வான் இஞ்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வான் இஞ்சென் & வான் இஞ்சென் எளிமையாக வான் இஞ்சென் அல்லது மைசூரின் வான் இஞ்சென் (1900-1999) (Van Ingen & Van Ingen, simply Van Ingen, or Van Ingen of Mysore) என்பது தென் இந்தியாவின் மைசூரில் இருந்த இறந்த விலங்குகளைப் பாடம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது புலி மற்றும் சிறுத்தை ஆகியவற்றை பாடம் செய்யும் கலைக்கு சிறப்பாக அறியப்படுகிறது. பாடம் செய்தல் வரலாற்றில், அறிவியல் முறைப்படி வான் இஞ்சென் தோழிற்சாலையானது தனது 90 ஆண்டு காலத்தில் 43,000 புலிகள் மற்றும் சிறுத்தைகள் ஆகியவற்றின் நினைவு பாடங்களை செய்துள்ளது. வான் இஞ்சென் & வான் இஞ்சென் நிறுவனத்தின் தயாரிப்புகளான பாடம் செய்யப்பட்ட தலை மாட்டி பாடங்கள் (வேட்டைப் பதக்கம்), முழு உடல் பாடங்கள், விலங்கு தோல் விரிப்புகள் போன்றவை உலகம் முழுக்கக் காணப்படுகின்றன.

1972 க்கு முன்வரை இந்தியாவில் வேட்டையாடுதல் அனுமதிக்கப்பட்டிருந்தது. அப்போது செல்வந்தர்கள் பலர் யானை , புலி, சிங்கம் போன்ற காட்டுயிர்களின் தலைகளை பாடம் செய்து டிராபி என்னும் வேட்டைப்பதக்கங்களாக தங்கள் வீட்டுச் சுவர்களில் மாட்டிவைக்க விரும்பினர் அதைச் செய்து கொடுப்பதற்காக வான் இஞ்சென் & வான் இஞ்சென் நிறுவனம் 1890 களில் யூஜீன் வான் இஞ்சென் என்பவரால் நிறுவப்பட்டது. அவருக்குப்பின் அவருடைய மகன்கள் 1999 இல் நிறுவனம் மூடப்படும்வரை அவரின் பணியைத் தொடர்ந்தனர். 1972 இல் இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் வந்த பிறகு வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டக் காரணத்தால் இவர்களுக்கு போதிய வேலை இல்லாத காரணத்தால் நிறுவனம் மூடப்பட்டது.

வான் இஞ்சென் & வான் இஞ்சென், சர்வதேச பிரபுக்களுக்கும், இந்தியாவின் மகாராஜாகளுக்கும் மிக அதிகளவில் பணியாற்றினார். அவர்களது வேட்டை கோப்பைகளான பாடம் செய்யப்பட்ட தலைகள் உலகின் பல இடங்களில் மிகச்சிறந்த அழகுடன் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_இஞ்சென்&oldid=2441273" இருந்து மீள்விக்கப்பட்டது