் என்பதாக கூறப்பட்டதாலும், போட்ட பணத்தை திரும்ப எடுக்க பல்வேறு வெளிநாட்டு பிராந்தியங்களுக்கும் யுனெடெட் ஆர்டிஸ்ட்ஸ் இந்த படத்தை விற்றனர்.

ஐரோப்பிய அறிமுகத் திரையிடல் பெர்லினின் போட்ஸ்டேமெர் பிளாட்ஸில் ஜனவரி 20, 2009 அன்று நடந்தது. ஜனவரி 23, 2009 வார இறுதியில் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு வெளியே டஜனுக்கும் அதிகமான பிராந்தியங்களில் வால்கிரி வர்த்தகரீதியாக வெளியிடப்பட்டது, ஜனவரி 22 அன்று ஜெர்மனியில் நடந்த அறிமுகமும் இதில் அடக்கம். சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் முதலிட வரிசை பெற்ற இப்படம், 13 மில்லியன் டாலருக்கும் அதிகமாய் வசூல் செய்தது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மற்றும் ஹாலந்தில் இது முதலிடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து, ஆஸ்திரியா மற்றும் தென் கொரியாவில் இரண்டாமிடம் பிடித்தது. வால்கிரி அதிக வசூல் செய்த இடம் ஜெர்மனி. இங்கு 689 இடங்களில் திரையிடப்பட்டு, சராசரியாய் திரைக்கு 5,311 டாலர் வசூல் செய்து 3.7 மில்லியன் டாலர் வசூல் பெற்றுத் தந்தது. ஜெர்மனி வெளியீடு “வரிசையில் முதலிடம் என்றாலும் அற்புதமானதாக அமையவில்லை” எனக் கருதப்பட்டது, மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளியான ட்விலைட் பட வசூலை லேசாகக் கடந்திருந்தது, அவ்வளவு தான். ஜெர்மன் மக்களிடையே ஜெர்மன் எதிர்ப்படை குறித்த விவாதத்தை இந்த படத்தின் அறிமுகக் காட்சி புதுப்பித்திருப்பதாய் பிபிசி நியூஸ் தெரிவித்தது.

ஜனவரி 30 வார இறுதியில், ரஷ்யா மற்றும் ஸ்பெயின் உட்பட 13 கூடுதல் பிராந்தியங்களில் படம் வெளியிடப்பட்டது. 26 சந்தைகளில் 3,600 திரையிடல்களுடன், தொடர்ந்து இரண்டாவது வார இறுதியிலும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் முதலிடத்தை தக்க வைத்து 18.6 மில்லியன் டாலர் வசூல் செய்தது. மிக அதிக வசூலாய் 2.8 மில்லியன் டாலர்களுடன் ஸ்பெயின் முதலிடத்தையும், அதனையடுத்து 2.3 மில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி அடுத்த இடத்தையும், 2 மில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்து மூன்றாம் இடத்தையும், 1.9 மில்லியன் டாலர்களுடன் இத்தாலி நான்காம் இடத்தையும் பிடித்தன. ஏப்ரல் 13, 2009 நிலவரப்படி, அமெரிக்கா மற்றும் கனடாவில் இப்படம் 83,079,000 டாலரும், உலகளவில் மற்ற பிராந்தியங்களில் சுமார் 200,276,784 டாலரும் வசூல் செய்திருந்தது.

சைண்டாலஜி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்[தொகு]

On the crowded sidewalk of a street at night, a person in a red jacket attempts to hold up a sign, and a woman in a black jacket and wearing a gray scarf and hat reaches up to grab the sign.
லண்டன் அறிமுகக் காட்சியில் "Tom Cruise Cult Hero" (”டாம் க்ரூஸ் விநோத நம்பிக்கை நாயகர்”) என்கிற பதாகை தாங்கிய பெண்ணை எதிர்கொள்ளும் அடையாளம் தெரியாத ஒரு பெண் அவரிடம் இருந்து அந்த பதாகையை பறிக்க முயற்சிக்கிறார்.

