வான் கடலியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வான் கடலியல் (Astrooceanography) என்பது பூமி என்ற கிரகத்திற்கு வெளியே இருக்கும் கடல்களைப்பற்றி படிக்கின்ற அறிவியல் துறையாகும். வான் உயிரியல், வான் வேதியியல் மற்றும் வான் நிலவியல் முதலான பிற கிரக அறிவியல் துறைகளைப் போல அல்லாமல், சனி கோளின் டைட்டன் துணைக்கோளிலும்[1] வியாழன் கோளின் கனிமீடு துணைக்கோளிலும் [2] நிலப்பரப்புக்குக் கீழே கடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் வான் கடலியல் என்ற அறிவியல் துறை தோற்றம் கண்டது. மேலும் பயணத்திட்டங்கள் நிகழ்ந்து இந்நிலவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும் வரை வான் கடலியல் துறை தொடர்பான ஊகங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். சூரியக் குடும்பத்தில் உள்ள வான் பொருட்கள் தொடர்பாக ஏராளமான கோட்பாடுகள் நம்மிடம் உள்ளன. நெப்டியூன் கோளில் உள்ள கடல் முழுவதும் வைரங்கள் நிரம்பியிருப்பதாகவும், வியாழன் கோளில் உள்ள கடல் முழுவதும் திரவ ஐதரசன் நிரம்பியுள்ளதாகவும் கோட்பாடுகள் கூறுகின்றன[3][4]

வான் கடலியல் துறை, வான் உயிரியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஏனெனில், கடல்களில்தான் எளிய உயிரினங்களும் வாழ்வதற்கேற்ற சாத்தியங்கள் அதிகமுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_கடலியல்&oldid=2747446" இருந்து மீள்விக்கப்பட்டது