உள்ளடக்கத்துக்குச் செல்

வாடிவாசல் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாடிவாசல்
நூலாசிரியர்சி. சு. செல்லப்பா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைகுறுநாவல்
வெளியீட்டாளர்காலச்சுவடு பப்ளிகேஷன்
பக்கங்கள்70

வாடிவாசல் என்பது குறுநாவல் ஆகும். எழுத்து பத்திரிகையை நடத்திய சி. சு. செல்லப்பா அவர்கள் எழுதியது இந்நூல். மொத்தம் 70 பக்கங்கள் கொண்ட குறுநாவல். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

நாவலைப் பற்றி

[தொகு]

வாடிவாசல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு சி.சு.செல்லாப்பா ஒரு நாவல் எழுதியுள்ளார். வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும்.இவ்வாசலை தாண்டும் முன் காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்துப் பிணைப்புகளையும் அறுத்து விடுவர்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் பயன்படுத்தபடும்.மாடுபிடி வீரர்கள் வாடிவாசலைப் பார்த்த படியே இருப்பர்.ஆனால் சில ஜல்லிக்கட்டில் நிகழ்வுகளில் வாடிவாசல் இல்லாமல் நாலாபக்கங்களிலிருந்தும்

மாடுகளைத் திறந்து விடும் வழக்கமும்உள்ளது.எந்தப் பக்கத்திலிருந்து காளை பாயப் போகிறது என்றே தெரியாது.செல்லாயி அம்மன் கோயில்தான் கதைக்களம். அந்த சல்லிக்கட்டு வாசல்தான் மொத்த நாவலும். இரண்டு இளைஞர்கள் பிச்சி மற்றும் மருதன். சல்லிக்கட்டின் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு வயதானக் கிழவர் மற்றும் ஜமீன்தார். அவர்களின் எண்ண ஓட்டங்கள், கொஞ்சம் பழைய நினைவுகள் என கச்சிதமான நாவல்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடிவாசல்_(புதினம்)&oldid=3834625" இலிருந்து மீள்விக்கப்பட்டது