டிசம்பர் 15, 2008 நியூயார்க் நகரில் வால்கிரி ப்ரீமியர் நடந்த போது, லிங்கன் சதுக்க அரங்கில் நடைபெறுவதற்குப் பதிலாய் டைம் வார்னர் மையத்தில் உள்ள ஒரு தனியான திரையிடும் அறையில் திரையிடப்பட்டது. ஒரு பகுதி டைம் வார்னர் மையத்தில் குவிந்திருந்த சைண்டாலஜி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வெளிப்பட்டிருப்பதைக் குறைக்கும் பொருட்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. டிசம்பர் 18 லாஸ் ஏஞ்சல்ஸ் திரையிடல் சமயத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தோன்றினர், அங்கு க்ரூஸ் ஒரு சுரங்கப் பாதை வழியே உள்ளே செல்ல வேண்டியதானது. அமெரிக்க “சிவப்பு கம்பளம்” மூடிய அறைக்குள் நிகழ்த்தப்பட்டது, தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தனது ரசிகர்களுடன் க்ரூஸ் உரையாடினார். பெர்லினில் நடந்த ஐரோப்பிய அறிமுகத் திரையிடல் சமயத்திலும் சைண்டாலஜி எதிர்ப்பாளர்களின் சிறு கூட்டம் இருந்தது, அங்கு க்ரூஸ் ஒரு ஆர்ப்பாட்டக்காரரின் கை பாக்ஸ் (Guy Fawkes) முகமூடியில் கையெழுத்திட்டார். லண்டன் ப்ரீமியரிலும் கூட சைண்டாலஜி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன, கூட்டத்தில் இருந்த சைண்டாலஜிஸ்டுகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினர். ஜனவரி 26, மாஸ்கோ ப்ரீமியர் குறித்து NTV செய்திக் குறிப்பு தெரிவிக்கும்போது, சைண்டாலஜி குறித்து கேள்விகள் கேட்கக் கூடாது, அவர்களது கேள்விகள் தணிக்கை செய்யப்படும் என்ற நிபந்தனை ஆவணத்தில் செய்தியாளர்கள் கையெழுத்திட நேர்ந்தது என்றும், இது குறித்து ஒரு செய்தியாளர் ”ஆபரேஷன் வால்கிரி யில் குறிப்பிடப்படும் அந்த வரலாற்று காலகட்டங்கள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை” என்று கருத்து கூறியதாகவும் தெரிவித்தது.

ஜெர்மனியில், இப்படம் வெற்றி பெற்றால், அது நாட்டில் சைண்டாலஜிக்கு ஊக்கமளிக்கும் என்று அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கவலை தெரிவித்தனர். சைண்டாலஜி “எதேச்சாதிகார இலக்குகளை” பின்பற்றுவதாக கூறிய ஜெர்மன் அரசியல்வாதி மைக்கேல் பிராண்ட் தனது ஆதரவாளர்கள் வால்கிரி யை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். நாட்டில் சைண்டாலஜியின் இருப்பை கண்காணிக்கும் அமைப்பான ஜெர்மனியின் அரசியல்சட்ட பாதுகாப்பு முகமை (BfV) படத்தின் பாதிப்பு குறித்து கவலை வெளியிட்டது. பெயர் கூறாத BfV அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறினார்: “இந்த சைண்டாலஜிஸ்டுகள் ஜெர்மனியில் இரண்டு இலக்குகளைக் கொண்டிருக்கிறார்கள்...தங்களது செய்தியை குழந்தைகளிடம் கொண்டுபோக வேண்டும், தங்களது அமைப்பை மரியாதைக்குரியதாய் ஆக்க வேண்டும். இந்த படம் அந்த இரண்டையும் செய்கிறது: ஜெர்மன் வரலாறு குறித்த ஒரு தேசிய விவாதத்தின் மையத்தில் இந்த படம் ஒரு முன்னணி சைண்டாலஜிஸ்டை நடுநாயகமாய் அமர்த்தியிருக்கிறது."

