வார்ப்புரு பேச்சு:முதல் கட்டுரையும் தொகுப்பும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் கட்டுரையை எழுதுகிறவரைத் தொடர்ந்து எழுதச் செய்ய எப்படித் தூண்டலாம்? மேற்கொண்டு எழுத என்னென்ன குறிப்புகள் உதவியாக இருக்கும்? இது தொடர்பான கருத்துகள் தேவை. நன்றி--இரவி (பேச்சு) 08:37, 3 பெப்ரவரி 2013 (UTC)

இந்த வார்ப்புருவில் உள்ள செய்தி மாற்றப்பட வேண்டும். செய்தியில் தமிழ் 18வது இடத்திலும், கட்டுரைகள் 60 வது இடத்திலும் என்ற செய்தி தேவையற்றது. இது போட்டி உணர்வைத் தூண்டுகிறது. இச்செய்திப் படிப் பார்த்தால், தமிழ் விக்கிப்பீடியாவும் 18வது இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று கூறுவதுபோல் தோன்றுகிறது. இச்செய்தி இருக்கட்டும் ஆனால் வேறு வகையில் (அதிகம் பேசப்படும் மொழிகளுள் ஒன்றான... என்பதுபோல்) இருக்க வேண்டும். மேலும், இந்த வார்ப்புரு நன்முறையில் இருக்கலாம். தமிழில் அறிவியலை வளர்க்க உதவுங்கள், தமிழ் விக்கி இலவச கலைக்களஞ்சியம், மொழிக்கு வளர்ச்சி அதன் தொடர்ச்சியில் உள்ளது, கட்டுரைகள் எழுதுங்கள் போன்றவாறு செய்திகள் இருத்தல் நலம். நாம் போட்டி மனப்பான்மையுடன் இருந்தாலும், நம் நோக்கு தமிழ் விக்கி வளர வேண்டும் என்பதாகும். புதியவர்களும் அறிவுச்செல்வத்தைப் பெருக்கும் நோக்கிலேயே பாடுபட வேண்டும். சொல்ல வந்ததை குழப்பிவிட்டேன் போலும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:27, 4 மார்ச் 2013 (UTC)