வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றம் வேண்டும்[தொகு]

@பயனர்:Aswn பொதுவாக நாம் 'தொகு' என்ற சொல்லை இடைமுகத்தில் பயன்படுத்துகிறோம். இவ்வார்ப்புருவில் 'திருத்து' என வருகிறது. 'விக்கித்தரவில் திருத்து. காண்க : சிப்ரா குகா-முகர்ஜீ எங்கு மாற்ற வேண்டும்? உழவன் (உரை) 04:07, 19 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

மேலும், ஒரு ஐயம் வார்ப்புருவில் தெரியும் படத்திற்குரிய படவுரையை எப்படி எழுத வேண்டும்? காண்க: வித்யாவதி உழவன் (உரை) 04:24, 19 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
[1] Y ஆயிற்று ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 01:56, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
'தொகு'வைக் கண்டேன். நன்றி. மேலும்,
இவ்வார்ப்புருவில் படத்தினை இணைக்கும் போது, அப்படத்தின் குறிப்பினை இட வசதி(a parameter) வேண்டும்.
எடுத்துக்காட்டாக, வித்யாவதி என்ற கட்டுரையின் வார்ப்புரு படத்தின் குறிப்பை, அப்படத்தின் கீழேயே இட வேண்டும். படக்குறிப்பு:' வித்யாவதியை, உயர்புகழ் பெண்மணியாக, பன்னாட்டு மகளிர் நாள் விழாவில் 2017 மார்ச் 8 இல் பாராட்டினர்.' உழவன் (உரை) 02:09, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
வணக்கம்@Info-farmer விக்கித்தரவில் Image (P18) அறிக்கைக்கு குவாலிஃபயராக media legend (P2096) தமிழில் சேர்க்க வேண்டும். எ-கா: d:Q7243#P18 உருசிய மொழியில் இருக்கும் பட விளக்கம். இதன் மூலம் விக்கித்தரவில் தமிழ் தரவுகள் மேம்படும். அதே போன்று தகவல் பெட்டியில் படவிளக்க தகவல் தோன்றும். நன்றி! ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 02:22, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
  • வழிகாட்டலுக்கு நன்றி. "media legend" என்ற கீற்றை (srting) "படிமக்கூற்று" எனத்தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன். ஏனெனில், ஏற்கனவே விக்கி இடைமுகத்தில் படிமம் (.jpg, .webm, .pdf(for any file)) என்ற சொல்லை பலவற்றிக்கு பயன்படுத்துகின்றனர். அப்படவுரையை இணைக்கும் உத்தி முதலில் புரியவில்லை. ஏனெனில், "ta" என்பதற்கான இடுபெட்டியைத் தேடினேன். பிறகு அது தானாக தோன்றி மறையும் நுட்பத்தினைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். மேற்கூறிய கட்டுரையில் படவிளக்கம், இப்பொழுது தெரிகிறது.
  • qualifier என்பதை 'அடை' (சொற்குவை இணையம்) எனலாம். தேனடை என்பது போல. ஏனெனில், அதில் பல நுட்பங்கள் அடைந்துள்ளது. ஏற்கனவே, அடைவு(folder) என்ற சொல்லை நாம் பயன்படுத்துவதால், இது பொருந்தும் என்றே எண்ணுகிறேன். தேவையெனில் மாற்றிக் கொள்ளலாம்.
  • ஒரு விடுகதைக்கு விடை கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சி. இதற்குரிய திரைநிகழ்பதிவை (screencast) செய்தளிப்பேன். அழைத்தவுடன், வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி.
  • மேலும் ஒரு ஐயம். மேற்கோள் உரலி, அதனை பார்வையிட்ட நாள் ஆகியவற்றை இணைத்துள்ளேன். இவ்விரண்டும் இங்கு தெரியாதா? காண்க: d:Q21598391
உழவன் (உரை) 08:13, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
தெரியவில்லை தெரிந்து கொண்டோ அல்லது நுட்பத்தை கொண்டுவந்த பதிலளிக்கிறேன் (புரிதல் தவறு)ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 09:26, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