விமர்சனரீதியான வரவேற்பு[தொகு]

திரைப்பட இணையதளமான ராட்டன் டொமடோஸ், 171 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்ந்ததில் 61% விமர்சகர்கள் படத்திற்கு நேர்மறை விமர்சனம் அளித்திருந்தனர் என்று கூறி, சராசரி மதிப்பெண்களாக படம் 6.0/10 பெற்றதாகக் கூறியது. ஒப்பிடுதலின்படி, மெட்டாகிரிட்டிக்கில், முக்கியமான விமர்சனங்களில் 100க்கு மதிப்பிட்ட தரநிலையில், இப்படத்திற்கு சராசரி மதிப்பாக 56 வழங்கப்பட்டுள்ளது. இது 39 விமர்சனங்களில் இருந்து தருவித்ததாகும். அமெரிக்காவில் இத்திரைப்படம் விமர்சகர்களிடம் இருந்து கலவையான வரவேற்பைப் பெற்றது. ஜெர்மனியில், வால்கிரி க்கு கிட்டிய வரவேற்பு குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தன. தி நியூயார்க் டைம்ஸ் எழுதியது: “ஒரு சமயத்தில் சந்தேகக் கண்ணுடன் பார்த்த ஜெர்மனியில், இப்போது அளவிட்ட இதமான ஒரு வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.” சைண்டாலஜி தத்துவத்துடன் க்ரூஸ் ஈடுபாட்டின் மீதான சர்ச்சைகளையும் கடந்து “ஆரம்ப விமர்சனங்கள் நேர்மறையாய் உள்ளன, பலரும் இப்போது க்ரூஸை புகழ்வதோடு இப்படம் வெளிநாடுகளில் நாட்டின் மீதான பார்வையை இன்னும் மேம்படுத்தும் எனக் கூறுகின்றனர்” என்று வர்த்தக இதழான வெரைட்டி தெரிவித்தது. படமும் நடிகர்களும் புகழப்பட்டனர் என்றாலும் “ஸ்டாபென்பெர்க் தனது திட்ட சகாக்களை ஈர்க்க முடிந்த ஒரு ஈர்ப்பினை வெளிப்படுத்துவதில் க்ரூஸின் ஆச்சரியகரமான தணிந்த நடிப்பு தோல்வியுற்றதாக” ஜெர்மனியின் விமர்சகர்களால் க்ரூஸ் வறுத்தெடுக்கப்பட்டார் என்று டெர் ஸ்பிகெல் கூறியது. வோன் ஸ்டாஃபென்பெர்க் பாத்திரத்தை ”டாம் க்ரூஸ் சித்தரித்த விதம் குறித்து” ஜெர்மன் விமர்சகர்கள் அதிருப்தியுற்றார்கள், ஆயினும் “தேச நாயகர் ஒருவருக்கு ஹாலிவுட் அணுகுமுறை” கிட்டியதையொட்டி ஆறுதலுற்றனர் என்று AFPயும் தெரிவித்தது.

அமெரிக்க விமர்சகர்கள்[தொகு]

