வாடா (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரமலான் நோன்பு திறப்பிற்காக தயாரிக்கப்பட்ட வாடா!

வாடா என்பது ஓருவகை தீனிப்பண்டமாகும். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே விருப்ப பண்டமாக உள்ளது. அதிராம்பட்டினம், நாகூர் மற்றும் சென்னையில் சில இடங்களிலும், தமிழ் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் துபாய் தேராவிலும் இந்த உணவு கிடைக்கிறது. முஸ்லிம்களின் புனித மாதமான நோன்பு மாதத்தில் நோன்பு திறக்கும் போதும் மற்ற நேரங்களில் அதிக விருப்ப பண்டமாக இது உள்ளது.


தயாரிக்கும் முறை[தொகு]

அரிசியை ஊறவைத்து பாதி அரைத்து கொள்வார்கள். (அரைக்கும்போது சோற்றையும் சில இடங்களில் சேர்த்துக்கொள்கிறார்கள்?). தண்ணீர் அதிகம் ஊற்றுவதில்லை. பின்னர் சமோசாவிற்கு தேவையானது போன்று மசாலாப்பொருட்களுடன் வெங்காயம் சிறிது வெங்காயம் ஊற்றி வதக்கி கொள்கிறார்கள். பின்னர் ஒரு இலையிலோ துணியிலோவைத்து மாவை சிறிது வைத்து தட்டுவார்கள் (மாவு இலகுவாக இருக்கவேண்டும்)பின்னர் ஏற்கெனவே மசாவுடன் வதக்கியதை சிறிது வைத்து பின்னர் அதன்மேல் மாவு வைத்து நடுவில் ஓட்டை போடுவார்கள்.

அதிக ருசி தருவதற்காக வாடாவில் சிறிய இறால்களையும் வைப்பார்கள். இறால் இல்லாமலும் செய்யப்படுகிறது.[1]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-17. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடா_(உணவு)&oldid=3618651" இலிருந்து மீள்விக்கப்பட்டது