//மேற்கோள் உரலி// தெரிகிறது ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 11:46, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
நான் வித்யாவதி கட்டுரையை, மீதிநீக்கம்/மாசுநீக்கம்(purge) செய்து, மீண்டும் பார்த்தேன். என்னால் விக்கித்தரவின்மேற்கோள் உரலியை காண இயலவில்லையே? உழவன் (உரை) 15:16, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
2017 மார்ச் 8 இல் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் நாள் விழாவில், 'உயர்புகழ் பெண்மணி' என வித்யாவதி பெருமை பெற்றார்.[1]
பிறப்புஐதராபாத்து
படித்த இடங்கள்
வேலை வழங்குபவர்
வணக்கம் @Info-farmer, ஒரு சில மாதங்களுக்கு பிறகு பதிலளிப்பதற்கு மன்னிக்கவும், இது குறித்தும் வேறு சில விடயங்கள் குறித்தும் ஆராய்ந்து கொண்டு இருந்தேன். எனது புரிதல் சரியானது எனில் கீழ்கண்ட தகவல் பெட்டகம் போல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். விக்கிப்பீடியாகளில் அதிகமாக பட விளக்கங்களில் மேற்கோள்கள் சேர்ப்பதில்லை என்று எண்ணுகிறேன், மேலும் விக்கித்தரவில் படங்களின் மேற்கோள்களில் தானியங்கிகள் சேர்க்கும்போது ஆங்கில விக்கியை ஆதாரமாக இடும். இதை நாம் வார்ப்புருவில் கொண்டு வரும் போது சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று எண்ணுகிறேன். நீங்கள் கூறுவது போல சில இடங்களில் இது தேவைப்படும் அது போன்ற இடங்களில் கைமுறையில் (Manually) நாம் இட்டுக் கொள்ளலாம் எ-கா:{{infobox person/Wikidata|fetchwikidata=ALL|dateformat=dmy|noicon=on|caption=2017 மார்ச் 8 இல் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் நாள் விழாவில், 'உயர்புகழ் பெண்மணி' என வித்யாவதி பெருமை பெற்றார்.<ref>{{cite web|https://archive.siasat.com/news/international-womens-day-march-8-ts-govt-honour-eminent-women-1145130/|title=International Women’s Day on March 8—TS Govt to Honour Eminent Women}}</ref>}}. மேற்கோளாக சில இடங்களில் நம்மால் பயன்படுத்த முடியும் எ-கா: d:Template:Taxobox இதில் அடையாள காட்டியிலேயே (Identifiers) மேற்கோளாக கொண்டுள்ளன, இதில் பெரும்பான்மையான நேரங்களில் சிக்கல்கள் ஏற்படாது. நான் கூறுவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 15:16, 24 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── // சில மாதங்களுக்கு பிறகு பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்,// என்றெல்லாம் தயவுசெய்து கூறாதீர்கள். நுட்பத்தீர்வு என்பது விடுகதை போன்றது என்றே நான் எண்ணுகிறேன். தீர்வு கிடைக்கும் போது ஏற்படும் மனமகிழ்ச்சியே தனி. அதைச்சொற்களால் விவரிக்க இயலவில்லை. மறவாமல் தீர்வு தந்தமைக்கு மிக்க நன்றி. விக்கிப்பீடியா எதிர்காலத்தில், விக்கித்தரவு அடிப்படையில் en:Abstract Wikipedia ஆக மாறுவதற்கான அடிப்படைக் கட்டகங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதற்கான ஒரு முன்னெடுப்பை அளித்தமைக்கு மிக்க நன்றி. நான்/நாங்கள் உருவாக்கும் தாவரவியல் குறுங்கட்டுரைகளை, அந்த நோக்கத்திலேயே தொடங்கியுள்ளோம். இனி பகுப்பு:தாவரவியலாளர்கள் என்பதும் படிப்படியாக வளரும்.

  1. "International Women's Day on March 8—TS Govt to Honour Eminent Women".