“தனது முகத்தையும் ஆர்வத்தையும் தவிர வேறெதுவும் அவசியப்படாத ஒரு படத்தில் க்ரூஸ் ஒரு சிறந்த, தனித்துவ திறம்பட்ட ஒரு நடிப்பை” வழங்கியிருக்கிறார், ஆனால் வோன் ஸ்டாஃபென்பெர்க் பாத்திரம் ஒரு பரபரப்பூட்டும் படத்தில் போதுமான அளவு சித்தரிக்க மிகவும் சிக்கலான ஒன்றாகும் என்று நியூயார்க் டைம்ஸ் விமர்சகர் மனோலா டர்கிஸ் கருதினார். இயக்குநரின் மிகைகள் குறித்தும் டர்கிஸ் எழுதினார், “சிங்கரின் பழமைப்பட்ட திரைப்பட வழக்கங்கள், படிமத்தின் அழகு, ஒளி மற்றும் கவர்ச்சி மீது அவரது கவனம் இவையெல்லாம் மனதுக்கு இதமளிப்பதை ஒத்துக் கொள்ளலாம் என்றாலும் எல்லா இடங்களிலும் அலங்காரத்திற்கு அவர் மெனக்கெட்டிருக்கிறார்” என்று கூறும் அவர் ஹிட்லருக்கும் வோன் ஸ்டாஃபென்பெர்க்கிற்கும் இடையிலான சந்திப்பு சமயத்தில் வரும் “அருவமான இசை” மற்றும் “லோ கேமரா கோணங்களை” இதற்கொரு உதாரணமாய் கூறுகிறார். சிகாகோ சன்-டைம்ஸ் நாளிதழின் ரோஜர் எபெர்ட்டும் “நாயகனாக க்ரூஸ் அசத்தும் வகையில் இல்லாவிட்டாலும், மிகச் சிறப்பாய் திருப்தியளிக்கும் வகையில் நடித்திருக்கிறார்” என்கிறார். ஆபத்தை கண்டு பீதியடையாத “பதவியின் பழம் தளபதிகளுக்கு” பொருந்தும் வகையில் சித்தரிப்பு இருந்ததாய் அவர் கூறுகிறார்; “இந்த திட்டத்தில் பங்கேற்ற பெருந்தலைகளை, அவர்களை தனித்தனியாக அறிமுகப்படுத்துவதோடு, அவர்களது பங்களிப்புகளையும் அவர்களுக்கு இடையில் இருந்த வேறுபாடுகளையும் குறிப்புகளில் கூறுவதிலும் துணிச்சலாய் சிங்கர் செயல்பட்டிருக்கிறார்” என்று எபெர்ட் பாராட்டுகிறார்.

பாஸ்டன் குளோப் இதழின் டி பர் இந்த படத்தை குறித்து இவ்வாறு விவரித்தார்: “இது ஒரு தெளிவான, பார்க்க தூண்டுகிற, ஏறக்குறைய சஸ்பென்ஸ் உடனான ஒரு படமாக இருக்கிறது....அத்துடன் ஹாலிவுட் காலகட்ட படங்களில் சற்று பொருண்மைகுறைந்த படமாகவும் கூறலாம். இரண்டாம் உலகப் போர் குறித்த ஒரு அதிரடி-குணச்சித்திர திரைப்படம்.” க்ரூஸின் நடிப்பை பர் ஆய்வு செய்கிறார்: ”...அவரது க்ளாஸ் வோன் ஸ்டாஃபென்பெர்க் வரலாற்றின் பக்கங்களில் இருந்து முழுமையாக எழுப்பிப் பார்ப்பதற்கு ரொம்பவும் மெலிதாய் இருக்கக் கூடிய ஒரு மரியாதைக்குரிய கருத்தாக்கமாக இருக்கிறது. இந்த கதை சொல்லப்படுவதற்கு தகுதியான ஒன்று தான், ஆனால் என்ன காரணத்தாலோ நாயகர் கண்டிப்பானதொரு நீஷேவாத பொருள்புரிதலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.” வோன் ஸ்டாஃபென்பெர்க் பாத்திரத்தில் க்ரூஸ் நடிப்பு “திருப்தியளிப்பதாக இல்லை, மிகை திடம் காட்டுவதாய் இருக்கிறது” என்று யுஎஸ்ஏ டுடே யின் கிளாடியா ப்யுக் கருதினார். படத் துவக்கம் மந்தமாய் இருப்பதோடு “அதிரடி காட்சிகள் சமயத்திலும், காட்சிரீதியாக மென்மையாய் தயாரித்திருப்பது அதிகமாய் கவரவில்லை” என்று அவர் கருதினார். படத்தின் ஒட்டுமொத்த வேகம் குறித்து அவர் இவ்வாறு முடிவு கூறினார்: “படத்தின் இரண்டாவது பாதியில் அதிரடி காட்சிகள் சற்று கூடுதல் கவர்வதாய் ஆகின்றன, ஆனாலும் படத்தின் வம்சாவளியை வைத்துப் பார்த்தால், ஒருவர் இன்னும் ஆழத்தையும் நுட்பத்தையும் எதிர்பார்க்கிறார்.” தி நியூயார்க்கர் இதழின் அந்தோணி லேன் எழுதினார்: “[க்ரூஸ்] படத்தை சுமக்கிறார், ஆயினும் அந்த சீருடைக்கு கீழ் தோண்டி நீங்கள் பார்த்தால், அவர் கையாளுவதற்கு அதிகமாய் விஷயம் இல்லை; அவர் நடிப்பில் ஸ்டாஃபென்பெர்க் மீதான அவரது மதிப்பு இருக்கிறதே தவிர, அவர் யார் என்பதில் இல்லை”. பழம்பெரும் பிரிட்டிஷ் நடிகர்களிடையே பாத்திரத்திற்கேற்ற நடிப்பு ”மிதமிஞ்சி” விடுவதாய் லேன் கருதினார், நை, ஸ்டாம்ப், மற்றும் வில்கின்சன் பாத்திர நடிப்பு பற்றி கூறுகையில், “இந்த மனிதர்கள் யுத்தத்தில் மரத்துப் போன நாஜி அதிகாரிகளாக இருக்க வேண்டும் என்று பார்த்தால், நாம் காண்பதோ மைல்ட் நியூரோசிஸ் குறித்த சுவாரஸ்யமான ஆய்வுகளின் ஒரு தொகுப்பினைத் தான்.”

வெரைட்டி இதழின் டோட் மெக்கார்தி எழுதுகையில், வால்கிரி “காட்சி சிறப்புகளை ஏராளமாய் கொண்டிருக்கிறது, ஆயினும் தேவையான பதட்டம் மற்றும் மர்மத்தில் உறுதிப்படுத்தும் வேலை ஆகியவை போதாமல் இருக்கிறது” என்றார். வோன் ஸ்டாஃபென்பெர்க் பாத்திரத்தில் “சற்று கடுமை அதிகமாய் இருந்தாலும் சரியாய் பொருந்துபவராகவே” க்ரூஸ் இருப்பதாக மெக்கார்தி கருதினார். மெக்குவெரியின் ஸ்கிரிப்ட் நன்கு செதுக்கப்பட்டிருந்தது என்றாலும் தோற்றுப் போகப் போகிறது என நன்கறிந்த ஒரு சதித்திட்டம் பற்றிய நிகழ்வுகளை சுருக்கமாய் வரிசையாய் கூடுதல் பரபரப்புடன் வழங்கக் கூடிய “செதுக்கிய உரையாடல்கள் இல்லை மற்றும் பாத்திரங்களின் தனித்தன்மை” விளக்கப்படுவதிலும் பற்றாக்குறையாய் தோன்றுவதாக இந்த விமர்சகர் நம்பினார். ”இந்த மனிதர்களுக்கு உரிய சுவாரஸ்யமான தனிநபர் மற்றும் அரசியல் தனித்துவங்கள்” விளக்கமாய் காட்டப்படாததால் பல விஷயங்களை தவற விட்டதாக மெக்கார்தி உணர்ந்தார். லில்லி கில்வெர்ட் மற்றும் பேட்ரிக் லம்பின் தயாரிப்பு வடிவமைப்பு தனித்து நிற்பதாகவும், நியூட்டன் தாமஸ் சிகெலின் ஒளிப்பதிவு “கட்டுப்பாடான அழகுடன்” இருந்ததாகவும், அத்துடன் ஜான் ஓட்மேன் படத்தொகுப்பு மற்றும் இசைத்தொகுப்பு ஆகிய இரட்டைப் பணிகளையும் சிறப்பாக செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜெர்மன் விமர்சகர்கள்[தொகு]

படத்தின் தரம் குறித்த மாறுபாடுகள் இருந்தபோதிலும், வோன் ஸ்டாஃபென்பெர்க் குறித்து கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பதில் அனைத்து விமர்சகர்களும் உடன்பட்டனர். ”ஒரு வரலாற்று பாடம் மற்றும் ஒரு படம் ஆகிய இரண்டு வகையிலும்” இது பாராட்டப் பெற்றது. பொது சேவை ஜெர்மன் தொலைக்காட்சி சானலான ZDF “வால்கிரி அவதூறான அளவுக்கு மோசமானதும் அல்ல, அல்லது நூற்றாண்டின் உன்னதமான பதிவும் அல்ல.... அல்லது நாம் அஞ்சிய அதிரடி பரபரப்புப் படமும் அல்ல. நன்கு உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு செறிவான படம்” என்று வர்ணித்தது." “ஜெர்மன் எதிர்ப் படை குறித்த மாயை ஹாலிவுட் வடிகட்டி வழியே வடிகட்டித் தரப்படும் என்கிற எந்த அச்சமும் தவறானது மற்றும் கண்ணோட்டம் பிறழ்ந்ததாய்” நிரூபணம் ஆகியிருப்பதாக Kölner Stadt-Anzeiger செய்தித்தாள் தெரிவித்தது."

ஜெர்மன் போர் நாயகனாக டாம் க்ரூஸ் “தேறவில்லை” என்று மற்ற விமர்சகர்கள் உறுதிபடத் தெரிவித்தனர். Der Tagesspiegel க்கு எழுதிய விமர்சகர் எழுதினார்: “ஒரு நடிகராய் க்ரூஸின் படிமம் வால்கிரி படத்தில் நாசமாகி விட்டிருக்கிறது...முழுப் பொழுதுபோக்கு திரைப்படமாகும் தைரியம் இப்படத்திற்கு இல்லாத அதே சமயத்தில் கருத்துரீதியான செம்மையும் எதுவுமில்லை”. க்ரூஸின் நடிப்பு குறித்து Die Welt பத்திரிகையின் ஹான்ஸ்-ஜியோர்க் ரோடக் கூறுகிறார்: "மரியாதைக்காக மூர்க்கத்துடனும் திறனுடனும் போரிடும் ஒரு அமெரிக்க கதாநாயகனாக அவர் சிறப்பாய் செய்கிறார். ஆனால் ஸ்டாஃபென்பெர்க் எதேச்சாதிகார நிலைப்பாட்டுத் தன்மை கொண்ட ஒரு ஜெர்மன் நாயகன், அதனை க்ரூஸ் சுமக்க முடியவில்லை.” Frankfurter Allgemeine Sonntagszeitung நாளிதழ் கூறுகையில், க்ரூஸின் நடிப்பு “நம்பும்படியாய்” இருக்கிறது என்று கூறியதோடு, ஒரிஜினல் பதிப்பைக் காட்டிலும் படத்தின் ஜெர்மன் மொழி மொழிமாற்றுப் பதிப்பு அங்கீகாரமுற்று விளங்குவதைத் தனியாய்ப் பாராட்டியது.

விருதுகள் மற்றும் மரியாதைகள்[தொகு]

அகாதமி ஆஃப் சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஃபேன்டஸி & ஹாரர் ஃபிலிம்ஸ் மூலம் சிறந்த அதிரடி/சாகசம்/பரபரப்புத் திரைப்படம், சிறந்த நடிகர் (டாம் க்ரூஸ்), சிறந்த துணை நடிகர் (பில் நை), சிறந்த துணை நடிகை (கேரைஸ் வேன் ஹூடன்), சிறந்த இயக்குநர் (ப்ரையன் சிங்கர்), சிறந்த இசை (ஜான் ஓட்மேன்), மற்றும் சிறந்த காஸ்ட்யூம் (ஜோனா ஜான்ஸ்டன் உள்ளிட்ட பல சாடர்ன் விருதுகளுக்கு (Saturn Awards) வால்கிரி பரிந்துரை செய்யப்பட்டது.

வரலாற்று நுணுக்கம்[தொகு]

ஜெர்மன் உளவு அமைப்பான கெஸ்டபோ ஜூலை 20 சதி குறித்து முழுமையாக ஆய்வு செய்தது. எனவே வால்கிரி தயாரிப்பில் “ஹாலிவுட் காரணிகளுடனான” வரலாற்று கணக்கை ஒருங்கிணைத்த சமயத்தில் படக்குழுவினருக்கு அதிக ஆவணமாக்கலுக்கு அணுகல் இருந்தது. மெக்கில் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக இருப்பவரும், ஜெர்மன் எதிர்ப் படையில் ஒரு முன்னணி அதிகாரியாக திகழ்ந்தவருமான பீட்டர் ஹாஃப்மேன் இப்படக்குழுவினருக்கு ஆலோசகராய் இருந்தார். படத்தின் துல்லியம் குறித்து ஹோஃப்மேன் கூறுகையில், “வால்கிரி ஸ்டாஃபென்பெர்க் மற்றும் அவரது சக சதிக் குழுவினர் குறித்த துல்லியமான அடிப்படை கொண்ட சித்திரத்தை வழங்குகிறது. சுதந்திரங்களாக கருதப்பட வேண்டிய சில விவரங்களும் இருக்கின்றன. ஆனால், அடிப்படையாக, இந்த படம் கண்ணியமானது, மரியாதைக்குரியது, சதியின் அதே லட்சிய நோக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது." படத்தின் துல்லியம் குறித்து ஸ்காட்ஸ்மேன் இவ்வாறு தெரிவித்தது: “வால்கிரி ....நாஜி ஆட்சியை கவிழ்க்க முயன்று தோற்ற சதித் திட்டத்தின் கதையை ஓரளவு நெருக்கமான முறையில் விவரிக்கிறது...உண்மையில் இருந்ததை விட இச்சதி வெற்றிக்கு மிக அருகில் வந்தது போல் சொல்லப்படுகிறது. ஆனாலும் அடிப்படை உண்மைகள் அனைத்தும் இருக்கின்றன, சரியாகவும் உள்ளன.”

படத்தில் வோன் ஸ்டாஃபென்பெர்க் ரிச்சர்டு வேக்னரின் “ரைடு ஆஃப் தி வால்கிரிஸ்” கேட்பதாக கூறப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் கர்னல் வேக்னரை வெறுத்தார். இது தவிர, வோன் ஸ்டாஃபென்பெர்கின் மூத்த சகோதரரான பெர்தோல்டும் படத்தில் இல்லை. வோன் ஸ்டாஃபென்பெர்கின் பாத்திரத்தை உருவாக்குகையில், போதைப் பழக்கத்தை தவிர்க்க மோர்பின் எடுத்துக் கொள்ள கர்னல் மறுத்தது போன்ற அவரது “ஆஜானுபாகுவான” தருணங்களை ப்ரையன் சிங்கர் நோக்கத்துடன் அகற்றி விட்டார். இந்த அகற்றங்களை அவர் விளக்கும்போது, “சில விஷயங்களை நான் விட்டதற்கு காரணம் மக்கள் அதனை நாங்கள் வேண்டுமென்று செய்வதாய் நினைப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்....”நோ மார்பின்!” என்று டாம் க்ரூஸ் கூறுவதை கற்பனை பண்ணிப் பாருங்கள். நாங்கள் புத்திசாலித்தனத்துடன் சூழ்ச்சி செய்வதாக பலர் நினைப்பார்கள்." படத்தில், வோன் ஹேஃப்டன் வோன் ஸ்டாஃபென்பெர்குக்கு முன்னால் சுடும் வட்டத்திற்குள் வந்து நிற்பதாக வருகிறது, ஆனால் அந்த காட்சியை கண்ணால் கண்ட சாட்சியம் மற்றும் புகைப்படங்கள் கொண்டு மறுகட்டமைக்க படைப்பாளிகள் முயன்றபோது, வோன் ஹேஃப்டனைக் கொன்ற அந்த துப்பாக்கி சூட்டிலேயே வோன் ஸ்டாஃபென்பெர்கும் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்றும், அவர் உண்மையில் அடுத்த கொஞ்ச நேரத்தில் சுடப்பட்டார் என்றும் தெரியவந்தது. இன்னுமொரு மாற்றம் படத்தில் கெவின் மெக்நேலி நடித்திருந்த கார்ல் ஃபிரடரிக் கோர்டெலரின் சித்தரிப்பில் இருந்தது. கோர்டெலர் உண்மையில் “கூடுதலான மனச்சாட்சியுடனான பாத்திரம்” என படைப்பாளிகள் கருதியிருந்தாலும், படத்தில் அவர் குரோதமுடையவராகவும், சதிக் குழுவுக்குள் நிலவிய உரசல் மற்றும் மோதல்களை அதிரடியாய் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் காட்டப்பட்டார்.

சதிக்குழுவில் ஒருவர் குறித்த தி சாங் பிஃபோர் இட் இஸ் சங் என்னும் புத்தகத்தை எழுதிய ஜஸ்டின் கார்ட்ரைட் என்னும் பிரிட்டிஷ் நாவலாசிரியர் எழுதுகையில், “இந்த படம் கதைக்கருவின் உண்மைகளுக்கு அநேக நேர்மையாய் இருக்கிறது. ஆனாலும் அப்போது ஜெர்மானியர்கள் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்த துன்பியல் வகை தார்மீக மற்றும் அரசியல் சூழலின் எந்த ஒரு தன்மையையும் வெளிப்படுத்த படம் தவறி விடுகிறது” என்றார். நாஜிக்கள் மீதான மயக்கத்தில் இருந்து விடுபட்டிருந்த வோன் ஸ்டாஃபென்பெர்கின் உறவினரான நிகோலாஸ் கிராஃப் வோன் உக்ஸ்குல்-கிலென்பாண்ட் மூலம் தான் வோன் ஸ்டாஃபென்பெர்கும் இச்சதியில் பங்குபெறுவதற்கான ஊக்கம் பிறந்தது, இது படத்தில் விவரிக்கப்படவில்லை. வோன் ஸ்டாஃபென்பெர்கின் தத்துவம் மற்றும் பின்புலத்தையும் படம் ஆராயவில்லை, அது ஜெர்மன் மரபுவழியான Dichter und Helden க்கு (”கவிஞர்களும் நாயகர்களும்”) பொருத்தமாய் இருந்ததாக கார்ட்ரைட் உணர்ந்தார். வோன் ஸ்டாஃபென்பெர்க் எவ்வாறு இந்த சதித் திட்டத்திற்கு பொருத்தமுற்ற தலைவராய் இருந்தார் என்பதை கார்ட்ரைட் விவரித்தார்: “வீர ஜெர்மனி, புனித ஜெர்மனி, கவித்துவ ஜெர்மனி, மூடக்கருத்துகள் மற்றும் ஆசைகளின் ஜெர்மனி என ஏறக்குறைய புதிரானதாய் இருந்த ஜெர்மானிய கடந்த கால உடையை பிழையில்லாமல் தாங்கியிருந்த மனிதர் அவர்.” க்ரூஸின் சித்தரிப்பு “தொந்தரவளிக்கும் வீரர்” ஒருவரைப் போன்று இருந்ததாக இந்த நாவலாசிரியர் கருதினார். சதி வெற்றி பெற்றிருந்தால் என்னவிதமான ஜெர்மனியை வோன் ஸ்டாஃபென்பெர்க் மனதில் தாங்கியிருந்தார் என்பது குறித்த கேள்வியை இப்படம் எழுப்பவில்லை என்பதையும் கார்ட்ரைட் சுட்டிக் காட்டினார்.

குறிப்புதவிகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்கிரி_(திரைப்படம்)&oldid=3519721" இலிருந்து மீள்விக்கப்பட்டது